அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன், தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் என இரண்டு முன்னாள் எம்.பி-க்கள் மோதுகிறார்கள். அ.ம.மு.க சார்பில் அப்பாதுரை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் டாக்டர் மகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கல்யாணசுந்தரம் போட்டியிடு கிறார்கள்.

இரண்டு முறை கோவை எம்.பி-யாக இருந்தவர், தற்போது மத்திய கயிறு வாரியத் தலைவர், கோவையில் பெரும்பான்மையான கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ப்ளஸ். ஜி.எஸ்.டி-யால் கோவையின் சிறு குறு தொழில்களில் ஏற்பட்ட சரிவுகள், பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவை மைனஸ். தவிர, கோவையில் முன்கூட்டியே தேர்தல் வேலை களைச் செய்து வைத்திருந்த பி.ஜே.பி-யின் வானதி சீனிவாசனுக்கு ‘சீட்’ கொடுக்காமல், திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ஆருக்கே மீண்டும் ‘சீட்’ வழங்கியதில் வானதி தரப்பு வருத்தத்தில் இருப்பதும் சி.பி.ஆருக்கான மைனஸ்.

2014 தேர்தலில், அ.தி.மு.க வெற்றிபெற்றது. பி.ஜே.பி சார்பாகப் போட்டியிட்ட சி.பி.ஆர் இரண்டாம் இடம் பிடித்தார். இப்போது இருவரும் ஒரே கூட்டணி, தே.மு.தி.க-வும் பக்கபலமாக இருக்கிறது. மாவட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சப்போர்ட் ‘எல்லா’ வகையிலும் சி.பி.ஆருக்கு இருக்கிறது. இதையெல்லாம் கணக்கில்கொண்டு, ‘தனக்கு வெற்றி நிச்சயம்’ என தம்ஸ்-அப் காட்டுகிறார் சி.பி.ஆர். கோவையில் நடக்கவிருக்கும் மோடி பிரசாரமும் இவருக்கு வலு சேர்க்கும். மேலும் இங்கு அ.ம.மு.க வேட்பாளர் அப்பாதுரை, அதிகளவு அ.தி.மு.க ஓட்டுகளைப் பிரிக்க வாய்ப்பில்லை.

‘கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை’ என்கிற முழக்கத்துடன் வலம்வரும் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், ‘‘கோவையின் குடிநீர் விநியோகம் பிரான்ஸ் நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டதைத் தடுப்பேன். மேற்குத் தொடர்ச்சி மலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன்’’ என்றெல்லாம் சொல்வது ப்ளஸ். கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் ஒத்துழைப்பு அவ்வளவாக இல்லை என்பது மைனஸ். கோவையில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைத்துவிடும். கடந்த தேர்தலில் இருந்த மோடி அலை இப்போது எதிர்ப்பு அலையாக மாறி இருக்கிறது. ம.நீ.ம வேட்பாளர் டாக்டர் மகேந்திரன், நாம் தமிழர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கெளரவமான வாக்குகளுக்கே கஷ்டப்பட வேண்டிய சூழல். இதை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இன்றையச் சூழலில் தாமரை மலர்கிறது!