Published:Updated:

“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”

“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”
பிரீமியம் ஸ்டோரி
“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”

கடுகடுக்கும் காளியம்மாள்

“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”

கடுகடுக்கும் காளியம்மாள்

Published:Updated:
“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”
பிரீமியம் ஸ்டோரி
“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”
“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”

“அண்ணே... உங்க புக்குல வி.ஐ.பி-ங்க பேட்டிங்கதான் போடுவீங்களா... எங்களை மாதிரி சாமானிய வேட்பாளர்களின் பேட்டி எல்லாம் போடமாட்டீங்களாண்ணே...” வெள்ளந்தியாகக் கேட்கிறார் வட சென்னைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எளிய மீனவக் குடும்பத்துப் பெண்மணி காளியம்மாள். கணவர் கடலுக்குப் போக... இரு குழந்தைகளுக்குத் தாயாகக் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் காளியம்மாள். இப்போது இவருக்குச் சமூகத்தைக் கவனித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வட சென்னையில் போட்டியிடுவதால், மூலக்கடை பகுதியில் சிறு அறை எடுத்துத் தங்கி, தினமும் பிரசாரத்துக்குச் செல்கிறார் காளியம்மாள். அவரிடம் பேசினோம்.

“உங்கள் குடும்பத்தைப்பற்றிச் சொல்லமுடியுமா?”

“சொந்த ஊர் நாகப்பட்டினம். அப்பா, மீனவர். கட்டுமரத்துல மீன் பிடிச்சிட்டு வருவார். அதை விற்பதெல்லாம் அம்மாதான். வீட்டை மட்டும் பார்த்துக்கிற ஆள் இல்லை அம்மா. அக்கம்பக்கம் எந்தப் பிரச்னைனாலும் முன்னாடி நிப்பாங்க.”

“நாம் தமிழர் கட்சியில் எப்போது சேர்ந்தீர்கள்?”

“கஜா புயல் பாதித்த பகுதியில் வேலைபார்த்தப்ப, சரியான நிவாரணம் வழங்கலைன்னு நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. ஊர்க்காரங்க, என்னை அதுல பேசச் சொன்னாங்க. நானும் பேசினேன். மற்ற அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் செயல்பாடுகளும் இருக்குது. அதனால், அந்தக் கட்சியில் இணைஞ்சுட்டேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”

“நாடாளுமன்ற வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டது எப்படி?”

“கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர் வேட்பாளர்னா பரவாயில்ல... திடீர்னு என்னை வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுத் திருக்கிறதாச் சொன்னப்ப, அதிர்ச்சியாத் தான் இருந்துச்சு. குடும்பத்துல ஆலோசிச்சேன். அப்பா, அ.தி.மு.க ஆதரவாளர். கொஞ்சம் தயங்கினார்... நான் அப்பாகிட்ட, ‘நம்மப் பிரச்னைகளை உங்கக் கட்சித் தலைவர்கிட்ட போய் பேச முடியுமா? ஆனா, எங்க தலைவர்கிட்ட பேச முடியும். அதனால தைரியமாக நிக்கிறேன்’னு சொன்னேன். அவரும் ‘சரி’ன்னுட்டார்.”

“மனநல மருத்துவர் ஷாலினி, நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்களைப்பற்றி, ‘இனிப்பாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுறாங்க’ என்பதாகச் சொன்னதைப் பார்த்தீர்களா?”

“பார்த்தேன். ஒரு பெண்ணாக இருந்து, அவங்க அப்படிச் சொன்னது பெரிய தப்பு. அவங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். கட்சித் தலைவர்கள் பேசினா பெண்கள் மயங்கிடுவாங்களா? அவங்களும் ஒரு பொண்ணு தானே... அவங்க அப்படி மயங்கிடுவாங்களா என்ன? எல்லாக் கட்சியிலேயும் பெண்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் அந்தக் கட்சித் தலைவர்கள் பேச்சுல மயங்கிப்போய்தான் அந்தந்தக் கட்சிகளுக்கு வந்தாங்களா? ஒரு கட்சியின் கொள்கைகள் பிடித்துப்போய் அல்லது அந்தக் கட்சியின் பாரம்பர்யத்தில் நம்பிக்கைவைத்துத்தான் பெண்கள் அரசியலுக்கு வர்றாங்க. அதைக் கொச்சைப்படுத்தக்கூடாது.’’

“பெரியக் கட்சிகளின் வேட்பாளர்களுடன் போட்டியிடு கிறீர்கள். உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?”

“மக்கள் முன்ன மாதிரி இல்லை. ‘காசு கொடுத்து ஓட்டு கேட்கிறவங்க, நம்ம பிரச்னையைச் சரிசெய்ய மாட்டாங்க’னு மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. களத்துல நிக்கிற பெரியக் கட்சிகளின் அதிகாரம் போகணும்னு 80 சதவிகித மக்கள் நினைக்கிறாங்க. அப்படி நினைக்கிற மக்களின் ஓட்டுகள் எனக்குக் கிடைக்கும்னு நம்புறேன்.’’

“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா?”

“பெரிய கட்சிகளின் நம்பிக்கையே பொய்த்துவிடுகிறது. எதைவைத்து இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

“மக்கள் அவங்கள்ல ஒருத்தியாக என்னைப் பார்க்கிறாங்க. பார்த்தவுடனே கையைப் பிடிச்சிட்டு, பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கிட்ட பேசுற மாதிரி பேசுறாங்க; பிரச்னைகளைப் பகிர்ந்துக்கிறாங்க. இது போதாதா!”  

“ஆனால், தேர்தலுக்குக் கடைசி இரண்டு நாள்களில் கட்சிகள் வகுக்கும் வியூகம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பார்களே?’’

“யாருக்கு ஓட்டுப் போடுறதுனு மக்கள் குழப்பமாக இருக்கும்போது, கடைசி நாளில் பணப்பட்டுவாடா நடந்தால், நீங்கள் சொல்றது மாதிரி நடக்கும். ஆனால், இங்கே மக்கள் தெளிவா இருக்காங்க. தினமும் அவங்க குடத்தைத் தூக்கிட்டுத் தண்ணிக்காக அலையுறாங்க. வீதியிலேயே சாக்கடை ஓடுறதும்... அதுலேயே குழந்தைங்க விளையாடுறதும், குடியிருக்கிற வீட்டுக்குப் பட்டா கிடைக்காம அல்லாடுறதும்னு இங்க ஏகப்பட்ட பிரச்னைகள். அதனால, அரசியல் கட்சிகளின் கடைசி நேர வியூகம் இங்கு எடுபடாது.”

“உங்கள் தொகுதியின் மற்ற வேட்பாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

“நியாயமான முறையில் தேர்தலை அணுகுங்கள்.”

- விஷ்ணுபுரம் சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism