“நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல பேசத் தெரியாது. அவரைப்போல மொழி ஆளுமை கிடையாது. ஆனால், எதையும் முயற்சிசெய்துப் பார்க்கும் துணிவு கொண்டிருக்கிறேன்” - தலைவராகப் பொறுப்பேற்றபோது ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை. 50 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் இது!

காலையில் ஒரு பிரசாரப் பொதுக்கூட்டம், மாலையில் ஒரு பிரசாரப் பொதுக்கூட்டம், இடைப்பட்ட நேரத்தில் வேனில் இருந்தபடியே மக்கள் சந்திப்பு என டாப் கியரில் வேகமெடுத்துள்ளது தி.மு.க-வின் பிரசார வியூகம். இதுகுறித்து ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத் திட்டத்தை எ.வ.வேலு, துரைமுருகன், நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையின்படி ஒருங்கிணைப்பு செய்துள்ளனர். தொகுதியின் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை செய்தே தேதி, பிரசார இடங்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முடிவுசெய்துள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொடுத்த அறிக்கையுடன், ஸ்டாலின் சொன்ன சில விஷயங்களையும் சேர்த்துத்தான் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

தி.மு.க-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முதல்தளத்தில், தேர்தலுக்காக ‘வார் ரூம்’ செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்த வார் ரூமின் முக்கியப் பணியே சட்டரீதியாக ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்வதுதான். குறிப்பாக, வேட்புமனு தாக்கல்செய்வது முதல் தேர்தல் முறைகேடு, ஆளும் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தி.மு.க-வினருக்குத் தரப்படும் நெருக்கடிகளை உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது ஆகிய பணிகளை இந்த சட்டப் பணிக்குழு மேற்கொள்ளும். இந்தக் குழு மாவட்டம்தோறும் உள்ள வழக்கறிஞர் அணியுடன் தொடர்பில் இருக்கும். ஒவ்வொரு வேட்பாளரின் வேட்புமனுவையும் இவர்கள் பார்த்து ஓ.கே செய்தபிறகே மனுவைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.

தேர்தல் பிரசாரங்களை வடிவமைப்பதில் ஸ்டாலினின் ஓ.எம்.ஜி அணி பிரதான இடம் பிடித்துள்ளது. ஸ்டாலின், பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களுக்கு, ஒருநாள் முன்பாகவே இந்த அணியைச் சேர்ந்தவர்கள் சென்றுவிடுகிறார்கள். அந்தத் தொகுதியின், பிரதான பிரச்னைகள் மற்றும் தொகுதிக்கு வேண்டிய திட்டங்கள் போன்றவற்றை கேட்டு குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். அந்தந்தத் தொகுதிக்கான ஸ்டாலின் உரையில், இவர்கள் சேகரித்தத் தகவல்களை இடம்பெறச் செய்துவிடுகிறார்கள். ஓ.எம்.ஜி குழுவின் தலைவர் சுனில், சென்னையில் இருந்துகொண்டே ஒட்டுமொத்த பிரசாரம், பயணத்திட்டம் மற்றும் மீடியாவில் செய்திகளைக் கையாள்வது போன்ற பணிகளைக் கண்காணித்துவருகிறார்.

ஸ்டாலின் பிரசார உரையை அலங்காரம் செய்யும் பணியை கலைஞர் தொலைக்காட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் செய்துவருகிறார். அதேபோல் ஸ்டாலினின் பிரசாரப் புகைப்படம், இதுவரை இல்லாத அளவுக்கு சமூக வலைதளங்களில் அதிகம் பகிர ஏற்பாடுகள் நடக்கின்றன. இதைத்தவிர மாவட்டவாரியாக உள்ள ஐ.டி விங் பொறுப்பாளர்கள் அந்தந்தத் தொகுதிக்கென்று தனியாக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி அதில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்கிறார்கள்.

கருணாநிதி பிரசாரத்துக்குச் செல்லும்போது அவருடன் மூத்த நிர்வாகிகள் பயணிப்பது வழக்கம். ஸ்டாலின் பிரசார வேனில், அவரின் மனைவி துர்கா, ஸ்டாலின் உதவியாளர் தினேஷ், மற்றொரு உதவியாளர் சதீஷ் ஆகியோரும் பயணிக்கிறார்கள். ஸ்டாலின் பேச்சைத் தொடர்ந்து ட்விட்டரில் அப்டேட் செய்யும் பணியை தினேஷ் செய்கிறார். திருவாரூரில் கூடிய கூட்டத்துக்குப் பிறகு, ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்டங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால், மாவட்டச் செயலாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு கூட்டத்தைக் கூட்டிவருகிறார்கள். தேர்தல் செலவுகளுக்கான விஷயங்கள் சபரீசன் கண்காணிப்பிலேயே நடக்கின்றன. ‘பட்டுவாடா’ விவகாரத்தை வேட்பாளர்களும் கண்காணித்துக்கொள்ளுங்கள் என்று தலைமை ஆலோசனை வழங்கியுள்ளது” என்றார்கள்.

உடன்பிறப்புகள் உழைப்பது எல்லாம் சரி... ஆனால், உதயசூரியன் உதிப்பது மக்கள் கையில்தானே இருக்கிறது!

- அ.சையது அபுதாஹிர்,
படங்கள்: க.சதீஷ்குமார்