Published:Updated:

“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

மனம் திறக்கிறார் திருமாவளவன்

“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

மனம் திறக்கிறார் திருமாவளவன்

Published:Updated:
“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”
“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

சிதம்பரம் தொகுதியில், திருமாவளவனின் பிரசாரம் அனல் பறக்கிறது. வழியில் எங்கேனும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தென்பட்டால், இறங்கிச்சென்று பேசுகிறார். பட்டியல் சமூகத்தினர் தொடங்கி நாடார், முதலியார் என ஒவ்வொரு சமூகத்தினரையும் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மறக்காமல், பா.ம.க-வின் ராமதாஸை ஒருபிடி பிடிக்கிறார். பிரசாரம், கட்சியினருடன் ஆலோசனை என பிஸியாக இருந்தவரைப் பேட்டிக்காக, நள்ளிரவு தாண்டி 1.30 மணிக்குத்தான் பிடிக்கமுடிந்தது. அவ்வளவுப் பிரசாரக் களைப்பிலும் உற்சாகமாக வந்துவிழுந்தன பதில்கள்! 

‘‘சிதம்பரம் தொகுதியில் ஐந்தாவது முறையாகப் போட்டியிடக் காரணம் என்ன?’’

‘‘சிதம்பரம் என் சொந்தத் தொகுதி. ஒருமுறைதான் வென்றேன் என்றாலும், இப்போது தி.மு.க-வின் கூட்டணி பலம் இருக்கிறது. அதனால் எனக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இதுவே காரணம்.’’

‘‘உங்கள்மீதும், உங்கள் கட்சியினர்மீதும் சுமத்தப்படும் சமூகரீதியானக் குற்றச்சாட்டுகள் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துமா?’’

‘‘திரும்பத் திரும்பத் தேர்தல் நேரங்களில் மட்டும் திட்டமிட்டு, அதுமாதிரியான அவதூறுகளைப் பரப்புகின்றனர். அது அப்பட்டமானப் பொய் பிரசாரம். அதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’’

“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பானை சின்னம் எந்தளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது?’’

‘‘ஸ்டார் சின்னத்தில், கடந்த 2009 தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது உச்ச நீதிமன்றம்வரை சென்று வழக்கு போட்டு, தேர்தலுக்கு 15 நாள்கள் முன்புதான் சின்னம் வாங்கினேன். அது வாக்காளர்களிடம் ரீச் ஆகி வெற்றிபெற முடிந்ததே... எனவே சின்னம் ஒரு பிரச்னை இல்லை.’’

‘‘தொகுதியில் உள்ள வன்னியர் மற்றும் பிற சமூகத்தினர் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்காது என்று கூறப்படுகிறதே?’’

‘‘2009 தேர்தலில், அவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்டுத்தானே நான் வெற்றி பெற்றேன்... ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஓட்டுப்போட்டு ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எல்லாத் தரப்பு மக்களின் வாக்குகளையும் பெற்றால்தான் வெற்றிபெற முடியும். எனக்கு அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு உள்ளது.’’

‘‘டாக்டர் ராமதாஸ், உங்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறாரே?’’

‘‘இதை அவர் அரசியல் உத்தியாகத்தான் பார்க்கிறார். அது எல்லாமே பொய் என்று அவர் மனசாட்சிக்கே தெரியும். அரசியல் ஆதாயத்துக்காக என்மீது வெறுப்பை உமிழ்கிறார். அதன்மூலம், சாதியவாதிகளின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறார். மறைமுகமாக வன்முறையைத் தூண்டுகிறார். யாரோ, எங்கேயோ காதலித்து ஓடுவதற்கு நான் எப்படிக் காரணமாக இருக்க முடியும்? எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’’

“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

‘‘கடவுள் மறுப்புக் கொள்கைகளைக்கொண்ட நீங்கள், நடராஜர் கோயிலில் விபூதி பூசிக்கொண்டது தேர்தலுக்காகத்தான் என்று விமர்சிக்கப்படுகிறதே?’’

‘‘கூட்டணிக் கட்சியான தி.மு.க. தரப்பில் எல்லாச் சமூகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தீட்சிதர்களையும் சந்திக்க நடராஜர் கோயிலுக்குச் சென்றேன். அவர்களின் நம்பிக்கை அடிப்படையில், எனக்கு வரவேற்பு அளித்தார்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அதற்கு நான் இசைவு தெரிவித்தேன். அவ்வளவுதான்.’’

‘‘உங்களை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும்போது நீங்கள் தேர்தல் செலவுக்குக்கூடச் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறதே?’’

‘‘மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன். நான் நம்புவது மக்களை மட்டும்தான். கட்சித் தோழர்கள் நிதி வழங்குகிறார்கள். அதைவைத்துத்தான் கடந்த 10 நாள்களாகத் தேர்தல் பணியாற்றிவருகிறேன். தேர்தல்வரை செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்றுகூடத் தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணி எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும், பானை சின்னமே வெற்றிபெறும்.’’

‘‘இந்தத் தேர்தலில், பணம்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?’’

‘‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு விலை வைக்கும் நிலை அதிகரித்துள்ளது. இது ஜனநாயகத்துக்குக் கேடு விளைவிப்பதாகும். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவு இது. மக்கள் விழிப்பு உணர்வு அடைந்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.’’

“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை!”

‘‘துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து ரெய்டு நடக்கிறதே?’’

‘‘தி.மு.க தலைமையிலான கட்சிகளை அச்சுறுத்துவதற்காக மத்திய, மாநில ஆளும் கட்சிகள் வருமானவரித் துறை போன்ற நிறுவனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திவருகின்றனர். ஆளும் கட்சியினரின் பணப் புழக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. அதை அனுமதிக்கும் அதிகாரிகள், தி.மு.க-வைக் குறிவைப்பது நேர்மையற்ற செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.’’

‘‘தி.மு.க கூட்டணிக்குக் கிடைக்க வேண்டிய சிறுபான்மையினரின் வாக்குகளை அ.ம.மு.க., மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வாங்கிவிடுவார்கள் என்று சொல்கிறார்களே?’’

‘‘உண்மைதான். தினகரன் அணி, கமல்ஹாசன் அணி உருவாகாமல் இருந்திருந்தால், பி.ஜே.பி., அ.தி.மு.க ஆகிய இரு ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் தி.மு.க அணிக்குக் கிடைத்திருக்கும். இப்போது இந்தப் புதிய அணிகளால், ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் அவர்களுக்குப் போக வாய்ப்பு இருக்கிறது. இது தெரிந்தோ, தெரியாமலோ பி.ஜே.பி-க்கு சாதகமாக உள்ளது. அதையும் தாண்டி தி.மு.க கூட்டணி வெற்றிபெறும்.’’

- ஜி.சதாசிவம்
படங்கள். எஸ்.தேவராஜன், க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism