அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வின் டாக்டர் இளங்கோவன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் திருநாவுக்கரசர், அ.ம.மு.க-வில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ், அ.ம.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்குள் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கள்ளர், பிள்ளைமார், முத்தரையர், பட்டியல் சமுதாயத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள தொகுதி திருச்சி. தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்றத் தொகுதியை தே.மு.தி.க-வுக்கு விட்டுக்கொடுத்ததைத் தொகுதியில் உள்ள அ.தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. இதுவே அவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் சமயத்தில் கண்டுகொள்ளவே இல்லை என்று அ.தி.மு.க மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள், கந்தர்வக்கோட்டைப் பகுதி மக்கள். இது பிரசாரங்களிலும் எதிரொலிக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கேட்கப் போனபோது, அமைச்சர் வளர்மதியை முற்றுகையிட்டுக் கேள்விகளால் துளைத்துவிட்டார்கள் மக்கள். இதுபோலத் தொகுதி முழுக்கவே, எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன. தவிர, இளங்கோவன் வெளியூர்க்காரர் என்பதால் உள்ளூர் அ.தி.மு.க-வினர் அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இவை எல்லாம் இளங்கோவனுக்கு மைனஸ்.

திருச்சியில் காங்கிரஸுக்கு ஓரளவு பலம் உண்டு. அதை நம்பித்தான் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் இங்கே களமிறங்குகிறார். தி.மு.க-வையும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவையும் மிகவும் நம்புகிறார். கூட்டணி கட்சிகளின் பலம், கட்சி செல்வாக்கு ஆகியவை திருநாவுக்கரசருக்கு ப்ளஸ். இரண்டு முறை இத்தொகுதியில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான், தற்போது அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். உள்ளூர்க்காரர் என்பது மட்டுமே இவருக்கு ப்ளஸ். இவர் பிரிக்கும் இரட்டை இலையின் ஓட்டுகளும் திருநாவுக்கரசருக்கே சாதகம்.

காற்று திருநாவுக்கரசர் பக்கம் வீசுகிறது!