அ.தி.மு.க-வில் சேவல்.ஏழுமலை, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் விஷ்ணுபிரசாத், அ.ம.மு.க-வில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் போட்டியிடுகிறார்கள். சிட்டிங் எம்.பி-யான எம்.பி சேவல்.ஏழுமலை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், தொகுதி மக்கள் அவர்மீது கடும் அதிருப்தியில் இருக்கி றார்கள். இதனால், சில மாதங்களுக்கு முன்பு, ‘மோடி அரசு எனக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. அதனால்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை’ என்று பகிரங்க மன்னிப்பும் கேட்டார். ஆனால், ‘ஒத்துழைக்க வில்லை’ என்று குற்றம்சாட்டிவிட்டு, அதே பி.ஜே.பி-யுடன் இப்போது அவர் ஓட்டுக்கேட்டு வருவதை வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சேவல்.ஏழுமலை, விழுப்புரத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவுக்காக முன்பு சேவல்.ஏழுமலையை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க-வினர், இப்போது அவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இவை எல்லாம் ஏழுமலைக்கு மைனஸ். கூட்டணியில் பா.ம.க இருப்பதால், வன்னியர் சமூக வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்பது மட்டுமே அவருக்கான ஆறுதல் ப்ளஸ்.

விஷ்ணுபிரசாத், கடந்தமுறை போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். அ.தி.மு.க மீதான அதிருப்தி அலை விஷ்ணுபிரசாத்துக்கு ப்ளஸ். அத்துடன், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் இவருக்குப் பலம். காங்கிரஸ் கட்சிக்கென்று உள்ள நிலையான வாக்குகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் கூடுதல் பலம் சேர்க்கின்றன. இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பா.ம.க-வின் அதிருப்தி ஓட்டுகள் இவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், விஷ்ணுபிரசாத் செலவு செய்வதில் காட்டும் தயக்கம், காங்கிரஸ் கட்சியினரைக் கலங்க வைக்கிறது.

அ.ம.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தமிழன், தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். ஆனாலும், டி.டி.வி.தினகரனின் தாக்கத்தால் கணிசமான வாக்குகள் செந்தமிழனுக்குக் கிடைக்கக்கூடும். இது, அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு.

மொத்தத்தில் ஆரணியில் விஷ்ணு பிரசாத்துக்கே வெற்றி வாய்ப்பு!