Published:Updated:

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

Published:Updated:
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

“13 பேர் செத்தது தெரியலையா?”

தூ
த்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்துத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய பி.ஜே.பி தலைவர் அமித்ஷா, “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரை நினைவுகூர்கிறேன்” எனச் சொல்லிப் பேச ஆரம்பித்தார். “புல்வாமா தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் அமித்ஷா, இதே தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் செத்துமடிந்த 13 பேருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே?” என்று கொந்தளிக்கின்றனர் தூத்துக்குடி மக்கள்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெத்து காட்டும் மார்கண்டேயன்!

வி
ளாத்திகுளம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் சின்னப்பன் போட்டியிடுகிறார். இங்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மார்கண்டேயன் ஏமாற்றமடைந்தார். “என்னைப் போட்டி போடக்கூடாது எனச் சொல்லி, 10 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள். ‘தேர்தல் முடிந்ததும் மாவட்டத்தில் பதவி தருகிறோம், வாரியத் தலைவர் பதவி தருகிறோம்’ என்றெல்லாம் சொன்னார்கள்” என பசுவந்தனை பகுதியில், அ.தி.மு.க பிரசாரத்தில் பகிரங்கமாகச் சொன்னார் மார்கண்டேயன். விளைவு... அன்றிரவே அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அசராத மார்கண்டேயன், சுயேச்சை வேட்பாளராகக் களத்தில் குதித்துவிட்டார். “கட்சியில உறுப்பினரா இல்லாட்டா என்ன? இது எனக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்குமான பிரச்னை. இந்தத் தேர்தல்ல எப்படியாவது ஜெயிச்சிடணும்” எனத் தன் ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் மார்கண்டேயன்.

அள்ளுமா அனுதாப ஓட்டு?

துரை நாடாளுமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரை, தொகுதியின் மற்றப் பகுதிகளைவிட, மேலூரில் அதிக ஓட்டுகளைக் குவிப்பது என்று திட்டமிட்டுள்ளார்.
டி.டி.வி தினகரன் மேலூரில்தான் அ.ம.மு.க-வைத் தொடங்கினார். தவிர, டி.டி.வி-யின் ஆதரவாளர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சாமியின் அனுதாப அலையையும் கருத்தில்கொண்டு இதுபோலத் திட்டமிட்டிருக்கிறார். எனவே, மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தன் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளார். மொத்த வாக்குகளில், மேலூரில் மட்டும் 65 சதவிகித வாக்குகளைப் பெற்று விட வேண்டும் என்பதுதான் டேவிட்டின் எதிர்பார்ப்பு என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.

அ.ம.மு.க-வை கதற விடும் சுயேச்சைகள்!

தெ
ன்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாகப் பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அவரது வெற்றியைத்தடுக்கும் வகையில் பொன்னுத்தாய் என்ற பெயரில் இருப்பவர்களைத் தேடிப்பிடித்த ஆளும் கட்சியினர், தென்காசித் தொகுதியில் அவர்களைச் சுயேச்சைகளாகக் களம் இறக்கியிருக்கிறார்கள். தென்காசியில் மூன்று முக்கிய அரசியல் கட்சியினரைத் தவிர, 22 பேர் சுயேச்சைகளாகக் களமிறங்கியிருக்கிறார்கள். இதில் நான்கு பேரின் பெயர்கள் பொன்னுத்தாய். இதைக் கண்டு அ.ம.மு.க-வினர் புலம்ப, அ.தி.மு.க-வினரோ, “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கின்றனர்.

ஆதரவாளர்கள் நீக்கம்... அதிர்ந்துபோன வேட்பாளர்!

நெ
ல்லைத் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கும் மனோஜ் பாண்டியனின் ஆதரவாளர்கள் பலர் பொறுப்புகளை இழந்திருக்கிறார்கள். தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், வேட்பாளருக்கு ஆதரவானவர்களின் பொறுப்புகளை மட்டும் திட்டமிட்டுச் சிலர், காலி செய்திருப்பதாகக் கட்சிக்குள் பொருமல் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான தச்சை. கணேசராஜாமீது கட்சித் தலைமையிடம் மனோஜ் பாண்டியன் தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்தபிறகு நெல்லையில், ‘கட்சி நிர்வாகிகள் மாற்றம் நிச்சயம் இருக்கும்’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தொகுதி மாறி வாக்கு சேகரித்த முதல்வர்!

தி
ருச்சி, கரூர், சிவகங்கைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். புதுக்கோட்டையில் பிரசாரம் நடைபெற்றபோது, முதல்வர் அருகே கைகூப்பியபடி நின்றிருந்தார் கரூர் தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை. ஆனால், தொகுதிக்குச் சம்பந்தப்பட்ட தே.மு.தி.க-வைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இளங்கோவனோ முதலமைச்சருக்குப் பின்புறம் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். இதனைக் கண்டுகொள்ளாத முதல்வர், தம்பிதுரையை முன்னிலைப்படுத்தி இரட்டை இலை சின்னத்துக்கே வாக்கு சேகரித்துவிட்டுக் கிளம்பிச்சென்றார். முதலமைச்சரின் இந்தச் செயல்பாடு களைக்கண்ட தே.மு.தி.க-வினர் அப்செட் ஆகிவிட்டார்கள்.
 
கன்னியாகுமரி காங்கிரஸில் கரன்ஸி பஞ்சாயத்து!

ன்னியாகுமரித் தொகுதியில், கடந்த முறை காங்கிரஸ் தனியாக நின்றதால், செலவுக்கானப் பணம் காங்கிரஸ் நிர்வாகிகளிடமே வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறைக் கூட்டணியைக் கருத்தில்கொண்டு தி.மு.க நிர்வாகிகளிடம் வழங்கப்படுகிறதாம். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கள் கையில் பணம் வராத விரக்தியில், காங்கிரஸ் நிர்வாகிகள் நாகர்கோவில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் தொகுதிப் பொறுப்பாளரான மயூரா ஜெயக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகிகளான லாரன்ஸ், கே.டி.உதயம் ஆகியோர் மயூரா ஜெயக்குமாருக்கு அரணாக நின்று பாதுகாத்துள்ளனர். இந்தக் களேபரம் குறித்துத் தகவல் அறிந்த பறக்கும் படையினர், காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே வந்து நின்றுகொண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்படும் பைக், கார்களில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் வசந்தகுமாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

கடுகடுக்கும் நேரு... திணறும் அரசர் 

தி
ருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில், ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் தலைமை அலுவலகம் திறப்புவிழா காலை 7 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, 6.45 மணிக்கே ஆஜரானார். ஆனால், இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கு இருக்கக் கடுப்பான நேரு, “வேட்பாளர் எங்கேய்யா? அவர் சீக்கிரம் வரமாட்டாரா, நாங்க வந்து காத்துக்கிடக்கணுமா’’ என்று கோபப்பட்டவர் காரில் ஏறிக் கிளம்பிவிட்டார். தகவல்கிடைத்த திருநாவுக்கரசர் பதறியடித்தபடி அங்குவந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கு வந்த நேரு, தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்த கையோடு, ஒரு நிமிடம்கூட அங்கு நிற்காமல், திருநாவுக்கரசரைப் பிரசார வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார். அன்று இரவு திருச்சி எடத்தெருப் பொதுக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், “வைகோவுக்கும் எனக்கும் 70 வயது கடந்துவிட்டது. அதனால் நாங்கள் கோபப்படுவதில்லை. ஆனால் நேருதான் அடிக்கடி கோபப்படுகிறார். நேரு இன்னும் இரண்டு வருடத்தில் 70 வயதைத் தொடவுள்ளார். அப்போது இன்னும் பக்குவப்படுவார்” எனச் சமாதானம் செய்தார்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

உசிலம்பட்டியில் உதயகுமார் கெத்து!

‘‘தே
னி நாடாளுமன்றத் தொகுதியில் உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதியில்தான் அதிக வாக்குகளை அள்ள வேண்டும். அப்போதுதான் துணை முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க முடியும்’’ என  வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உழைத்துவருகிறார். ‘‘இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் இறைக்கத் தயாராக இருக்கிறோம்’’ எனத் தொண்டர்களிடம் உதயகுமார் வெளிப்படையாகத் தெரிவித்துவருகிறார். ‘தேனி தொகுதியில், தோற்றாலும்கூட உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதியில் அதிகச் செல்வாக்கைக் காட்டிவிட வேண்டும்’ என்பதில் அமைச்சர் கறாராக இருக்கிறாராம்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஓ.பி.எஸ் படத்தை மறந்த மணிகண்டன்

ரா
மநாதபுரம் தொகுதியில், பி.ஜே.பி வேட்பாளராகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். இவரை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்ளவந்த முதல்வரைச் சந்தோஷப்படுத்த, தொகுதி அமைச்சர் மணிகண்டன் சில லகரங்களைச் செலவிட்டு ஆங்காங்கே கூட்டத்தைத் திரட்டியிருந்தார். மேலும், ‘முகவைக்கு வருகைதரும் நல்லாட்சி நாயகரே வருக.. வருக’ என்ற வாசகங்களுடன் இ.பி.எஸ் படத்தை மட்டும் அச்சிட்டிருந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ன் படம் இல்லை. இதனால் வெறுப்படைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அமைச்சர் வெளியிட்டப் பிரசுரங்களை வீதியில் வீசிச் சென்றனர்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஆ.ராசாவை வீழ்த்த கே.ராஜா!

நீ
லகிரி தொகுதியிலும் பெயர் பஞ்சாயத்துதான். ஆ.ராசாவை வீழ்த்த அ.தி.மு.க பல்வேறு காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவருகிறது. அ.ம.மு.க வேட்பாளரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமசாமியின் வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளதா என்று அ.தி.மு.க-வினர் பார்த்தனர். அதற்கு வழியில்லமால் போகவே, ஆ.ராசா பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கே.ராஜா என்ற பெயரில் உள்ள ஒருவரைத் தேடிப்பிடித்து அவரைச் சுயேச்சையாக, வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

- ஜூ.வி டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism