தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வில் அரியலூர் சந்திரசேகரன், அ.ம.மு.க-வில் இளவரசன் போட்டியிடுகிறார்கள். நேரடிப் போட்டி விடுதலைச் சிறுத்தை களுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான்.

சிதம்பரத்தில், ஐந்தாவது முறையாக களம்காண்கிறார் திருமாவளவன். தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பலம், தொகுதியில் கணிசமாக இருக்கும் பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் வாக்குகளை நம்பியே களத்தில் உள்ளார் திருமாவளவன். இவை திருமாவளவனுக்குக் கிடைக்கும். இவை அவருக்கு ப்ளஸ். ஆனால், தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர்கள், உடையார், முதலியார் போன்ற பிற சமூகத்தினரின் வாக்குகள் திருமாவளவனுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. தேர்தல் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் வி.சி-க்கள் திணறுவது மைனஸ்.

அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்பவர். ஓரளவுக்கு வசதியானவர். பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்துவருகிறார். அரசு கொறடா மற்றும் தொகுதியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வேலைசெய்துவருவது இவருக்கு ப்ளஸ்.

அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் இளவரசனும் பணத்தை அள்ளிஇறைக்கிறார். அ.தி.மு.க வாக்குகளையும், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்மீதான அதிருப்தி வாக்குகளையும் இவர் பிரிப்பார். இது மற்றவர்களின் வெற்றி, தோல்விகளைப் பாதிக்குமே தவிர, இவர் வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இப்போதைய நிலவரத்தின்படி, சிதம்பரத்தில் இழுபறி நிலையே நீடிக்கிறது!