தி.மு.க கூட்டணியின் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜும், அ.தி.மு.க சார்பில் தாழை சரவணனும், அ.ம.மு.க சார்பில் செங்கொடியும் போட்டியிடு கிறார்கள். செல்வராஜ் ஏற்கெனவே இதே தொகுதியில், மூன்று முறை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டவர். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

வலது, இடது என இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தொண்டர்கள், தி.மு.க-வின் வாக்கு வங்கி, கணிசமான அளவு முஸ்லிம் வாக்குகள்... எனத் தெம்பாக இருக்கிறார் செல்வராஜ். அதேசமயம், செல்வராஜ் வென்ற காலங்களில், தொகுதியின் முன்னேற்றத்துக்குப் பெரிதாக எதுவும் செய்ததில்லை என்ற பேச்சும் பரவலாக உள்ளது. ஓ.என்.ஜி.சி-யின் எரிவாயு எடுக்கும் பணிகளை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது, இவர் ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக இருந்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

விவசாயமும் மீன்பிடியும் நாகையின் முக்கியத் தொழில்கள். இந்தத் தொகுதியின் பல பகுதிகள் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவை. அந்தப் பாதிப்பிலிருந்து இன்னமும் மீளவில்லை நாகை மக்கள். அதனால், ஆளும் கட்சிமீது கடுமையானக் கொதிப்பில் இருக்கிறார்கள். தற்போது இந்தப் பகுதிகளில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பி.ஜே.பி அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதை எதிர்த்துப் போராடும் மக்களை, அ.தி.மு.க அரசு கடுமையாக ஒடுக்கிவருகிறது. எனவே, இந்தக் கூட்டணிமீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தவிர, அ.தி.மு.க வேட்பாளர் தாழை.சரவணனுக்குத் தொகுதியில் பெரியளவில் அறிமுகம் இல்லை.

தொகுதியின் அ.தி.மு.க கூட்டணிமீதான அதிருப்தி வாக்குகள் அ.ம.மு.க-வின் செங்கொடிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டி.டி.வி தினகரன் தீவிரமாகக் குரல் கொடுத்துவருகிறார். தவிர, ‘காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம்’ என்றும் அவர் பிரசாரம் செய்கிறார். இவர்களைத் தவிர மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக குருவையாவும் போட்டியிடுகிறார். ஆனாலும் பெரியதாக தாக்கம் இருக்காது.

ஆளும் கட்சியின் பணபலம், அதிகார பலம் இவற்றை எல்லாம் தாண்டி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மீதிருக்கும் கோபம் மிக மிக அதிகம். இதனால் நிலைமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜுக்கு சாதகமாக இருக்கிறது!