Published:Updated:

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி
பிரீமியம் ஸ்டோரி
“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

Published:Updated:
“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி
பிரீமியம் ஸ்டோரி
“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி
“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

‘மீண்டும் மோடி... வேண்டும் மோடி’ என்று அ.தி.மு.க - பி.ஜே.பி தமிழகத் தலைவர்கள் பிரசாரக் களத்தில் இறங்கி விட்டனர். தமிழக பி.ஜே.பி தலைவர்களிலேயே பக்குவமும் முதிர்ச்சியும் கொண்டவர் என்று பெயரெடுத்தவரும், அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை?”

‘‘போட்டியிட்டிருக்கலாம்தான். எனக்கு விருப்பமானது தென்சென்னை தான். ஆனால், எப்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதோ, அப்போதே தென்சென்னை பி.ஜே.பி-க்கு கிடைப்பது அரிது என்று தெரியும். கட்சித் தலைமையும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னைக் கேட்டபோது, ‘தென்சென்னை கிடைத்தால் போட்டியிடுகிறேன், மற்ற தொகுதி வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். கூட்டணியில் இருக்கும்போது, இப்படி சில தொகுதிகள் மாறும்தான். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் எனக்கு வருத்தம் இல்லை.’’

“பி.ஜே.பி வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே, உங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலைச் சொன்னது சரிதானா?”

“மாநிலத்திலிருந்து வேட்பாளர் பரிந்துரைப் பட்டியல் டெல்லிக்குச் சென்றுள்ளது. பெரும்பாலும், அதே பட்டியல்தான் வெளியாகும். அந்த பரிந்துரைப் பட்டியலைத்தான், அதிகாரபூர்வ அறிவிப்பு என்று நினைத்து ராஜா சொல்லியிருக்கிறார். நல்லவேளை யாக அதே பட்டியலைத்தான் தலைமையும் சொல்லியுள்ளது. செய்திகளை முந்தித் தர வேண்டுமென ஊடகம் நினைப் பதுபோல, ராஜாவும் செய்திகளை முந்தித் தந்திருக்கலாம்.’’

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தூத்துக்குடியில் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திர ராஜனும், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் போட்டியிடுகிறார்கள். இந்தப் போட்டி எப்படி இருக்கும்?”

‘‘தூத்துக்குடியில் கனிமொழி நிற்கப் போகிறார்... அதனால் தமிழிசையை நிறுத்தவேண்டும் என்று நாங்கள் அந்தத் தொகுதியைக் கேட்கவில்லை. சொல்லப்போனால், நாங்கள் கேட்ட தொகுதிகள் பட்டியலில் தூத்துக்குடியே இல்லை. இவர்கள் இருவருமே துணிச்சல் மிக்கவர்கள், பேச்சாற்றல் கொண்டவர்கள், திறமைசாலிகள். அதேசமயம் தூத்துக்குடி மக்கள் விவரமானவர்கள்.’’

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மரணங்களை, அந்த மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், துரதிர்ஷ்டவசமானது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டுமா அல்லது மூடிவிட வேண்டுமா என்று இரண்டுவிதமான கருத்துகள் தூத்துக்குடி மக்கள் இடையே உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி வளர்ச்சி அடைந்ததாக மக்கள் சிலர் சொன்னதைக் கேட்டு எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. இந்த ஒரு பிரச்னையை மட்டுமே கருத்தில் கொண்டு தூத்துக்குடி மக்கள் செயல்பட மாட்டார்கள். ஏனென்றால், ஸ்டெர்லைட் ஆலை வரவேண்டும் என்று கையெழுத்திட்டது தி.மு.க; ஆலையைக் கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சிதான். துப்பாக்கிச்சூடு நடந்தது சட்டம் - ஒழுங்குப் பிரச்னை. தூத்துக்குடி சம்பவத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அதில் உண்மையில்லை. எனவே, தூத்துக்குடி சம்பவம் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.’’

“ஜெயலலிதா மரணத்துக்குப்பின், அ.தி.மு.க-வின் வாக்குவங்கி சிதறியுள்ளதே?’’

‘‘ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின்பு, அ.தி.மு.க நிலைகுலைந்துபோனது என்பது வரலாற்று உண்மை. ஆனால், அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டிக்காக்கிறார். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்காக இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள் அதிகம். அந்த வாக்கு எங்கேயும் போகாது. எந்தவகையிலும் அ.தி.மு.க-வின் வாக்குகள் சிதறவில்லை. நாற்பதுக்கு நாற்பது நாங்களே ஜெயிப்போம்.’’

“ராகுல் காந்தி உட்பட பலரும், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில், பத்திரிகை யாளர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை’ என்று விமர்சிக் கிறார்களே?’’

“ஜெயலலிதாவும்தான் பத்திரிகையாளர் களைச் சந்திக்கவில்லை. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். மோடி, மக்களுடன் தொடர்ந்து ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி மூலம் உரையாடிவருகிறார்.’’

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ‘இதுபோன்ற விஷயங்களை ஆழமாகப் படிப்பது கிடையாது. எனவே, அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாத விஷயங்களை நான் பேசுவது கிடையாது’ என்று நீங்கள் கருத்து தெரிவித்தது சரிதானா?’’

‘‘பொள்ளாச்சி சம்பவம் நடந்து வெளியே தெரிந்ததும், என்னிடம் பத்திரிகையாளர்கள் கருத்துக் கேட்டார்கள். அப்போது, எனக்கு அந்த சம்பவம் நடந்ததே தெரியாது. அதனால், எனக்கு அந்த சம்பவம் குறித்து தெரியாது என்று சொன்னேன். அதன்பிறகு நான் சொன்ன கருத்துகள் வெளியே தெரியாமலே போய்விட்டன.’’

- இ.லோகேஷ்வரி
படம்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism