Published:Updated:

மனைவியே துணை!

மனைவியே துணை!
பிரீமியம் ஸ்டோரி
மனைவியே துணை!

மனைவியே துணை!

மனைவியே துணை!

மனைவியே துணை!

Published:Updated:
மனைவியே துணை!
பிரீமியம் ஸ்டோரி
மனைவியே துணை!

நாடாளுமன்றத்தேர்தலும், இடைத்தேர்தலும் சேர்ந்து வர, இரண்டிலும் ஜெயிக்க வேண்டுமென்று, எல்லாக் கூட்டணிகளும், எல்லாக் கட்சியினரும் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பார்த்துக் கும்பிடு போடுவதற்கு முன், மக்களுக்குப் பல விஷயங்களை மறக்கும் சக்தியைத் தர வேண்டுமென்று கும்பிடுகிறார்களோ என்னவோ...? தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சித்தலைவர்கள் பெரும்பாலும் தங்களின் மத அடையாளங்களைக் காண்பித்துக்கொள்ள விரும்புவதில்லை. அவர்களுக்கும் சேர்த்து, அவர்களின் திருமதிகள்தாம், ஒரு கோயிலும் விடாமல் வேண்டுதல் வைத்துக் கொண்டி ருக்கின்றனர். அத்தகைய மாண்புமிகு மனைவிகள், எந்தெந்தக் கோயில்களில் எப்போதெல்லாம் ‘விசிட்’ அடிக்கிறார்கள் என்று விசாரித்தோம்...

மனைவியே துணை!

ராதா பழனிசாமி:

தி
ருப்பதி பிரம்மோற்சவ விழாவில் தவறாமல்  கலந்துகொள்கிறார் திருமதி பழனிசாமி. அதோடு குடும்ப சகிதமாக திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும், நரசிம்மர் கோயிலுக்குச் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் வீற்றிருக்கும் தனிச்சந்நிதிதான், இவரது ‘பேவரைட் பிரேயர் சென்டர்.’ மாதாமாதம் இவர் தரிசனம் செய்ய வராவிட்டாலும், இவருக்கான பூஜைப் பொருள்கள் வீடு தேடிப் போய்விடுகின்றன. விளக்கேற்றுவதற்கு கிலோக்கணக்கில் நெய் வாங்கிக் கொடுத்துவிடுகிறாராம். சென்னையில் இருக்கும் நாள்களில், மறக்காமல் இந்தக் கோயிலுக்கு ‘விசிட்’ அடித்துவிடுவார். இந்தக் கோயில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்பெஷல் லிஸ்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற நரசிம்மர் கோயிலுக்கு இவரால் செல்ல முடியாத நிலையில், இவர்களின் மகன்கள் மிதுன் மற்றும் சரண் ஆகியோர் தந்தைக்காக, கோயில் கோயிலாகச் சென்று வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனைவியே துணை!

துர்கா ஸ்டாலின் :

ஸ்
டாலினுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அவர் மனைவி துர்காவுக்கு நிறையவே இருக்கிறது. கணவருக்காகவும் மகன் உதயநிதிக்காகவும் கோயில் கோயிலாக ஏற ஆரம்பித்துள்ளார் துர்கா ஸ்டாலின்.  எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிர பரிகார பூஜை செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.  ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசிக்க வேண்டும் என்று, நேரம் காலமெல்லாம் பார்த்து, தைப்பூசத்தையொட்டி பழநி கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்து வந்திருக்கிறார். அதேபோல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வதையும் வழக்கமாய் வைத்திருக்கிறார். திருச்சி வரும் துர்கா ஸ்டாலினைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு கே.என். நேரு குடும்பத்துக்குத்தானாம். அதோடு ஜோதிடர் அறிவுரைப்படி காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை தாய்வீட்டுச் சொந்தங்களுடன் தரிசித்து வந்திருக்கிறார். காசியில் ஒரு சாமியாரைச் சந்தித்திருக்கிறார். கடந்த ஆண்டு மட்டுமே தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்கள் பெரும்பாலானவற்றிற்கு ‘விசிட்’ அடித்துவிட்டார், துர்கா ஸ்டாலின். அதில் குறிப்பிடத்தக்கவை ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். தை அமாவாசையின் போது, சீர்காழி திருநாங்கூர் நாராயணசாமி கோயிலில் கருடசேவை தரிசனமும் செய்திருக்கிறார். நெற்றி நிறையக் குங்குமத்தோடு கோயில் கோயிலாய்ச் சுற்றிக் கொண்டே இருக்கிறார். எந்தத் தெய்வம், எப்போது அவரது கோரிக்கையை நிறைவேற்றுமோ?

சௌமியா அன்புமணி:

தே
ர்தலுக்கு முன்பு, ஒவ்வொரு முறையும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்துவது சௌமியாவின் வழக்கம். மேலும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு குடும்பசகிதமாகச் செல்வதையும் தவறவிடுவதில்லை. அதோடு திருப்பதி கோயிலுக்கும் அடிக்கடி ‘விசிட்’ அடிக்கிறார்கள் இந்தத் தம்பதியினர். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, கோயில் கோயிலாகச் சென்றாலும், கடைசியாக மேல்மருவத்தூர்க் கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான், தேர்தலில் வாக்களிக்கவே செல்வாராம் செளமியா அன்புமணி. திண்டிவனம் அருகில் இருப்பதால், மேல்மருவத்தூருக்கு அடிக்கடி செல்வதை வழக்க மாக்கிக் கொண்டிருக்கிறார் சௌமியா. அதோடு ராமதாஸ் குடும்பத்துக்கு மேல்மருவத்தூர்க் கோயில் ‘குடும்பக் கோயில்’ போலவாம். மயிலம் முருகன் கோயிலில்தான் அன்பு மணிக்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்து கிறாராம் சௌமியா. அடிக்கடி இந்தக் கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும், இவர்களைத் தேடி, கோயில் பிரசாதம் வந்துவிடுமாம்.

மனைவியே துணை!

விஜயலெட்சுமி பன்னீர்செல்வம்:  

து
ணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்குப் பேச்சியம்மன்தான் குலதெய்வம். அவருக்காகச் சிறப்பாகப் பூஜை செய்து கொடுக்கப்பட்ட பச்சைக்கயிற்றைத்தான் கைகளில் கட்டியிருக்கிறார். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மனைவி விஜய லெட்சுமி யுடன்தான் செல்வதை வழக்க மாக்கிக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். தேனி மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான கோயில் கும்பாபிஷேகங்களில் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டுவருகிறார் விஜயலெட்சுமி. பெரும்பாலும் அம்மன் கோயில்களுக்குச் செல்வதையே விரும்புகிறார் விஜயலெட்சுமி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருவல்லிக்கேணி நரசிம்மருக்கு நெய் விளக்குப் போட்டுவருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே, இந்தக் கோயிலுக்கு நெய்விளக்குப் போடுவதை வழக்கமாக்கி வந்திருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த்:

ட்சி சார்பில் எந்தப் புதிய முடிவு எடுத்தாலும், அதற்குமுன்னர் திருப்பதி கோயிலுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது விஜயகாந்த் குடும்பம். விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் அமாவாசை தினத்தில் சிறப்புப் பூஜை செய்திருக்கிறார் பிரேமலதா. அதேபோல பிரேமலதாவின் சொந்த ஊரான குடியாத்தம் செம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா முனீஸ்வரர் கோயில் பிரசாதம் ஒவ்வொரு மாதமும் விருகம்பாக்கம் வீட்டுக்கே வந்துவிடுமாம். அதுபோல 108 திவ்யதேசத் திருத்தலங்களைத் தனியாகச் சென்று தரிசித்து வருகிறாராம் பிரேமலதா.

மனைவியே துணை!

லதா ரஜினிகாந்த்:

ஜினிகாந்த் இமயமலைக்குச் செல்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர் மனைவி லதா ரஜினிகாந்த், கணவருக்காகப் பல்வேறு ஊர்களிலும் உள்ள பெருமாள் கோயில்களைத் தேடித் தேடிப் போய்க்கொண்டிருக்கிறார். ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குச் செல்வதற்குமுன் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்தார் ரஜினி. அதேபோல் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும், அதற்கு முன் திருப்பதி கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். ரஜினி அரசியல் குறித்து அறிவித்ததும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்துவருகிறார். அதேபோல் அவர்களது போயஸ்கார்டன் இல்லத்தில், ஆள் உயர ராதாகிருஷ்ணர் சிலைகள் வைத்து வணங்கிவருகிறார்.

- இ.லோகேஷ்வரி
படங்கள்: சாய் தர்மராஜ், வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism