Published:Updated:

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...
பிரீமியம் ஸ்டோரி
மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

Published:Updated:
மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...
பிரீமியம் ஸ்டோரி
மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...
மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

ட்சி தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்ற இரண்டு பெரும் தேர்தல் களங்களைக் கூட்டணியின்றி தனித்துச் சந்திக்கிறது மக்கள் நீதி மய்யம்! தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாதது, பட்டதாரி வேட்பாளர்கள், வித்தியாசமான பிரசார மேடைகள், உரைக்கு இடையே காணொளி - குறும்படம் வழியாகப் பரப்புரை என்று ஏகத்துக்கும் புதுமைகாட்டுகிறது மக்கள் நீதி மய்யம். மத்திய சென்னையின் ம.நீ.ம வேட்பாளரும் நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்களைப் பற்றி..?”

‘‘நான் எம்.எஸ்.சி, எம்.பில் படித்திருக்கிறேன். குறிப்பாகக் குழந்தைகள் நலத்தைப் பேணும், அவர்கள் அறிவாற்றல் வளர்ச்சி பற்றிய Cognitive Developement பற்றிப் படித்திருக்கிறேன். நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும்கூட. தயாரிப்பாளர் சங்கத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத் தில் ரீஜினல் ஹெட் ஆக பணியாற்றி இருக்கிறேன். மன வளர்ச்சி குன்றியக் குழந்தைகளின் நலனுக்காகப் பல முயற்சிகளை எடுத்து வருகிறேன்.’’

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘உங்கள் அரசியல் ஆர்வத்தின் தொடக்கப்புள்ளி என்ன ?’’

‘‘பள்ளிப் பருவத்திலிருந்தே என் ஆளுமைத்திறனை வளர்க்க முயற்சி செய்துவருகிறேன். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், அதற்குத் தீர்வு காண முயற்சி செய்வேன். அநீதி எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்பது என் அடிப்படைக் குணம்.  இன்று தமிழகம், பெரும் தலைவர்களை இழந்து திக்கற்ற காட்டில் நிற்கிறது. இதற்கெல்லாம் தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவரால்தான் தீர்வு தர முடியும். அப்படித்தான் நம்மவரை நான் பார்க்கிறேன்.’’

‘‘மத்திய சென்னைத் தொகுதியில், நீங்கள் வேட்பாளராக நிற்பதற்குக் காரணம்?’’

‘‘கட்சித் தலைமை எனக்கு மத்திய சென்னைத் தொகுதியைத் தேர்ந் தெடுத்தது. எனக்காக விருப்பமனு தாக்கல் செய்த பலரும், அதையே தங்கள் விருப்பமாகப் பதிவிட்டிருந்தனர். மக்கள் நீதி மய்யத்தின் சென்னைப் பொறுப்பாளராக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பகுதியைப் பற்றியக் கள அறிவு  இருப்பதாலேயே எனக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதாகக் கருதுகிறேன்.’’

‘‘தயாநிதி மாறன் போன்ற பலம் வாய்ந்த வேட்பாளருக்கு எதிராக, உங்களை எப்படி வித்தியாசமாய் முன்னிறுத்தப்போகிறீர்கள்?’’

‘‘வாக்குக்கேட்பதற்கு மட்டுமே இன்றையத் தலைவர்கள் தொகுதிப் பக்கம் வருகிறார்கள். நான் அப்படி கிடையாது. தொகுதி மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது பிரச்னைகளை அறிந்து, அதற்குத் தீர்வு காண்பதை என் முக்கியப்பணியாகக் கருதுகிறேன். நிச்சயம் அதைச் செய்வேன். மக்களை அணுகும் எளிய முறையையே எனது தனித்துவமாக நினைக்கிறேன்.’’

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

‘‘மத்திய சென்னைத் தொகுதியின் முக்கியப் பிரச்னைகளாக நீங்கள் கருதுவது என்ன? அதற்கு என்ன தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?’’

‘‘தண்ணீர் தட்டுப்பாடு தொகுதியின் தலையாயப் பிரச்னை. அனைத்து வீட்டு வாசல்களிலும் காலிக்குடங்களைப் பார்க்கமுடிகிறது. எனவே, நீர் மேலாண்மையே எங்களின் தலையாயப் பணியாக இருக்கும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று கருதுகிறேன். அடுத்தப் பிரச்னை குடிப்பழக்கம். ஏராளமான குடும்பங்களை, குடிப்பழக்கம் சிதைத்துக்கொண்டிருக்கிறது. மக்கள், எங்களுக்கு  வாய்ப்பளித்தால், இந்த விஷயங்களுக்குத் தீர்வு காண்போம்.’’

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

‘‘திரைத்துறையினர் அரசியலுக்குவருவது குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதில்?’’

‘‘திரைத்துறையைத் தவிர்த்துவிட்டு, தமிழக அரசியல் வரலாற்றை எழுத முடியாது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே, தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். சினிமாவுக்கும், தமிழக மக்களுக்குமான தொடர்பு அத்தகையது. மக்கள் பிரச்னையின் குரலாக, பிரதிபலிப்பாகத்தான் சினிமா இருக்கிறது. எங்கள் தலைவர் கமல், இன்றைய அரசியல்குறித்தும், மக்கள்குறித்தும் தெளிவான பார்வை கொண்டவர். வேறு எந்த எதிர்பார்ப்புமின்றி, மக்கள் சேவைக்காக மட்டுமே, அவர் அரசியலுக்கு வருகிறார். தமிழகம் இன்று இருக்கிற சூழலில், அவரது அரசியல் பிரவேசம் மிகவும் அவசியமாகிறது.’’

‘‘மக்கள் நீதி மய்யத்தைப் பற்றிய மக்களின் புரிதல் என்னவாக இருக்கிறது?’’

‘‘மக்கள் எங்களை இப்போதுதான் அறிந்து கொண்டு இருக்கிறார்கள். கிராம சபை போன்ற மக்களின் பங்கேற்பு  சார்ந்தத்  திட்டங்களை கொண்டுசேர்ப்பதன் மூலம் இப்போதுதான் அவர்களை நெருங்கியிருக்கிறோம். கட்சி தொடங்கிய 13 மாதங்களிலேயே, தேர்தலைச் சந்திப்பது அசாத்தியமான சவால்தான். மாற்றம் தேவை என்பதை உணர்ந்துள்ள மக்கள், அதை மய்யம் தரும் என்று நம்புகிறார்கள்.’’

– ஜெனிஃபர் ம.ஆ.,
படம்: வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism