அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வின் சாம் பால், தி.மு.க கூட்டணியில் தயாநிதி மாறன், அ.ம.மு.க-வில் அதன் கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, ம.நீ.ம வேட்பாளராக கமீலா நாசரும் போட்டியிடுகிறார்கள்.

தொகுதியில் மார்வாடிகள், குஜராத்திகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் முஸ்லிம், கிறிஸ்துவர், மீனவர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அ.தி.மு.க-வினர் சாம் பாலுக்காகக் களத்தில் தீவிரமாக வேலை செய்கிறார்கள். சாம் பால் தரப்பும் லேசு பட்டது இல்லை. ‘அள்ளி’ இறைக்கிறார்கள். பூத் வேலைகள் பக்காவாக நடக்கின்றன. இவை இவருக்கான ப்ளஸ். ஆனால், மத்திய, மாநில அரசுகள்மீது நிலவும் அதிருப்தி இவருக்கு மைனஸ்.

இரண்டு முறை வெற்றி... கடந்த முறை தோல்வி என்கிற அடையாளத்துடன் போட்டியிடுகிறார் தயாநிதி மாறன். மத்திய அமைச்சராக இருந்தபோது, நிறைவேற்றியத் திட்டங்களை வாக்காளர்களிடம் நினைவுபடுத்துகிறார் தயாநிதி மாறன். கூடவே, பி.ஜே.பி-க்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைத்துப் பிரசாரம் செய்துவருகிறார். அதேபோல், எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களைப் பற்றியும் மக்களிடம் பேசுகிறார். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் வரும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுமே, தற்போது தி.மு.க வசம் இருப்பது தயாநிதி மாறனுக்குக் கூடுதல் ப்ளஸ். தயாநிதிமாறன் மீதான தொலைத்தொடர்பு துறை ஊழல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வது அவருக்கு மைனஸ். தெஹ்லான் பாகவியும் கமீலா நாசரும் இஸ்லாமியர் சமூக ஓட்டுகளைப் பிரிப்பார்கள் என்று கூறப்பட்டாலும், இஸ்லாமியர் தரப்பையும் தி.மு.க சரிக்கட்டிவிட்டது என்று பேசுகிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளின் பலம், சட்டமன்றத் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க வசம் இருப்பது, சிறுபான்மையினர் வாக்கு இந்த மூன்று காரணிகளும் தயாநிதி மாறனுக்கு ப்ளஸ். சென்னையைப் பொறுத்தவரை மோடிக்கு எதிரான மனநிலைப் பெரிய அளவில் இருக்கிறது. இதுவும் தி.மு.க-வுக்குக் கைகொடுக்கும்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால், தயாநிதிமாறன் ரேஸில் முந்துகிறார்!