Published:Updated:

”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”
பிரீமியம் ஸ்டோரி
”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

தெறிக்கவிடும் எடப்பாடி வியூகம்...

”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

தெறிக்கவிடும் எடப்பாடி வியூகம்...

Published:Updated:
”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”
பிரீமியம் ஸ்டோரி
”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”
”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

‘என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே’ - ஜெயலலிதாவின் இந்த வார்த்தைகளை தமிழக மக்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தல்வரை பிரசாரத்தில் ஜெயலலிதா அடிக்கடி உச்சரித்த வார்த்தைகள் இவை. அந்த ஜெயலலிதாவின் ஆட்சியை இப்போது கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அதையே பின்பற்றத்தொடங்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் முன்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “40 தொகுதிகளிலும் கழகம் வெற்றியைக் குவிக்க எனதருமை வீரம் குன்றா வேலுநாச்சிகளே, தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே, வீரத்திருமகளாம் ஜெயலலிதாவின் பாசறைகளில் பயின்ற எனதருமைச் சகோதரிகளே புறப்படுங்கள். தாய்க்குலத்தைத் தலைநிமிர வாழவைத்த நம் தங்கத்தாரகையின் அ.தி.மு.க அரசுக்கு, எங்கள் தங்கைகளே பலம் என்பதை உலகுக்கு உணர்த்த உடனே களம் இறங்குங்கள்...” என்று பெண்களைக் கவரும் வகையில் தெறிக்கவிட்டிருந்தார் எடப்பாடி. அ.தி.மு.க-வினரிடம் இதுகுறித்துப் பேசினால், “தேர்தல் பிரசாரத்தில் பெண்களை மையப்படுத்தி வியூகம் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார், அண்ணன் எடப்பாடி” என்கிறார்கள்.

“பொதுவாக, ‘எடப்பாடியின் கணக்கு, சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமே...’ என்ற கருத்து பரவலாக உள்ளது. அது உண்மையல்ல. நாங்கள் 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயித்துவிட்டு, தி.மு.க 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவர்கள் சொல்வதை மத்தியில் அமையும் அரசு கேட்கும் நிலை உருவாகும். அது எடப்பாடிக்குத் தெரியாதா? எனவே, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கூடுதல் முக்கியத்துவம் அளித்தாலும், 20 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது வெல்லவேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவுக்கு தேர்தல் நேரத்தில் உதவுவதற்கு குழு ஒன்று செயல்படும். அதே பாலிசியை எடப்பாடியும் கையிலெடுத்துள்ளார். முதல்வர் பிரசாரப் பாதை, அவர் பேசும் இடங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு முதல்வருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்குத் தரப்பட்டுள்ளது. பிரசாரத்தில் யாரையெல்லாம் பயன்படுத்துவது, அ.தி.மு.க ஆட்சிமீது தி.மு.க தரப்பு வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பது உட்பட பிரசார ஏற்பாடுகளுக்கான பொறுப்பு கொள்கைப்பரப்புச் செயலாளர் வைகைச்செல்வனுக்குத் தரப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டு, அதன் பொறுப்பு ஐ.டி விங் பொறுப்பாளரான ராமச்சந்திரனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் பிரசாரத்துக்குச் செல்லும்போது, சட்டரீதியாகவரும் சிக்கல்களைச் சமாளிக்கவும், எதிர்க்கட்சிகளின் முறைகேடுகளை உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குக் கொண்டுசென்று சட்டரீதியாக அணுகவும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தலைமையில் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு குழுக்களும் முழுவீச்சில் களத்தில் உள்ளன” என்கிறார்கள், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்.

”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”
”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, “இந்த முறை எடப்பாடி, ஓ.பி.எஸ் இணைந்து பிரசாரம் செய்வது குறைவாகவே இருக்கும். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ் தலைமையிலும், வடக்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் எடப்பாடி தலைமையிலும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். மோடியின் பிரசாரத்தை தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் நடத்தும்போது, கூட்டணித் தலைவர்களையும் மேடையில் ஏற்றும் திட்டம் உள்ளது. இந்தப் பிரசாரத்தில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாய், அடுத்து கொடுத்த சிறப்பு உதவித் தொகை இரண்டாயிரம் ரூபாய், மத்திய அரசு அறிவித்துள்ள ஆறாயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ‘செலவு விஷயத்தில் கணக்குப் பார்க்க வேண்டாம்’ என்று அமைச்சர்களிடம் எடப்பாடி சொல்லியுள்ளார். ‘கருத்துக்கணிப்புகளைக் கண்டுகொள்ள வேண்டாம். நமது தேர்தல் வியூகமும், கூட்டணிக் கட்சிகளின் வாக்குவிகிதமும் நமக்குப் பலம் சேர்க்கும். கட்சியினரும் நிர்வாகிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே ஆட்சியையும் காப்பாற்றிக்கொண்டு, மத்திய அரசிலும் நம்மால் கோலோச்ச முடியும்’ என எடப்பாடி சொல்லியுள்ளார்” என்றனர்.

கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... மக்கள் மனதுவைக்க வேண்டுமே!

- அ.சையது அபுதாஹிர், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism