Published:Updated:

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!

ஆன்லைனில் உங்கள் கணிப்புகளைப் பதிவுசெய்ய... http://bit.ly/JVElectionContest

ஸ்மார்ட் போன் மூலம் உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்ய கீழே இருக்கும் ‘‘QR Code’-ஐ ஸ்கேன் செய்யவும்...

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!

‘அடுத்து இந்தியாவை ஆளப் போகிறவர் யார்?’ என்ற கேள்விக்கான விடையைத் தேடு வதற்காக நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு இடையே, ‘அடுத்து தமிழகத்தை ஆளப்போகிறவர் யார்?’ என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில், அ.தி.மு.க வெற்றிபெறவிருக்கும் தொகுதிகளைப் பொறுத்து தான் இந்த ஆட்சியின் ஆயுள் தீர்மானிக்கப்படும். அதனாலேயே, இந்த இடைத்தேர்தல், அகில இந்திய அளவில் உற்றுநோக்கப்படுகிறது. ‘எட்டுத் தொகுதிகளி லாவது கட்டாயம் வென்றால்தான் ஆட்சியைத் தக்க வைக்க முடியும்’ என்று அ.தி.மு.க-வும், ‘ஒரு தொகுதியில்கூட ஆளும்கட்சி ஜெயித்துவிடக் கூடாது’ என்று தி.மு.க-வும் ஆக்ரோஷத்துடன் களத்தில் மோதுகின்றன. இவர்களுக்கு இணையாக மல்லுக்கட்டுகிறது,டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க. தினகரனின் ஆதரவாளர்கள் என்பதற்காகவே எம்.எல்.ஏ-க்கள் பலரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, பதவிகளை இழந்தனர். அதனால்தான் இந்த இடைத்தேர்தலே வந்திருக்கிறது.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!

சரி, ‘பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’ என்பதைத் தமிழக அரசியலை உற்று நோக்கி வரும் ஜூனியர் விகடன் வாசகர்களாகிய உங்களைவிட வேறு யார் மிகச் சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்! அதனாலேயே அந்தப் பெரும் பொறுப்பு, இப்போது உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. என்ன, போட்டிக்குத் தயாராகிவிட்டீர்கள்தானே... கணிப்புக் கில்லாடிகளாக வெற்றியைத் துல்லியமாகத் தீர்மானிக்கும் வாசகர்களுக்கு 1,50,000 ரூபாய் பரிசும் காத்திருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூப்பனில் உள்ள கேள்விகளுக்கு, உங்கள் பதில்களை டிக் செய்து அனுப்ப வேண்டியது மட்டுமே.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி!

போட்டிக்கான முக்கிய விதிமுறைகள்

• கூப்பன்கள்/ஆன்லைன் படிவங்கள்/ஸ்மார்ட்போன் படிவங்கள் என அனைத்துக் கூப்பன்களும் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 17.04.2019. இந்தத் தேதிக்குப் பிறகு வரும் கூப்பன்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அவை செல்லாதவையாகக் கருதப்படும்.

• இந்தக் கூப்பனை ஜெராக்ஸ் எடுத்தும் விடைகளைப் பூர்த்திசெய்து அனுப்பலாம். வேறு தாளில் எழுதி அனுப்பக் கூடாது.

• ஒருவரே வெவ்வேறு கணிப்புகள் கொண்ட எத்தனைக் கூப்பன்களை வேண்டுமானாலும், பூர்த்திசெய்து அனுப்பலாம். ஆன்லைன் மற்றும் ஸ்மார்ட்போன் படிவங்களுக்கும் இது பொருந்தும்.

• குறிப்பிட்ட ஒரு பரிசுக்கு ஒருவருக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டால், பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

• ஆசிரியரின் முடிவே இறுதியானது.

கூப்பன்கள் அனுப்பவேண்டிய முகவரி: கணிப்புக் கில்லாடிகள் - இடைத்தேர்தல் வாசகர் போட்டி,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 2 உங்கள் கூப்பன் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 17.04.2019