Published:Updated:

மனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா! - களத்தில் மோதும் குடும்பம்!

மனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா! - களத்தில் மோதும் குடும்பம்!
பிரீமியம் ஸ்டோரி

‘நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியனைத் தோற்கடிக்க வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்துடன் தேர்தல் கோதாவில் களமிறங்கியிருக்கிறார், பால் சாலமோன் பாண்டியன் என்கிற பி.எஸ்.பாண்டியன். இவர், அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஹெச்.பாண்டியனின் மூத்த சகோதரர் என்பதுதான் பரபரப்பின் உச்சம்.
நெல்லைத் தொகுதியில், பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டதும் அவரை எதிர்ப்பதற்காகக் கோவையிலிருந்து நெல்லைக்கு வந்து மனுத்தாக்கல் செய்துள்ளார் பி.எஸ்.பாண்டியன். இதுகுறித்து பால் சாலமோன் பாண்டியனிடம் பேசினோம்.

மனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா! - களத்தில் மோதும் குடும்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எனக்கு 78 வயதாகிறது. நான் பொருளாதாரம் படித்திருக்கிறேன். எல்.ஐ.சி-யில் டெவலெப்மென்ட் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றேன். நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பாக என் தம்பி பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பி.ஹெச்.பாண்டியன், ‘எங்களுடையக் குடும்பம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்குச் சேவையாற்றவே வந்திருக்கிறோம். அதனால், மனோஜ் பாண்டியனின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.

அதில் உண்மையில்லை என்பதால், உடனடியாகக் கிளம்பிவந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டேன். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள கோவிந்தபேரி கிராமத்தில், என் தாயார் ஜாய் பெல்ஸ் பாண்டியனின் பெயரில் இருந்த எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டவர், எப்படிப் பொதுமக்களுக்கு நேர்மையாகச் சேவையாற்றுவார்?

மனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா! - களத்தில் மோதும் குடும்பம்!

மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வேட்புமனுவில் உண்மைகளை மறைத்திருக்கிறார். அவர் தாக்கல் செய்திருக்கும் சொத்துக்கணக்குத் தவறானது. அதில் நிறையச் சொத்துகளை மறைத்துவிட்டார் என்பதால், வேட்புமனு பரிசீலனையின்போது ஆட்சேபனைத் தெரிவித்தேன். ஆத்திரம் அடைந்த அவர், எனக்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார். அதுபற்றி தேர்தல் ஆணையத்திடமும் மாநகரக் காவல்துறை ஆணையரிடமும் புகார் செய்திருக்கிறேன்.

நான் எந்த மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன். கடந்த 1984 சட்டமன்றத் தேர்தலில், என் தம்பி பி.ஹெச்.பாண்டியனை எதிர்த்து தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை மனோஜ் பாண்டியனைத் தோற்கடிப்பேன். அதற்காகப் புதிய வியூகங்களுடன் களமிறங்கியிருக்கிறேன். ‘மக்களுக்குச் சேவையாற்ற நல்லவர்கள் வரவேண்டும். பொய்யானவர்களை அடையாளம் காட்ட வேண்டும்’ என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் சுயேச்சையாகப் போட்டியிட்ட போதிலும், மக்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார்.

சபாஷ்.... சரியான போட்டி!

- பி.ஆண்டனிராஜ்,   படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism