Published:Updated:

குற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை!

குற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி

“தமிழகத்தில் முக்கியக் கட்சிகளின் வி.ஐ.பி வேட்பாளர்கள் சிலர்மீது வழக்குகள் இருப்பதால், அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவேண்டும்” என்று தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நவுசத் அலிகான் என்பவர் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, குற்றவழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குமேல் தண்டனைப் பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், ‘ஒருவர்மீது குற்றவழக்கு பதிவுசெய்யப்பட்டாலே சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும்’ என்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து வாதிடுபவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், ‘மத்திய சென்னையில் தி.மு.க சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறன், சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், தர்மபுரியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், ராமநாதபுரத்தில் பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், பெரம்பலூரில் தி.மு.க-வின் சின்னத்தில் போட்டியிடும் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் ஆகியோர்மீது வழக்குகள் இருப்பதால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கவேண்டும்’ என்று தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நவுசத் அலிகான் கோரிக்கைவிடுத்துள்ளார்.

குற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை!

அவரிடம் பேசினோம். “தயாநிதி மாறன்மீது பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நயினார் நாகேந்திரன், தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, கிரானைட், தாதுமணல் எடுப்பதற்கு முறைகேடான அனுமதி வழங்கி அரசுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதான வழக்கு நிலுவையில் உள்ளது. அன்புமணிமீது, அவர் மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதுகுறித்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. பாரிவேந்தர் தன் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் பலகோடி ரூபாய் மோசடிசெய்ததாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. கார்த்தி சிதம்பரம்மீது பல்வேறு வழக்குகள் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் எம்.பி-யாக வெற்றி பெற்ற பிறகு, அவர்கள்மீதான வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும். இதனால், மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் நஷ்டம் ஆகும். அதைத் தவிர்க்க இப்போதே அவர்கள் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும்’’ என்கிறார்.

சட்டரீதியாக இதனைத் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் முடிவு செய்யட்டும்... ஆனால், தார்மிகரீதியான பொறுப்பு, அந்தந்தக் கட்சிகளுக்கு வேண்டாமா?

- தே.பாலமுருகன், படம்: சாய்.தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism