Published:Updated:

தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

மிழகம், புதுவை இணைந்த 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கணிசமான அளவுக்குப் பிரிப்பார் டி.டி.வி தினகரன் என்று கணிக்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள். இது, பல தொகுதிகளில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால், ‘தளபதி’ ஸ்டாலினின் ‘ஸ்லீப்பர் செல் தளபதி’ என தினகரனை வர்ணிக்கிறார்கள்.

அ.தி.மு.க அணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க அணி சார்பில் அதன் தலைவர் மு.க ஸ்டாலினும் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே, பல தொகுதிகளில் டி.டி.வி தினகரன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தன் சின்னம் எதுவென்றே தெரியாத நிலையில் இருந்த தினகரனுக்கு, இப்போது பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. இதனால், படு உற்சாகமாகப் பிரசாரத்தைத் தொடர்கிறது தினகரன் முகாம். அ.தி.மு.க., தி.மு.க என்கிற இரண்டு மெகா கூட்டணிகளின் பிரமாண்டமான பிரசாரங்களுக்கு மத்தியில், பலரின் கவனமும் இப்போது தினகரன்மீதுதான் இருக்கிறது.

அ.ம.மு.க-வின் பரிசுப்பெட்டி சின்னத்தை, ‘காலிப்பெட்டி… தகர டப்பா’ என்று அ.தி.மு.க-வினர் கிண்டல் அடிக்கிறார்கள். ஆனால், இந்த ‘தகர டப்பா’தான் பல தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களைக் காலிசெய்யப்போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பேசினோம். “இந்தத் தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சக்தியாக தினகரனைப் பார்க்கிறேன். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை, உதயசூரியன் இரண்டையும் தோற்கடித்து, 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் ஜெயித்தார். வரப்போகிற தேர்தலுக்குக் கட்டியம் கூறிய தேர்தலாகவும் அதைப் பார்க்க லாம். ஜெயலலிதா இறந்தபிறகு, அ.தி.மு.க வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க சேர்ந்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அ.தி.மு.க-வில் இருந்த சிறுபான்மை வாக்குகளும், பி.ஜே.பி எதிர்ப்பு வாக்குகளும் இந்த முறை அந்தக் கட்சிக்கு விழாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

தினகரனைப் பொறுத்தவரை, அ.தி.மு.க வாக்குகளைக் கணிச மான அளவுக்குப் பிரிப்பார். பொதுத்தளத்திலிருந் தும் அவர் வாக்குகளைப் பெறுவார். தினகரனுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும், அ.தி.மு.க-வின் வெற்றியைப் பாதிக்கும்; அது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு லாபமாக அமையும். அதனால்தான், தினகரனைக் கண்டு அ.தி.மு.க பயப்படுகிறது. ‘குக்கர் சின்னம் தரமுடியாது’ என்று தேர்தல் ஆணையம் சொன்னதால், அதை எதிர்த்து தினகரன் உச்ச நீதிமன்றம் சென்றார். அது தேர்தல் ஆணையத்துக்கும், தினகரனுக்குமான பிரச்னை. ஆனால், ஒருதடவை ஆஜராவதற்கே 50 லட்சம் ரூபாய்வரை வாங்கக்கூடிய பெரிய வழக்கறிஞர்களை வைத்து, ‘தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்கக்கூடாது’ என்று அ.தி.மு.க மல்லுக்கட்டியது. இது தினகரன்மீது அ.தி.மு.க-வுக்கு இருக்கும் பயத்தின் வெளிப்பாடு. இதை எல்லாம்மீறி அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கணிசமான அளவுக்கு தினகரன் பிரிப்பார்” என்றார்.

“இரட்டை இலக்க சதவிகிதத்தில் தினகரன் வாக்குகளைப் பெறுவார்…” என்று அடித்துச்சொல்கிறார், அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி. “தினகரனின் உறவினரான சசிகலா அதிகமான எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருந்தும், அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையில் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் இருந்தும், அவருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப் படவில்லை. சசிகலா மற்றும் தினகரனைக் குறிவைத்து நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரிச் சோதனை கள் நடத்தப்பட்டன. இவற்றை எல்லாம் மீறித்தான் தினகரன் நிற்கிறார். எனவே, ஜெயலலிதாவை ஆதரித்த முக்குலத்தோர் சமுதாயம், தினகரனின் பின்னால் அணிதிரளுவார்கள். மேலும், ஆர்.கே நகரில் மிகப் பெரிய வெற்றியைப்பெற்றதால், முக்குலத்தோர் சமுதாயம், தினகரனை ஹீரோவாகப் பார்க்கிறது. எனவே, டெல்டா பகுதியிலும், தென் பகுதியிலும் கணிசமான வாக்குகளைத் தினகரன் பெறுவார். தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய எட்டுத் தொகுதிகளில் இரட்டை இலக்க சதவிகிதத்தில் தினகரன் வாக்குகளைப் பெறுவார். திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதி களில் கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெறுவார்.” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

தினகரன் தரப்பினரோ, “கிராமங்கள்தோறும் கிளைகளை உருவாக்கி, பூத் கமிட்டிகளை அமைத்துவிட்டார், தினகரன். ஒரு தொகுதிக்குச் சராசரியாக 14 லட்சம் வாக்குகள் உள்ளன. அவற்றில், குறைந்தது பத்து லட்சம் வாக்குகள் பதிவாகும். தினகரன், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வாக்குகளைப் பெறுவார். அப்படிப் பார்த்தால், ஒட்டுமொத்தமாகச் சுமார் 80 லட்சம் வாக்குகளைப் பெறுவார். அ.ம.மு.க-வின் கட்டமைப்பு, தினகரனுக்குக் கூடுகிற கூட்டம், களநிலவரம் ஆகியவற்றை வைத்தே இதைச் சொல்கிறோம். விஜயகாந்த் தனியாக நின்றபோது, சுமார் முப்பது லட்சம் வாக்குகளைப் பெற்றார். அதைவிட மூன்று மடங்கு வாக்குகளைத் தினகரன் பெறுவார்” என்கிறார்கள்.
‘பரிசுப்பெட்டி’க்குள் என்ன இருக்கிறதென்று வாக்குப்பெட்டியைத் திறந்தால் தெரிந்துவிடும்!

- ஆ.பழனியப்பன்
படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார்