Published:Updated:

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...
பிரீமியம் ஸ்டோரி
‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

ஓவியம்: கார்த்திகேயன்மேடி

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

ஓவியம்: கார்த்திகேயன்மேடி

Published:Updated:
‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...
பிரீமியம் ஸ்டோரி
‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...
‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

“அ.தி.மு.க-வின் வெற்றியைக் கருத்தில்கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கிறோம்” என்று கடைசி நேரத்தில் ‘அதிரடி’யாக அறிவித்து... தாய் கழகத்துக்கு தனது அதிரிபுதிரி ஆதரவை அள்ளிக்கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் பேபிம்மா. இதில், எடப்பாடி முகாம் ஒருசேர அதிர்ச்சியிலும் உற்சாகத்திலும் துள்ளிக்குதிக்காதது ஒன்றுதான் பாக்கி. இதுகுறித்து அ.தி.மு.க தொண்டர்களைக் கேட்டால், ஏனோ தெரியவில்லை, குறுகுறுவென முறைக்கிறார்கள். சரி... என்னதான் நடந்தது, நடக்கிறது?

தன் அத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘தமிழ்நாட்டை, அரவணைக்க நான் இருக்கிறேன்’ என அரசியலில் குதித்தார் ஜெ.தீபா. எதிர்பார்ப்பு எகிறியது. தினமும் பகல் 12 மணிவாக்கில் பால்கனியில் நின்று தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்து, ‘தீவிர’ அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இதில் புளகாங்கிதம் அடைந்த தொண்டர்கள் அன்று முதல் இவரை, ‘பேபிம்மா’ என்றே அன்போடு அழைக்கத்தொடங்கினார்கள். அதன்பின்பு ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யை ஆரம்பித்தது, தம்பியுடன் மல்லுக்கட்டியது, கணவருடன் ‘டூ’விட்டது, டிரைவரை கட்சியிலிருந்து நீக்கியது, திரும்பவும் சேர்த்துக்கொண்டது, மீண்டும் நீக்கி... மீண்டும் சேர்த்து... (ஸ்ஸ்ஸ்... யப்பா... முடியலை) என ‘அதி தீவிரவாத’ அரசியலில் பேபிம்மா இறங்க, மிரண்டுப்போனது தமிழகம்.

இந்தநிலையில்தான், மார்ச் 16, 17 தேதிகளில் தனது பேரவை சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கினார் பேபிம்மா. விருப்ப மனுவுடன் தங்கள் தானைத் தலைவியுடன் செல்பி எடுத்துக்கொள்ள அலைமோதியது தொண்டர் கூட்டம். கணவரே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் காத்திருக்க... கடைசிவரை தொண்டர்களுக்கு கதவைத் திறக்கவில்லை பேபிம்மா. இப்படியான சூழலில்தான், மார்ச் 22-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தவர், ‘தன் கட்சி, தேர்தலில் போட்டியிடாது’ என அறிவித்து ஒருசேர தன் தொண்டர்கள் நெஞ்சில் ‘ஆசிட்’டையும், வாக்காளர்கள் நெஞ்சில் பாலையும் வார்த்திருக்கிறார் பேபிம்மா. அடுத்ததாக அவர் சொன்ன விஷயம்தான் அதிரடி... “அ.தி.மு.க-வின் வெற்றியைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்கிறோம்; பிரசாரம் செய்யவும் தயார்’ என்று சொல்லி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் முகாமைக் கலகலக்க வைத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

ம்க்கும்... பிரசாரம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. 2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார் தீபா. அதிகாலையிலிருந்தே வீட்டு வாசலில் தலைவிக்காகக் காத்திருந்தனர் தொண்டர்கள். டிபன் டைம்... டீ டைம்... லஞ்ச் டைம்... ஸ்நாக்ஸ் டைமும் முடிந்தது... கடுப்பில் தொண்டர்கள் ‘தாகசாந்திக்கு’ கிளம்பிய நேரத்தில் இரவு 9 மணிக்கு ‘நிலா வந்தாச்சு...’ என்று வெளியே வந்தார் பேபிம்மா. காரில் ஏறி பிரசாரத்தை தொடங்கியவர், கை ஆட்டிவிட்டு, இரவு 9.45 மணிக்கெல்லாம், ‘ஒரே தூக்கம் தூக்கமா வருது...’ என்று கொட்டாவிவிட்டு பிரசாரத்தை முடித்துக்கொண்டார். தங்கள் தலைவியின் ‘சுறுசுறுப்பை’ப் பார்த்துத் தொண்டர்கள் மிரண்டுப்போன தருணம்அது. திடீரென்று அந்த இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டு, 2017 டிசம்பரில் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதிலும் தலைவிக்காகத் தொண்டர்கள் காத்திருக்க... கடைசி நிமிடத்தில் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார் பேபிம்மா. அந்தத் தேர்தலில், சொத்து ஆவணம் தொடர்பான குளறுபடியைக் காரணம்காட்டி ‘பேபிம்மா’வின் வேட்புமனுவை நிராகரித்து, தொண்டர்களின் நெஞ்சில் இடியை இறக்கியது இரக்கமில்லாத தேர்தல் ஆணையம்!

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

இதோ திரும்பவும் களமிறங்கிவிட்டார் பேபிம்மா! அவரது இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்ன? அவரின் கணவரும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் துணைப் பொதுச் செயலாளருமான மாதவனிடம் பேசினோம். “அ.தி.மு.க தரப்பில் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொண்டனர். அவர்கள் மனம் புண்படக் கூடாது என்றே போட்டியிலிருந்து விலகியிருக்கிறார் தீபா. பிரசாரத்துக்கு செல்லும்படி அ.தி.மு.க கேட்டுக்கொண்டால், தீபா பிரசாரம் மேற்கொள்வார். பதவிக்கோ, பணத்துக்கோ ஒருபோதும் நாங்கள் ஆசைப்பட்டது இல்லை. விருப்பமனு செய்தவர்களின் பணத்தை விரைவில் செட்டில் செய்வோம்” என்றார்.

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

அ.தி.மு.க தரப்பில் பேசினால், “தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு அவர்களுக்கு சக்தி இல்லை. போட்டியிலிருந்து விலக, அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அ.தி.மு.க-வை பயன்படுத்திக்கொண்டனர்” என்றனர் நக்கலாக! எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஜானகிராமன் கூறுகையில், “ஆர்.கே.நகரில் அவரைப் பிரசாரத்துக்கு அழைத்துச்செல்வதற்குள் எங்களுக்கு தாவு தீர்ந்துவிட்டது. தொண்டர்களை ஏமாற்றி பணம் பறிப்பது மட்டுமே அவரது நோக்கம். இப்போதுகூட, விருப்பமனுவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வசூலித்துள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பி அளிப்பாரா?” என்று போட்டுத்தாக்கினார்.

வடிவேலு பாணியில் ‘வான்டட்’டாக எடப்பாடியின் வண்டியில் ஏறியிருக்கிறார் தீபா. வண்டி பஞ்சர் ஆகாமல் இருந்தால் சரி!

- ந.பொன்குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism