Published:Updated:

அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!

அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி

அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி

Published:Updated:
அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!
அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!

கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே, பதில்களைத் தெறிக்கவிடுவது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஸ்டைல். தேனி தொகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘தேனி தொகுதி நீங்கள் விரும்பிக் கேட்டதா... தலைமை முடிவுசெய்ததா?’’

‘‘நான் ஈரோட்டில் நிற்பதாகச் சொன்னேன். வைகோ-வுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆரூணுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தேனியில் நிற்கிறீர்களா என்று கேட்டார்கள். சந்தோசமாகக் கிளம்பி வந்துவிட்டேன்.’’

‘‘முன்னாள் எம்.பி ஆரூணுக்குப் பதிலாக, தேனியில் நீங்கள் நிறுத்தப்பட்டிருப்பது மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘உண்மைக்குப் புறம்பான செய்தி அது. எந்தத் தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்று கட்சித் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, நான்கூட, ‘ஆரூணை தேனியில் நிறுத்தலாம்’ என்றேன். கடைசியில், தனக்கு உடல்நிலை சரியில்லை என அவரே ராகுல் காந்திக்குச் செய்தி அனுப்பினார். மற்றபடி, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!

‘‘தேனி தொகுதியில், உங்களுக்கான ப்ளஸ்... மைனஸ்?’’

‘‘ஓ.பன்னீர்செல்வமும், அவருடைய மகனும்தான் என்னுடைய ப்ளஸ். அவர்களுக்குத் தேனி மக்களிடையே அவ்வளவு அதிருப்தி இருக்கிறது. மைனஸாக நான் எதையும் நினைக்க வில்லை.’’

‘‘ஓ.பி.எஸ்., அவரது மகன், மோடி என்று விமர்சிக்கிறீர்கள். தங்க தமிழ்ச்செல்வனை மட்டும் விமர்சிக்காதது ஏன்?’’

‘‘என்னை எதிர்த்துப் போட்டியிடுகிற 29 பேரும் எனக்குப் போட்டிதான். தனிப்பட்ட முறையில் நான் யாரையும் விமர்சிக்க மாட்டேன். என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததால் மட்டுமே நானும், பன்னீர்செல்வத்தையும் அவரது மகனைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தேன்.’’

‘‘ஆளும் தரப்பினர்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குப் பணம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள் என்றால், காங்கிரஸும் அதேபோலத் திட்டம் அறிவிக்கிறதே?’’

‘‘அப்படி இல்லை. மக்களின் வாழ்வாதாரம் மோசமாக இருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருப்பவர்களைக் கண்டறிந்து மாதம் ஆறாயிரம் ரூபாய் கொடுப்பது அவர்களைக் கவர்வதற் காகவோ, ஓட்டுக்காகவோ அல்ல. அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகத்தான்.’’

‘‘மக்களிடம், ‘இரண்டாயிரம் ரூபாய் வாங்காதீர்கள்… ஆறாயிரம் ரூபாய் வாங்குங்கள்’ என்று நீங்கள் பிரசாரம்செய்வது சரிதானா?’’

‘‘ஆரத்தி எடுத்தால் தட்டில் ஐந்நூறு ரூபாய் போடுகிறார்கள். இதைக் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் கண்டுகொள்வதில்லை. அவர்களும் கொடுக்காமல் இருப்பதில்லை. அதனால்தான் கொடுக்கும்போது ஐயாயிரம், பத்தாயிரம் என வாங்கிக்கொண்டு கை சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்தேன். அவர்கள் கொடுப்பது அவர்களது அப்பன் வீட்டுப் பணமா... அல்லது காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து உழைத்துச் சம்பாதித்ததா? எல்லாம் மக்கள் பணம்தானே?’’

‘‘தேனி மாவட்ட தி.மு.க-வில் கோஷ்டி பூசல்கள் காரணமாகத் தேர்தல் பணிகள் மந்தமாக நடப்பதாகக் கூறப்படுகிறதே?’’

‘‘நான் பார்த்தவரை தேனி மாவட்ட தி.மு.க-வினர் ஒற்றுமையாகத் தேர்தல் பணி செய்கிறார்கள்.’’

‘‘டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தியவர் நீங்கள். இந்தத் தேர்த லில், மதுக்கடைகளை மூடுவதுபற்றி உங்கள் கூட்டணி யில் யாருமே வாய்திறப்பதில்லையே… குடிமகன்களின் வாக்குகள் போய்விடும் என்ற பயமா?’’

‘‘மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. ராஜாஜி ஆட்சிக் காலத்தில் தான் மதுவிலக்குக் கொண்டு வந்தார். எங்களுடைய முக்கியமான கொள்கை களில் மதுவிலக்கும் ஒன்று.’’

‘‘இரு வேட்பாளர்களும் தீயாய்ச் செலவுசெய்கிறார்கள். கடைசி நேரத்தில், இன்னும் நிறையப் பணம் புழங்கும் என்கிறார்கள். எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?’’

‘‘அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள். நான் மக்களை நம்பி நிற்கிறேன். அவ்வளவுதான். மக்களுக்குத் தெரிகிறது, யார் தங்களுக்கும், தங்களின் குழந்தைகளுக்கும் வளமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொடுக்கப் போகிறார்கள் என்று. எனவே, பணத்தை வாங்கிக்கொண்டு மக்கள், எனக்கு வாக்களிப்பார்கள்.’’

‘‘நாயுடு சமுதாய வாக்குகளை நம்பித்தான் தேனியில் நிற்கிறீர்களா?’’

‘‘இது அபத்தமான ஒன்று. நான் பெரியாரின் பேரன். எனக்குச் சாதி மதமெல்லாம் கிடையாது. எல்லாச் சாதிகளுக்கும் பொதுவானவன் நான். என்னுடையத் தொகுதி மக்களைத் தமிழர் களாகவும், இந்தியர்களாகவும்தான் பார்க்கிறேன். சாதி அடிப்படையில் பிரித்துப் பார்க்கிற கண்ணோட்டம் எனக்கு இல்லை.’’

‘‘தேனியில் உங்கள் பிரசாரம் எதனை முன்வைத்துச் சென்றுகொண்டிருக்கிறது?’’

‘‘மோடி ஆட்சியின் தோல்வியை முன் வைத்தே என்னுடைய பிரசாரம் சென்று கொண்டிருக்கிறது. மேலும், ஓ.பி.எஸ் குடும்பத்தினர் எப்படி பணம் சேர்த்தார்கள்? எப்படிக் கொள்ளையடித்தார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறேன். ஜெயலலிதா இல்லாத இந்தக் காலத்தில், இவர்கள் எப்படியெல்லாம் கோமாளிகளாக இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஓ.பன்னீர்செல்வம், மகன் மட்டுமல்ல… அ.தி.மு.க-வில் இருக்கும் அத்தனை அமைச்சர்களும் கோமாளிகள்தான்!’’

- எம்.கணேஷ்
படம் : வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism