Published:Updated:

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

ண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் லோகிராஜனும், தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கும் மகாராஜனும் உடன்பிறந்த அண்ணன், தம்பிகள். கடந்த முறை இங்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தங்கதமிழ்ச் செல்வன்,  தினகரன் பக்கம் தாவியதால் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். அவர் தற்போது தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடுவதால், அ.ம.மு.க சார்பில் ஜெயக்குமார் நிற்கிறார்.   தொகுதியி லுள்ள பிரமலைக் கள்ளர் சமூக வாக்குகள்தான், வெற்றியைத் தீர்மானிக்கும். அதனால் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுமே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே களத்தில் நிறுத்தியிருக்கிறது. தொகுதியில் பிரமலைக் கள்ளர் சமூகத்துக்கு அடுத்தபடியாக ஒக்கலிக்ககவுடர் சமூக வாக்குகள் அதிகம் உள்ளன. தண்ணீர் பிரச்னை, வருஷநாடு மலை விவசாயிகள் பிரச்னைகள்தான் தொகுதியில் முதன்மையானவை. இவற்றையே அரசியல் கட்சிகளும் கையில் எடுத்து, வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன.

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூவருமே ஒரே சமூகத்து வேட்பாளர்கள் என்பதால் சமூக ஓட்டுகள் எங்கே எப்படிப் பிரியும் என்று கணிப்பது சிரமம். அதேசமயம் தொகுதிக்குள் அ.ம.மு.க ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு தெருவிலுமே ‘மைக்ரோ’ அளவுக்கு ஊடுருவியிருக்கிறது அ.ம.மு.க. குறிப்பாக, டி.டி.வி.தினகரனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள் மக்கள். “தினகரன் இந்தத் தொகுதிக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறார், அவருக்கு ஏன் இந்த ஆதரவு?” என்று கேட்டால், “எதுவும் செய்யலைதான். அதுக்காக அவரை விட்டுக்கொடுக்க முடியுமா... எங்க ஆளு அவர்” என்று சாதிப்பாசம் காட்டுகிறார்கள். இதுதான் தொகுதியின் இப்போதைய சூழல்.

தி.மு.க வேட்பாளர் மகாராஜனிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க அரசு எதுவும் செய்ய வில்லை என்பது மக்களுக்கே தெரியும். அதைவைத்தே நான் வாக்குக் கேட்கிறேன். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார். அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜனோ, “அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஆட்சி நடத்துகிறார்கள். இரட்டை இலை சின்னம் என் பலம். எனக்கே வெற்றி” என்கிறார்.

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

அ.ம.மு.க-வின் ஜெயக்குமார், “எங்களுக்குப் பொதுச்சின்னம் ஒதுக்கப்பட்டதே பெரிய வெற்றி. எதிரணியில் இருக்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தத் தொகுதியில் அரசு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. ஆயிரம் கோடி ரூபாய்க்கு இங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதாக ஆளும் தரப்பு சொல்கிறது. நீங்களே வந்து பாருங்கள் ஆயிரம் கோடி எங்கே என்று... மக்கள் அதிருப்தியில் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்” என்கிறார்.

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி