அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வின் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ், தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி, அ.ம.மு.க-வில் கோமுகி மணியன் போட்டியிடுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வளர்ந்தவர், எல்.கே.சுதீஷ். ஏற்கெனவே இத்தொகுதியில் போட்டியிட்டவர் என்பதால், தொகுதியில் இவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. அதுதான் இவருக்கு ப்ளஸ். ஆனால், தற்போதே அமைச்சர் கனவோடு வலம் வருவதும், தேர்தல் பணிகளுக்கு சென்னையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பதும் உள்ளூர் தே.மு.தி.க-வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே மனநிலையில் தான் கூட்டணிக் கட்சியினரும் இருக்கிறார்கள்.

தன் மகன் கெளதம சிகாமணிக்காக வீதியில் இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறார் அனுபவம் மிக்க அரசியல்வாதியான பொன்முடி. தி.மு.க-வின் கூட்டணி பலமும், இவர் சார்ந்த உடையார் சமூக மக்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கிறது. வன்னியர் சமூகத்தினர் அதிகம் இருக்கும் தொகுதி என்றாலும் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ள பட்டியல் சமூகத்தினர் ஓட்டு களும் கௌதம சிகாமணிக்குக் கைகொடுக்கும். இவை எல்லாம் இவருக்கு ப்ளஸ். ஆனால், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சிக்கு மகனையும், விழுப்புரத்துக்கு தன்னையும் பொன்முடி முன்னிலைப்படுத்துவதால் தி.மு.க-வினர் அப்செட் ஆகியிருக்கிறார்கள். இது மட்டுமே இவருக்கு மைனஸ். ஆனாலும், அதிருப்தியில் இருக்கும் சொந்தக்கட்சியினரைச் சரிக்கட்டிவருகிறார் பொன்முடி.

எம்.ஜி.ஆர் காலத்து எம்.எல்.ஏ என்ற பெருமையோடு வலம்வரும் அ.ம.மு.க சீனியர் வேட்பாளர் கோமுகி மணியன், அ.தி.மு.க-வின் ஓட்டு வங்கியைக் கணிசமான அளவில் உடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகுதியில் சுதீஷ், கௌதம சிகாமணி இருவருமே சம பலத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், ஆளும் கட்சிமீது உள்ள அதிருப்தி, அ.ம.மு.க பிரிக்கும் அ.தி.மு.க-வின் ஓட்டுகள் ஆகியவை கௌதம சிகாமணியை டெல்லிக்கு அனுப்பும்.