Published:Updated:

பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்

பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்

பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்

பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்

தி.மு.க சார்பில் வி.சீனிவாசன், அ.தி.மு.க சார்பில் ராஜவர்மன் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, தினகரன் அணிக்கு மாறியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட
எஸ்.ஜி.சுப்பிரமணியன், இப்போது அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் மூவருமே முக்குலத்தோர் சமூகத்தினர். சாத்தூர் தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர் சரிபாதியாக உள்ளனர். அடுத்த இடத்தில் நாயக்கர் சமூகத்தினரும், நாடார் சமூகத்தினரும் உள்ளனர். இதனால், மூன்று தரப்பிலும் ஓட்டுகள் சிதறும். பட்டாசு ஆலைகள் பிரச்னையால் தொழிலாளர்கள் அ.தி.மு.க அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் மூலம் எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் ராஜவர்மனுக்கு சீட் கிடைத்துள்ளது. இவருக்கு இப்பகுதி மக்களிடம் போதிய அறிமுகம் இல்லை. பி.ஜே.பி., பா.ம.க வாக்குகள் இங்கு எடுபடாது. இவை எல்லாம் அ.தி.மு.க-வுக்கு பாதகம். தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளின் வாக்குகள் மட்டுமே அ.தி.மு.க-வுக்கு சாதகம்.

அ.ம.மு.க வேட்பாளர் சுப்பிரமணியன், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றவர். அ.ம.மு.க-வுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கும் இருக்கிறது. இதனால், அ.தி.மு.க வாக்குகள்  பெருமளவில் அ.ம.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு.

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு, தி.மு.க-வுக்குச் சாதகம். தி.மு.க-வுக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் கூடுதல் பலம். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் ஆறுமுறை வெற்றிபெற்று மக்களிடம் நன்கு அறிமுகமான முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியிருப்பது தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்

அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மனிடம் பேசினோம். “அம்மா விட்டுச்சென்றப் பணிகளை எடப்பாடி அண்ணன் தொடர்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் எடப்பாடி, மோடி அலையுடன் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் அலையும் சேர்ந்துவீசுகிறது. நானே வெற்றி பெறுவேன்” என்றார்.

தி.மு.க வேட்பாளர் சீனிவாசனோ, “சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் பிரச்னையால் அ.தி.மு.க அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. நான் படித்தவன், நான்கு மொழிகள் தெரிந்தவன். அதனால், மக்கள் எனக்கே ஓட்டுப் போடுவார்கள். 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”  என்றார்.

அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், “டி.டி.வி. தினகரனுக்கு மட்டுமே இங்கு செல்வாக்கு. மற்றவர்கள் செல்லாக்காசு. யார் பணம் கொடுத்தாலும், மக்கள் அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு அ.ம.மு.க-வை வெற்றியடையச் செய்வது உறுதி. ஏற்கெனவே, தொகுதி மக்களிடம் எனக்கு அறிமுகம் உள்ளது. வெற்றி எனக்கே” என்றார்.

பிரிந்துபோகும் அ.தி.மு.க வாக்குகளே, தி.மு.க-வுக்கே சாதகம் என்பதே இப்போதைய நிலைமை!

- இரா.கோசிமின், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்