அ.தி.மு.க-வில் தம்பிதுரை, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் ஜோதிமணி, அ.ம.மு.க-வில் பி.எஸ்.என்.தங்கவேலு போட்டியிடுகின்றனர்.

கரூர் தொகுதியில், நான்கு முறை எம்.பி-யாக இருந்தவர் தம்பிதுரை. கடந்த இரண்டு முறை தொடர்ந்து எம்.பி-யாக இருக்கிறார். பஸ் பாடி கட்டுவது, டெக்ஸ்டைல், கொசுவலை உற்பத்தி எனத் தொழில்கள் நடைபெறும் கரூரில், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால், பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிமீது அதிருப்தி நிலவுகிறது. தொகுதி முழுக்க அறிமுகமானவர் என்பதுடன், தான் சார்ந்திருக்கும் கவுண்டர் சமுதாய ஓட்டுகள் தனக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு வலம்வருகிறார் தம்பிதுரை. ஆனால், இவர் ஓட்டுக்கேட்டுப் போகும் இடங்களில் எல்லாம், மக்கள் சரமாரியாகக் கேள்விகேட்டுத் திணறவைக்கிறார்கள். மக்களிடம் இவர்மீதான அதிருப்தி வெளிப்படையாகத் தெரிகிறது.

தம்பிதுரைக்கு எதிர்ப்பாக உள்ள அத்தனை விஷயங்களையும், தனது எளிமையான அணுகுமுறையால் தனக்குச் சாதகமாக மாற்றிவருகிறார் ஜோதிமணி. குறிப்பாக, பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இளைய தலைமுறை வாக்காளர்களையும் கவர்ந்து வருகிறார். தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் அதிரடியானத் தேர்தல் வியூகங்கள், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவை ஜோதிமணிக்கு ப்ளஸ்.

அ.ம.மு.க-வும் தீவிரமாகப் பணியாற்றுகிறது. தங்கவேலு அ.தி.மு.க-வின் ஓட்டுகளைக் கணிசமாகப் பிரிப்பார். இதுவும் ஜோதிமணிக்கே சாதகம்.

தற்போதைய நிலவரப்படி ஜோதிமணிக்கே ஜெயம்!