Published:Updated:

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

Published:Updated:
“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...
“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

தி.நகர் நடேசன் பூங்கா அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல். அந்த வழியாக வாக்குசேகரிக்க ஜீப்பில் வருகிறார், தமிழச்சி தங்கபாண்டியன். அதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. உடனே, மக்களைப் பார்த்து புன்முறுவலுடன் ‘‘சாரிங்க... சாரி... சாரி’’ என்று கூறுகிறார் தமிழச்சி. அடுத்த ஒரு சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல். அங்கேயும் மக்களைப் பார்த்து, மன்னிப்புகேட்கிறார் தமிழச்சி. அருகில் இருந்த கட்சிக்காரர் ஒருவர், “நீங்க ஓட்டுக்கேட்க வந்தீங்களா.... இல்லை, சாரி கேட்க வந்தீங்களா...” என்று கமென்ட் அடிக்க, அங்கு ஒரே சிரிப்பலை!

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாரம்பர்யம் மிக்க தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை தங்கப்பாண்டியன், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்; சகோதரர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர். ஜீப்பைவிட்டு இறங்கி தி.நகரில் உள்ள குடிசைப் பகுதிக்குள் நுழைந்த தமிழச்சிக்கு, அங்குக் கூடியிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பிரசாரத்துக்கு மத்தியில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உங்கள் தந்தை தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்காகச் சிறு வயதில் பிரசாரம் செய்திருப்பீர்கள். நீங்களே வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?”

“அப்பாவுக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்பது மட்டுமே முக்கியமானதாக இருந்தது. ஆனால், இது முற்றிலும் வேறு அனுபவமாக இருக்கிறது. தி.நகரில் முன்பின் தெரியாத ஒரு பெண் வந்து, பூங்கொத்து கொடுக்கிறார். பெசன்ட் நகர் குடிசைப் பகுதியில், ஓர் இளம் பெண் வந்து, ‘மேடம், உங்களை ஒரு போட்டோவுல பார்த்தேன். இதே போல மாலையை அணிஞ்சிருந்திங்க... உங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்...’ என்று சொல்லி, பாசி மாலை ஒன்றைப் பரிசளிக்கிறார். மிகவும் நெகிழ்ந்து விட்டேன். எங்கோ ஒரு ஜன்னலில் இருந்து ஒரு பெண் கை அசைக்கிறார். இவை எல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.”

“அண்ணா, நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன் போன்ற ஜாம்பவான்கள் வெற்றிபெற்றத் தொகுதி இது. இங்கு போட்டியிடுவதை எப்படி உணர்கிறீர்கள்?”

“மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி இது. அதேநேரத்தில், விளிம்புநிலை மக்களும் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் இருதரப்புக் காகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். வெறும் பிரசாரம் என்று போகாமல், அவர்களின் மனதோடு உரையாடுகிறேன். படித்தவர்களும் சரி, விளிம்பு நிலை மக்களும் சரி... மிகவும் சரியாக முடிவெடுத்து வாக்களிக்கக் கூடியவர்கள். அது எனக்குச் சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.”

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

“சிட்டிங் எம்.பி-யான ஜெயவர்தன், இந்த முறையும் அ.தி.மு.க-வின் வேட்பாளர். போட்டி கடுமையாக இருப்பதாகச் சொல்கிறார்களே?”

“நாம் என்ன செய்கிறோம், நம் செயல்திட்டம் என்ன என்பதில்தான் அதிகக் கவனம் செலுத்துகிறேன். தி.மு.க-வுக்கும், தலைவர் தளபதிக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, எனக்கு மிகப்பெரிய பலம். சிறப்பான பல வாக்குறுதிகள் கொண்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, இன்னொரு பலம். இதே தொகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எளிதில் அணுகக் கூடியவராகவும் இருக்கிறேன். இவ்வளவு பலம் இருக் கிறது. எனவே, எதிராளியைப்பற்றிக் கவலைப் படவில்லை.”

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

“பிரசாரத்தில் எந்த விஷயங்களைப் பிரதானமாக முன்வைக்கிறீர்கள்?”

“போகிற இடங்களில், மக்கள் என்ன சொல் கிறார்கள் என்பதைத்தான் நான் பார்க்கிறேன். ‘அங்கன்வாடி இல்லை’ என்கிறார்கள். ‘பாதாளச்சாக்கடை இல்லை’ என்கிறார்கள். ‘போக்குவரத்துப் பிரச்னை’ என்கிறார்கள். இந்த விஷயங்களை அந்த மக்களிடமே உட்கார்ந்து பேசி, என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை விளக்குகிறேன். ‘சிட்டிங் எம்.பி எதையுமே செய்யவில்லை’ என்று போகிற இடங்களில் எல்லாம் மக்களே சொல்கிறார்கள். அந்த வகையில், நமக்கு வேலை மிச்சம்.”

நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே மேடவாக்கம் பகுதியை வந்தடைந்தார், தமிழச்சி. அப்போது, இரவு 9.45 மணி. அங்குக் காத்திருந்த தி.மு.க மகளிர் அணியினரிடம், “சாரிங்க... (அட திரும்பவுமா..!) வர தாமதமாயிருச்சு. சமையல் எல்லாம் முடிச்சுட்டீங்களா... இனிமேதான் சமைக்கணுமா?” என்று தமிழச்சி கேட்க, “பரவாயில்ல மேடம். நீங்க வர்றதுனால சமையலை முடிச் சுட்டுத்தான் வந்தோம்..” என்றார்கள். ஒரு பெண் தன் கைக்குழந்தையைத் தூக்கிவந்து பெயர்வைக்குமாறு சொல்ல... ‘தமிழ்சுவை’ என்று பெயர்வைத்தார் தமிழச்சி.

- ஆ.பழனியப்பன்
படங்கள்: ப.சரவணகுமார், தே.அசோக்குமார், க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism