Published:Updated:

“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”

“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”

அடித்துச் சொல்கிறார் ரவிக்குமார்...

“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”

ரசியல் களத்தில் எதிரும்புதிருமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றன. தி.மு.க கூட்டணி சார்பில், வி.சி.க-வின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் களம்காண்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள தொகுதி இது. உங்களுக்குக் கடும் போட்டியைக் கொடுப்பார்களே?”

‘‘ஓர் உண்மையைச் சொல்லட்டுமா... இது, பா.ம.க-வுக்கு பலமான தொகுதியே அல்ல. தர்மபுரியும், சேலமும்தான் அவர்களுக்குப் பலமான தொகுதிகள். இங்கு, 2009 தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு, வெறும் 2,700 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்றைக்கு தி.மு.க-வும் காங்கிரஸும் மட்டுமே எங்களுடன் இருந்தன. இன்று மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. எங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.”

“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பா.ம.க-வும் வி.சி.க-வும் நேரடியாகப் போட்டியிடும் சூழல் எப்படி இருக்கிறது?”

“பா.ம.க-வுடன் போட்டியிடுகிறோம் என்பதை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை.”

“சொந்தச் சின்னம் பெற வேண்டும் என்ற வி.சி.க-வின் நீண்டகால விருப்பம் நிறைவேறாத சூழலில், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து..?”

“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”

“நம் நாட்டில் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டபோது, படிப்பறிவு பெற்றவர்கள் குறைவாக இருந்தனர். அதனால், சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பது எளிதாக இருக்கும் என்று சின்னம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாடாளுமன்றத் தேர்தல் முறையில், உறுப்பினர்களைத்தான் தேர்வுசெய்கிறோம். அந்த உறுப்பினர்கள் சேர்ந்து முதல்வரையோ, பிரதமரையோ தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், சின்னத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, உறுப்பினர்கள் இரண்டாம்பட்சமாகி விடுகின்றனர். நிற்பவர் தகுதியானவரா என்று பார்ப்பதைவிட, அவர் எந்தச் சின்னத்தில் நிற்கிறார் என்பதாக நிலைமை மாறிவிட்டது. இது பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்து, மத்திய ஆட்சியில் இருந்த ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள், தங்களின் சின்னங்களை இழந்துள்ளன. பா.ம.க-வுக்கும் இதே நிலைதான். பி.ஜே.பி கூட்டணியில் சேர்ந்துவிட்டதால், பா.ம.க-வுக்கு சின்னம் கிடைத்துள்ளது. அதையும்கூட, பரிசீலிக்கிறோம் என்றுதான் ஆணையம் கூறியுள்ளது. தனிச்சின்னங்கள் வைத்திருந்த இந்தக் கட்சிகள், புதிய சின்னங்களில் போட்டியிடுவதால், பல சிரமங்களைச் சந்திக்கின்றன. எனவே, இதை உடனடியாக தேர்தல் ஆணையம் சரிசெய்ய வேண்டும். ஒரு கட்சியைப் பதிவுசெய்யும்போது, அந்தக் கட்சிக்குத் தனிச் சின்னத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.”

“சமீபகாலமாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்மீது நிறைய விமர்சனங்கள் எழுவதற்கு என்ன காரணம்?”

“அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, உச்ச நீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆளும் கட்சியின் கருவிகளாக மாற்றப்படுகின்றன. பாரபட்சம் இல்லாத முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது என்கிற பெருமை இதுவரை இருந்துள்ளது. அதைத் தக்கவைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், சமீபகாலமாகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய முறையில் உள்ளன. இதற்கு பி.ஜே.பி-தான் காரணமே தவிர, தேர்தல் ஆணையம் அல்ல.”

“பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”

“அ.தி.மு.க-வின் வாக்குகளைத் தினகரனின் அ.ம.மு.க பிரிக்கும்பட்சத்தில், அது யாருக்குச் சாதகமாக இருக்கும்?”

“அது, எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு ஓர் ஒத்தாசையாக இருக்கும். அதேநேரம், அதனாலேயே நாங்கள் வெற்றிபெறுவோம் என்று சொல்லவில்லை. கிராமப்புறங்கள்வரை மோடி எதிர்ப்பு அலை கடுமையாக இருக்கிறது. வழக்கமாக, மாநில அரசுமீதுதான் மக்களுக்குக் கோபமும் விமர்சனமும் இருக்கும். இதற்கு முன், நேரடியாக மத்திய அரசால் இவ்வளவு தூரம் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டது கிடையாது. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு போராட்டங்கள் நடத்தினால், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடிசெய்கிறார்கள். டெல்டாவை அழிப்பதுபோல ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள். மேற்கு மண்டலத்திலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். நூறு நாள் வேலைத் திட்டத் துக்கான நிதியைக் குறைத்துவிட்டார்கள். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளே இல்லை. இதனால் உருவாகியிருக்கும், பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க அணி வாஷ்அவுட் ஆகிவிடும். அதனால், நாற்பதிலும் நாங்களே வெல்வோம்.”

“நீங்களும் தொல்.திருமாவளவனும் வெற்றிபெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி  ஆட்சி அமையும் பட்சத்தில், ஆட்சியில் நீங்கள் பங்குபெறுவீர்களா?”

“அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். அதுதான் எங்களின் முதன்மையான நோக்கம்.”

- ஆ.பழனியப்பன்
படங்கள்: தே.சிலம்பரசன்