அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க-வில் டாக்டர் செந்தில்குமார், அ.ம.மு.க-வில் பழனியப்பன் போட்டியிடுகிறார்கள்.

சிட்டிங் எம்.பி-யாக இருந்த அன்புமணி ராமதாஸ், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 77,147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போது, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தக் கூட்டணி இவருக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அத்துடன் செலவுக்குத் தயக்கம்காட்டாமல் அள்ளி இறைப்பதால், சொந்தக் கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் உற்சாகமாக வேலைசெய்கிறார்கள். இவை எல்லாம் அன்புமணிக்கு ப்ளஸ்.

தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குத் தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. ‘நான் மண்ணின் மைந்தன்’ என்று சொல்லி வாக்குகேட்கிறார். இது அவருக்கு ப்ளஸ். ஆனால், தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசல்கள், கட்சித் தலைமைமீதுள்ள அதிருப்தியால் தி.மு.க-வின் சீனியரான முல்லைவேந்தன் முறுக்கிக்கொண்டு நிற்பது செந்தில்குமாருக்கு மைனஸ். ஆளும் கட்சிமீதான மக்களின் அதிருப்தி, அரசு ஊழியர்கள் ஆதரவு போன்றவை எல்லாம் தனக்கு பிளஸ்ஸாக இருந்தாலும், அதை எல்லாம் அப்படியே வாக்குகளாக அறுவடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார் செந்தில்குமார்.

அ.ம.மு.க வேட்பாளர் பழனியப்பன், தனது வேளாளக் கவுண்டர் சமூக ஓட்டுகளை நம்பியிருக்கிறார். அந்தச் சமுதாயத்தினரின் ஓட்டுகளையும் தாண்டி இவருக்குக் கணிசமாக ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் பெறும் ஓட்டுகள் அ.தி.மு.க கூட்டணிக்குப் பாதகமாக அமைந்தாலும், அன்புமணி ராமதாஸின் பூத் கமிட்டி வியூகம், பழனியப்பனைப் பின்னுக்குத் தள்ளிவிடும்.

அ.தி.மு.க கூட்டணியின் பலம், தாராளமாகச் செலவழிக்கும் பணம், தி.மு.க-வின் உட்கட்சிப்பூசல் ஆகியவை அனைத்துமே அன்புமணி ராமதாஸுக்குச் சாதகமாக இருக்கிறது. தவிர, தர்மபுரி எப்போதுமே அன்புமணிக்கு மாம்பழத் துண்டு தொகுதிதான். இந்தமுறை அந்த மாம்பழத் துண்டு அத்தனை எளிது இல்லை என்றாலும் அன்புமணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!