Published:Updated:

பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!

பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
News
பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!

- பெரம்பூர்- சூரஜ்

பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!

ஆர்.கே. நகர் தேர்தலின்போது சகல வியூகங்களையும் அரங்கேற்றிய அ.தி.மு.க-வின் தொகுதிப் பொறுப்பாளர் ராஜேஷ், அ.தி.மு.க சார்பில் பெரம்பூரில் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, தகுதிநீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். 

தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர், பெரம்பூர் தொகுதிக்கு எனத் தனியாகத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். இதை பிட் நோட்டீஸாகப் போட்டு வாக்காளர்களிடம் விநியோகித்தும் வருகிறார். ‘‘அ.ம.மு.க வேட்பாளரான வெற்றிவேல் எவ்வளவு அதிகமாக ஓட்டு வாங்குகிறாரோ... அதுதான் தி.மு.க-வை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்’’ என்று உறுதியாக நம்புகிறார் ஆர்.டி.சேகர். ‘‘பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளானவர்கள், எங்கள் தொகுதி முழுக்கவே இருக்கிறார்கள். எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்மீது இப்பகுதி மக்கள் பெரும்மதிப்பு வைத்திருக்கிறார்கள். எனது வெற்றிக்கு இவை போதும்’’ என்கிறார் ஆர்.டி.சேகர்.

ஆனால், “மாநகராட்சி கவுன்சிலராக ஆர்.டி சேகர் இருந்தபோது, கட்டப்பஞ்சாயத்து செய்து, எப்படி எல்லாம் அடாவடியாக நடந்துகொண்டார்” என்பதைச் சம்பவங்களாகச் சொல்லி, பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் வெற்றிவேல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனின் வலதுகரம். ‘‘வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டபிறகு, பெரம்பூர் தொகுதியின் பிரச்னைகளில் அன்றாடம் தலையிட்டு, மக்களுடன் நெருங்கிப் பழகிவருகிறேன். அவர்களின் எண்ண ஓட்டம் எனக்கு நன்றாகத் தெரியும். மக்கள் என்னை நிச்சயமாக ஜெயிக்கவைப்பார்கள்’’ என்கிறார் ராஜேஷ் நம்பிக்கையுடன்.

பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!
பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!

ஜெயலலிதா அப்போலோவில் ஜூஸ் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு ஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில்  தமிழகத்தை அதிரவைத்தவர் வெற்றிவேல். இவரின் மைனஸ் பாயின்ட்... உட்கட்சிப் பிரச்னை. தொகுதிப்பக்கம் அடிக்கடி தலைகாட்டவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. ‘‘பி.ஜே.பி-க்கு எதிரான அலை சூறாவளியாகச் சுழன்றடிக்கிறது. மேலும், அ.தி.மு.க அரசுமீதான அதிருப்தியும் மக்களிடையேக் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதால், பெரம்பூரில் நான் எளிதாக ஜெயிப்பேன்’’ என்கிறார் வெற்றிவேல்.

இன்றைய நிலவரப்படி, தி.மு.க-வினர் உற்சாகமாக இருக்கிறார்கள்!

படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு