Published:Updated:

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

Published:Updated:
அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்குவந்தபின், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கணக்கில்காட்டப்படாத பணம் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கம், தங்கம், வெள்ளி, மது, பரிசுப் பொருள்கள் என இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 250 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. கண்டிப்பாகத் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டியே தீர வேண்டும். வருமான வரித்துறைக்கும் சபாஷ் சொல்லலாம்தான். ஆனால், ‘ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்று ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பாரபட்சம் காட்டினால், என்னவென்று சொல்வது? அந்த வகையில் தேர்தல் ஆணையமும், வருமானவரித் துறையும் ஆளும் அரசுக்குக் கைப்பாவையாக இருந்துகொண்டு அடாவடியாகவும், எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து ஆட்டிப்படைப்பவையாகவும் இருக்கின்றன! 

தற்போது பணம், தங்கம், வெள்ளி என்று இவர்கள் கணக்குக்காட்டுவது பெரும்பாலும் வணிகர்கள், தங்க நகை வியாபாரிகளிடமிருந்து அல்லது சாதாரண மக்களிடமிருந்து கைப்பற்றியவைதான். இவை தவிர, தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் பிடிபட்டது 11.53 கோடி ரூபாய். திடீரென அதன் மதிப்பு, 30 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அரூரில், அரசுப் பேருந்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பிடிபட்டிருக்கிறது. அந்தப் பணமும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி செலவுகளுக்காக, தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டது என்கிறார்கள்.

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரனிடம் இருந்து சுமார் இரண்டேகால் கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் மாநில நிர்வாகி ராஜா, தி.மு.க–வைச் சேர்ந்த  திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் வருமானவரித் துறை ரெய்டு நடந்திருக்கிறது. இப்படிச் சுற்றிச்சுற்றி தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணிக் கட்சியில் இருப்பவர்களின் வீடுகளில் மட்டுமே வருமானவரித் துறை சோதனை நடக்கிறது. எக்கச்சக்கமாய் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

‘இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ‘எதிர்க்கட்சியினர் மட்டும்தான் இப்படி குறுக்கு வழியில் வெற்றி பெறப் பார்க்கிறார்கள்; அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சி வேட்பாளர்கள் அனைவருமே, நியாயமாகத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்கள்’ என்பது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் முயற்சி செய்வதைத்தான் நேர்மையான அரசியல் செயற்பாட்டாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள், “துரைமுருகன் மகன் போட்டியிடும் அதே வேலூர் தொகுதியில் ஆளும்கட்சிக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் எவ்வளவு செலவழிக்கிறார் என்பது தேர்தல் ஆணைய அதிகாரிகளும், வருமானவரித் துறை அதிகாரிகளும் அறியாத விஷயம் இல்லை. அங்கே ஆளுங்கட்சியின் தேர்தல் அலுவலகங்களில், பகிரங்கமாக ‘கவர்’ போட்டு பணப்பட்டுவாடா நடக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் தேர்தல் பட்ஜெட்டைக் கேட்டாலே தலைசுற்றுகிறது. ஆனால், ஆளும்கட்சி தரப்பிடமிருந்து எந்தப் பணத்தையும் தேர்தல் ஆணையமோ, வருமானவரித் துறையோ கைப்பற்றவில்லை. ‘கேப்டனைத் தொட்டால் என்னவாகும் என்பதற்கு, துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டுதான் சாட்சி’ என்று பகிரங்கமாகவே பிளாக்மெயில் செய்கிறார் ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த்தின் மகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் நடராஜன் வீட்டிலும், அவரின் நண்பர் வீட்டிலும் சேர்த்து, 16 கோடி ரூபாயைக் கைப்பற்றியது வருமானவரித் துறை. தொடர்ந்து பத்து மாதங்களாக, ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கி லிருந்து அந்த ஒப்பந்ததாரருக்கு மாதந்தோறும் 25 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும், அதில் 250 கோடி ரூபாய் ரொக்கப்பணம் அவர் வசம் இருப்பதாகவும் தகவல் கிடைத்துத்தான் அந்தச் சோதனையை வருமானவரித் துறை தொடங்கியது. வழக்கமாக, இப்படியான ரெய்டுகள், மூன்று நாள்களுக்குக்கூட நீடிக்கும். ஆனால், அந்த ஒப்பந்ததாரர் வீட்டில் காலையில் தொடங்கிய ரெய்டு, மாலையில் அவசரமாக முடித்துக்கொள்ளப்பட்டது. ‘பெயருக்கு ஒரு தொகையை எடுத்துக்கொண்டு ரெய்டை முடிக்கச்சொல்லி உத்தரவு வந்தது’ என்கிறார்கள். அப்படிப் பெயருக்குக் கணக்குக்காட்டப்பட்ட தொகைதான், இந்த 16 கோடி ரூபாய்” என்றார்கள் கோபத்துடன்!

இதற்கிடையே, “ரெய்டில் சிக்கிய மாநகராட்சி ஒப்பந்ததாரர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர்” என்று குற்றம்சாட்டியிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், “போலீஸார் புகார் கூறியதால்தான், துரைமுருகன் வீட்டில் ரெய்டுநடத்தினோம் என்று வருமானவரித் துறையினர் கூறுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், அமைச்சர்களின் வீடுகளிலும், அவர்களின் பினாமிகள் வீடுகளிலும் கோடி கோடியாகப் பணம் வைத்துள்ளனர் என்று நான் சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்துப் பேசும் சமூக செயற்பாட் டாளர்கள், “துரைமுருகனுக்கு நெருக்கமான வர்களின் வீட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தியதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அதே நியாயம், ஸ்டாலினின் கேள்வியிலும் இருக்கிறது. அவர் சொல் வதைப்போல, ‘வருமானவரித் துறை தன்னாட்சி பெற்ற அமைப்பா அல்லது பிரதமர் அதை தவறாகப் பயன்படுத்துகிறாரா’ என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை. ஏனெனில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி, அமைச்சர்களின் வீடுகள், கிறிஸ்டி நிறுவனம் என்று பல இடங்களிலும் நடந்த ரெய்டுகள் தொடர்பாக, பல மாதங்களாகியும் எந்தத் தகவலும் வெளியே வரவேயில்லை. ஆனால், துரைமுருகனுக்கு நெருக்கமானவர் வீட்டில் நடந்த ரெய்டின் காணொலிக் காட்சிகள் அடுத்த அரை மணி நேரத்தில் ரிலீஸ் செய்யப் படுகின்றன.

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

இதேபோல, தாராபுரம் – உடுமலை சாலையில் காரத்தொழுவில் உள்ள தொழிலதிபரின் வீட்டிலும் ரெய்டு நடக்கும்போதே, எங்கிருந்தோ தகவல் வந்து, அரைகுறையாகச் சோதனையை முடித்து வெளியேறுகிறார்கள் வருமானவரித் துறை யினர். சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரும், காரத்தொழுவு தொழிலதிபரும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களிடம் இருந்த பணம், ஆளும் கட்சியினரால் பதுக்கப்பட்டப் பணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குக் குறைந்தது 30 கோடி ரூபாய், அதிகபட்சம் 100 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க பட்ஜெட் போட்டிருப்பதும், 18 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குக்கு இரண்டாயிரம் ரூபாய்வரை பணம் தருவதற்கான முயற்சிகள் நடப்பதும் ஊரறிந்த ரகசியம். இதில் தொடர்புடைய ஆளும்கட்சியினர் எவருடைய வீட்டிலும் ரெய்டு நடக்கவில்லை. முன்னதாக அமைச்சர் கே.சி வீரமணிக்கு நெருக்கமானவர் களின் வீடுகளிலும், அவரது திருமண மண்டபத் திலும் மட்டும் ஐ.டி ரெய்டு அரைகுறையாக நடந்தது. அதுவும் அப்போது அவர் பி.ஜே.பி கூட்டணியை எதிர்த்தார்; அவரைப் பயமுறுத்தவே அந்த ரெய்டு என்கிறார்கள்.

ஏற்கெனவே, கடந்த ஓராண்டாக தி.மு.க–வின் முக்கியப் பிரமுகர்களுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள பல்வேறு நிறுவனங்களிலும் அடுத்தடுத்து வருமானவரித் துறை ரெய்டு நடத்தப்பட்டது. அங்கிருந்து பணம் வெளிவராதபடித் தடுத்து விட்டதாகச் சொல்லப் பட்டது. இப்போது, நேரடியாக தி.மு.க வேட் பாளர்கள், முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் ரெய்டு நடந்துவருகிறது. இந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் யாரும் பணத்தை வெளியே எடுக்க விடாமல் தடுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில், எட்டுத் தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே, ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு இருக்கிறது. ஆளுங்கட்சிகளின் மீதான அதிருப்தி, அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் உள்ளிட்ட பல காரணங்களால் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அதனால், இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பணத்தை மட்டுமே, அ.தி.மு.க அரசு நம்பியிருக்கிறது. எதிர்க்கட்சியினர் பணம் கொடுப்பதை முற்றிலும் தடுத்து விட்டு, அ.தி.மு.க சார்பில் தரப்படும் பணத்தை மட்டும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்துவிட்டால், தேர்தலில் அ.தி.மு.க வென்றுவிடும் என்று கணக்குப்போடுகிறார்கள். அதற்கான வேலைகளைத்தான் தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும், காவல்துறையும் கரம்கோத்துக் கச்சிதமாகச் செய்கின்றன” என்கிறார்கள்.

ரெய்டுகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் சட்டமன்றத் தொகுதிகளில், அ.ம.மு.க வேட்பாளர்களின் பெயர்களில் ஆளும் கட்சியால் நிறுத்தப்பட்டுள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னத்தைக்கொடுத்து, குழப்பத்தை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எந்த அனுமதியும் இல்லாமல் தேர்தல் நேரத்தில், ‘நமோ டி.வி’ ஒளிபரப்பைத் தொடங்குகிறது. மோடியின் ‘பயோ பிக்’ வெளியாகிறது. இவற்றைப் பற்றி, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டால், ‘அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்கிறார்கள். கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணியில், ஒப்பந்தம் போட்டுக்கொள்ளாதக் கட்சிகளாகத் தேர்தல் ஆணையமும், வருமானவரித் துறையும் இணைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ‘நடக்கப்போவது ஜனநாயகத் தேர்தல் இல்லை; தில்லுமுல்லு தேர்தல்’ என்று மக்கள் வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்!

- சே.சேவியர் செல்வக்குமார்
அட்டை ஓவியம்:  ஹாசிப்கான்

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்