அ.தி.மு.க சார்பில் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஆ.ராசா, அ.ம.மு.க சார்பில் ராமசாமி போட்டியிடுகிறார்கள். நேரடிப் போட்டி தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும்தான். தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கு களமிறங்குகிறார் ராசா.

நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது நீலகிரி தொகுதி. நீலகிரியில் உள்ள கூடலூர், ஊட்டி, குன்னூர் சட்டசபைத் தொகுதிகள் ராசாவுக்குச் சாதகமாக இருக்கின்றன. அவிநாசி (திருப்பூர் மாவட்டம்), பவானி சாகர் (ஈரோடு மாவட்டம்) சட்டசபைத் தொகுதிகள், அ.தி.மு.க–வுக்கு சாதகமாக இருக்கின்றன. கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் தொகுதியில் சம பலம் நிலவுகிறது. 2 ஜி வழக்கிலிருந்து விடுதலை பெற்றது, அ.தி.மு.க, பி.ஜே.பி மீதான அதிருப்தி வாக்குகள், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வில் அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள் ஆகியவை ராசாவுக்கு ப்ளஸ்.

தொகுதியில் இரண்டு லட்சம் அருந்ததியர் வாக்குகள் உள்ளன. அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ராசாவுக்கு மலை மேல் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தாலும், அருந்ததியர் வாக்குகள் அதைச் சரிக்கட்டும் என்று அ.தி.மு.க-வினர் கணக்குப் போடுகின்றனர்.

இதைத் தாண்டி ராசாவைத் தோற்கடிப்பதற்காக, இத்தொகுதிக்கு அ.தி.மு.க கொங்கு மண்டல வி.ஐ.பி போட்டுள்ள ‘கோடி’ப் பட்ஜெட் தலைசுற்றவைக்கிறது. இதற்கு ஈடாக தி.மு.க தரப்பில் செலவு செய்யவிடாமல், வருமானவரித் துறை வேலைபார்க்கிறது.

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய இரண்டாயிரம் ரூபாய் நிதி, நீலகிரியில் 90 சதவிகிதம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பது, அ.தி.மு.க வேட்பாளருக்கு ப்ளஸ். படுகர்களின் வாக்குகள், இந்த முறை தி.மு.க–வுக்கு முழுதாகச் செல்லாது என்கின்றனர். மறுபுறத்தில், அ.ம.மு.க வேட்பாளர் ராமசாமி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதைத் தங்களுக்குச் சாதகமாகப் பார்க்கின்றனர் அ.ம.மு.க-வினர்.

அ.தி.மு.க தரப்புக்கு பல சாதகங்கள் இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள்மீது நிலவும் அதிருப்தி, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரை கடைசிநேரத்தில் மாற்றியது, வேட்பாளர் மீதான அதிருப்தி போன்ற காரணங்களால் ராசாவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம். அதேசமயம் ராசா, வெற்றிக்கனவு மிதப்பில் கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் காட்சிகள் மாற வாய்ப்பு உண்டு.