அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி-யின் ஹெச்.ராஜா, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம், அ.ம.மு.க-வில் தேர்போகி பாண்டி போட்டியிடு கிறார்கள்.

பி.ஜே.பி., அ.தி.மு.க கட்சிகளுக்குள் ஏகப்பட்ட உட்கட்சிப் பூசல்கள் இருக்கின்றன. தொகுதிவாசியாகவே இருந்தாலும், தமிழகம் முழுவதும் ஹெச்.ராஜா தனது ‘சொல்’வாக்கால் சம்பாதித்து வைத்திருக்கும் தனிப்பட்ட அதிருப்தி, தொகுதிக்குள் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. தொகுதியில் உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுகள், நிச்சயமாக ஹெச்.ராஜாவுக்குக் கிடைக்காது. இவை போக மத்திய அரசின்மீதும், எடப்பாடி பழனிசாமி அரசின்மீதும் இருக்கும் அதிருப்தி, இங்கும் இருக்கிறது. இவை எல்லாம் ஹெச்.ராஜாவுக்கு மைனஸ்.

ஏழு முறை சிவகங்கை தொகுதியின் எம்.பி-யாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய அதிகார மையமான ப.சிதம்பரம், தன் சொந்தத் தொகுதியின் வளர்ச்சிக்கு என்று பெரிதாக எதையும் செய்யவில்லை. இது கார்த்தி சிதம்பரத்துக்கு மைனஸ். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலையான வாக்குகள் எனக் கூட்டணிக் கட்சிகளின் வலுவான வாக்குவங்கி சிந்தாமல் சிதறாமல், அப்படியே கார்த்தி சிதம்பரத்துக்குக் கிடைக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் இவருக்குப் பக்கபலமாக இருக்கிறது. இவை எல்லாம் கார்த்தி சிதம்பரத்துக்கு ப்ளஸ்.

தொகுதியில் கணிசமான அளவுக்கு இருக்கும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களை நம்பி, அ.ம.மு.க சார்பில் களமிறங்கியிருக்கிறார், தேர்போகி பாண்டி. இவரின் தீவிரமான களப்பணி அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிப்பது, அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் பாதகம். கூட்டணி பலம், அ.தி.மு.க-வின் ஓட்டுகள் பிரிவது, சிறுபான்மையினர் ஓட்டுகள் ஆகியவை ‘கை’யைத் தூக்கிவிடுவதால், கார்த்தி சிதம்பரத்துக்கே வெற்றி வாய்ப்பு!