Published:Updated:

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

Published:Updated:
வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!
வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி தொகுதியில், மீண்டும் வெற்றிபெறும் ஆவலில் ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். திறந்த ஜீப்பில் வாக்குச் சேகரித்துக்கொண்டே வந்தவர், மதிய வேளையில் தொண்டர் ஒருவரின் வீட்டில் உணவருந்த அமர்ந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில், ‘மதம் சார்ந்த 37 ஆண்டுக்கால பகையைத் தீர்த்துவைப்பேன்’ என்று பிரசாரத்தில் கூறுகிறீர்கள். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’’

‘‘37 வருடங்களுக்கு முன்பு மதம் சம்பந்தமான பிரச்னைகள் நடந்தன (மண்டைக்காடு கலவரம்). அந்தப் பிரச்னைகளை அடிப்படையாகவைத்து ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.  இந்தச் சூழ்ச்சிதான் இந்த மண்ணை வேறுபடுத்திவைத்திருக்கிறது. அதிலிருந்து மாற்றம் கொண்டுவரக்கூடிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன்.’’

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ‘என்னை வெளிநாட்டுப் பறவை என்று கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் போட்டியிடும் பி.ஜே.பி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை என்னசொல்வார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாரே?’’

‘‘அதை அவர் தமிழிசையிடம் சென்று கேட்கச் சொல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை வசந்தகுமார் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பறவை போன்றவர். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்துவிட்டுப் போகக்கூடிய லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணியைப் போலத்தான், இதுவரை அவர் வந்துவிட்டுப் போயிருக்கிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில், குமரி மாவட்ட மக்களின் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஓடிப்போனவர் வசந்தகுமார். அப்போது ஓடிப்போய் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிட்டு, இப்போது அந்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு இங்கு வருகிறார். அப்படியானால் அவரை எப்படிச் சொல்லுவீர்கள்?’’

‘‘ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டி யிடுவதால் தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்படுமா?’’

‘‘ராகுல் காந்தி, ‘வடமாநிலங்களில் எங்கு போட்டியிட்டாலும் தோல்வி அடைந்து விடுவோம்’ என்று பயப்படுகிறார். இங்கு வந்தால், தப்பிவிடலாம் என்று வயநாட்டுக்கு வந்திருக்கிறார். ‘அவரை ஜெயிக்க விடமாட்டோம்’ என்று மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மார்க்சிஸ்ட் கட்சியோ ‘ராகுல் காந்தி, பிரதமர் ஆகவேண்டும்’ என்கிறார்கள். இந்த இரட்டை வேடம் எதற்கு?’’

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

‘‘தேர்தல் ஆணையமும் வருமானவரித் துறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் திட்டமிட்டுச் செயல்படுவதாக எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்களே?’’

‘‘இது தவறான கருத்து. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே எல்லா விஷயங்களும், தேர்தல் ஆணை யத்தின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது. அரசுக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது.’’

‘‘ஏழை இந்து மாணவர்களின் கல்வி உதவித் திட்டத்துக்காக, ஜூலை மாதம் போராட்டம் நடத்திய நீங்கள் அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசவில்லையே?’’

‘‘ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான முயற்சிகளை நான் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதேநேரம் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கொடுப்பது நிறுத்தப்படக் கூடாது.’’

‘‘2015-ம் ஆண்டு வர்த்தக துறைமுகத்துக்கு அனுமதிபெற்று வந்தீர்கள். இதுவரை அடிக்கல் நாட்டப்படாதது பின்னடைவுதானே?’’

‘‘துறைமுகத்துக்கு எதிராக எத்தனைப் போராட்டங்கள் நடந்தன என்பது தெரியும். அதனால்தான் தாமதம் ஏற்பட்டது. இப்போது துறைமுகத்துக்கான நிறுவனம் அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முழுப் பணிகளும் தொடங்கப்படும்.’’

‘‘வர்த்தகத் துறைமுகத்தால், மீன்பிடித் தொழில் பாதிக்கும் என்று மீனவர்கள் அச்சப்படுகிறார்களே?’’

‘‘வர்த்தகத் துறைமுகம் அமைக்கப்பட்டதால், மீன்பிடித்தொழில் வளர்ச்சிபெறுமே தவிர குறையாது.’’

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

‘‘ஒகி புயல் சமயத்தில் உங்கள் பணியில் சுணக்கம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?’’

‘‘குளச்சல் போன்ற மீனவக் கிராமங்களுக்குச் சென்றேன். தூத்தூர்போன்ற சில கிராமங்களுக்குச் செல்ல முடியவில்லை. சில மதவாதிகள், அரசியல்  கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சதி செய்து, மீனவர் கிராமங்களில் என்னை உள்ளே விடக்கூடாது என்றார்கள். ஒகி புயலில் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து, அதை ஏற்றுக்கொள்ள வைத்தேன். பத்து நாள்கள் ஒகி புயலுக்கான பணிகளைச் செய்தேன். மத்திய அரசு மூலம் நிதி கொண்டு வருவதற்காகவும் முயன்றேன்.’’

‘‘மத்திய அமைச்சராக இருந்தும் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் நீங்கள் கொண்டுவரவில்லையே?’’

‘‘மாவட்டத்துக்குக் கட்டுமானங்கள் முதலில் முக்கியம். அடித்தளம்போடாமல் வீடு கட்ட முடியுமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்குத் தேவையான கட்டுமானங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இனி வரும் ஐந்து ஆண்டு களில் தொழிற்சாலைகள் கொண்டுவருவோம்.’’

- ஆர்.சிந்து, படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism