Published:Updated:

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

சொந்தக் கட்சியிலும், சொந்த மண்ணிலும் எதிர்ப்பு அலைகளைக்கடந்து, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகக்  களமிறங்கியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். வேட்புமனு பரிசீலனைவரையிலும் பதற்றத்துடன் இருந்த அவர், அதன் பின்பு ரிலாக்ஸ் ஆகிவிட்டார். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்துச் சென்றபின், மனிதர் இன்னுமே தெம்பாகி விட்டார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

“சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்தமுறை  நீங்கள் போட்டியிட்டபோது, நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டீர்கள். இந்தமுறை உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?”

“சென்ற முறை தனி ஆளாக மக்களைச் சந்தித்தேன். இந்த முறை நிலைமை அப்படி இல்லை. இப்போது மக்கள் விரும்பும் கூட்டணி அமைந் திருக்கிறது. பெரிய படையுடன் செல்கிறேன். என்னுடைய பலமே கூட்டணிதான்.”

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“ராகுல் காந்தி, ‘பதவியில் உள்ளவர்களின் குடும்ப வாரிசு களுக்கு சீட் இல்லை’ என்ற முடிவை எடுத்ததால்தான் உங்களை வேட்பாளராக அறிவிப் பதில் காலதாமம் ஆனதா?”

“காங்கிரஸ் தேசியக்கட்சி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். 543 தொகுதி களுக்கும் ஒவ்வொரு கட்டமாகத் தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார்கள். என்னை முதலில் வாரிசாகப் பார்க்காதீர்கள். நான் ஆறு வயதிலேயே (!!!) காங்கிரஸ் கட்சிக்கு பூத் சிலிப் எழுதியிருக்கிறேன். சின்னம் வரைந்திருக்கிறேன். தேர்தல் ஆணையரோடு விவாதம் செய்திருக்கிறேன். இது வரைக்கும் பத்து தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்காக வேலை செய்திருக்கிறேன். ப.சிதம்பரம் வாரிசாகக் களத்துக்கு வரவில்லை.”

“உங்கள் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?”

“எங்கள் கட்சிக்குள் எந்தப் பூசலும் இல்லை. எல்லோருக்கும் ஒரே குறிக்கோள் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதுதான். அதற்கான வேலை களைத்தான் செய்துகொண்டிருக் கிறோம்.”

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

“த.மா.கா எதிரணியில் இருப்பது, காங்கிரஸின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா?”

“காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அது ஒரு தனிக்கட்சி. பி.ஜே.பி இருக்கும் அணிக்கு வாசன் போனது, வேதனைக்குரியது. இதை எந்தவொரு  உண்மையான காங்கிரஸ்காரனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். த.மா.கா–வுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்ததில் எனக்கும் பங்கு உண்டு. சைக்கிள் சின்னம் கெளரவ மானது. அந்தச் சின்னம் இப்போது அவர்களுக்குக் கிடைக்காததில் மகிழ்ச்சி.”

“சுதர்சன நாச்சியப்பன், ‘காங்கிரஸ் என்ன ப.சிதம்பரத்தின் சொத்தா? காங்கிரஸ் ஒரு சீட்டை இழந்திருக்கிறது...’ என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறாரே?”

“இப்போது அவர் எங்களுடன்தான் இருக்கிறார். ‘ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதுதான் எங்கள் நோக்கம்’ என்று பேட்டியும் கொடுத்திருக்கிறார்.”

“சிவகங்கை தொகுதியில் ஏழு முறை எம்.பி–யாக இருந்துள்ள உங்களது தந்தை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்படியான திட்டங்கள் எதுவும் கொண்டுவந்ததுபோலத் தெரியவில்லையே?”

“எங்களின் சாதனையைப் புத்தகமாகப் போட்டிருக்கிறோம். அதில் இருப்பதைப் படியுங்கள், தெரியும். பெல் கம்பெனி கொண்டு வந்திருக்கிறோம். ஸ்பைசஸ் பார்க், சிவகங்கை மேம்பாலம், மருத்துவக் கல்லூரி, ஏராளமான கல்விக்கடன் என்று அடுக்கிக் கொண்டேபோகலாம்.”

“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர்மீதும் இருக்கும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கைச் சொல்லி, எதிரணித் தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்களே?”

“என்மீது எந்த வழக்கும் கிடையாது.  வேட்பு மனுவோடு நான் தாக்கல் செய்துள்ள ‘அபிடவிட்’டில் ‘நோ சார்ஜஸ்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். இதுவரைக்கும் என்மீது எந்த ஒரு வழக்கும் கிடையாது.”

“சி.பி.ஐ வழக்கு?”

“அதெல்லாம் ஒன்றுமே இல்லைங்க சார்...”

“கட்சிக்காரர்களிடம் சற்று விலகியே நிற்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே?”

“கட்சிக்கோ, தொகுதி மக்களுக்கோ நான் புதியவன் அல்ல. தொகுதி முழுவதும் உள்ள நிர்வாகிகள், பொதுமக்கள் என எல்லோரிடமும் பழகியிருக்கிறேன். என் தந்தை வெற்றிபெற்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். வேறெங்கும் போய் விடவில்லை. எங்களுக்குச் சொந்த ஊர், கண்டனூர்தான். எனக்கு போன் செய்தால், அழைத்தவர்களைத் திரும்பத் தொடர்புகொண்டு பேசுகிறவன் நான். என்னைத்தவிர வேறுயாரும் இப்படி இருக்க மாட்டார்கள்.”

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

“சிவகங்கை தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

“மத்திய அரசின் திட்டங்கள் ஒழுங்காக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பேன். தனியார் நிறுவனங்களை அதிகளவில் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கி றேன். அந்த நிறுவனங்களில்  உள்ளுர்காரர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். வேலைவாய்ப்பை முழுமையாகக் கொடுப்பதுதான் என் முதல் பணி. நீர்வளத்தைப் பாதுகாக்க கண்மாய்கள், ஊரணிகள் முழுமையாகத் தூர்வாரப்படும். சிவகங்கை மாவட்டத்துக்கு ‘ரயில் கனெக்டிவிட்டி’ திட்டத்தைச் செயல்படுத்துவேன். இந்த மாவட்டத்தின் கலை, உணவு வகைகளைப் பிரபலப்படுத்துவேன். பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவேன். தொகுதி முழுவதும் பரவலாக அலுவலகம் அமைத்திருக்கிறோம். அங்கே மக்களின் மனுக்களைப்பெற்று அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும். என்னை யாரும் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம்.”

- தெ.பாலமுருகன்
படம்: சு.குமரேசன்