அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ கணபதி போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும்தான் நேரடிப் போட்டி. தொகுதிக்குத் தொடர்பே இல்லாதவர் என்பது பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு மைனஸ். ஆனாலும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் தொகுதி என்பதைச் சாதகமாகக் கருதுகிறது பா.ம.க. தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர் வாக்குகள் கிடைக்கும் என்பது பா.ம.க-வின் கணக்கு. ஆனால், பா.ம.க-வில் இருந்து பிரிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், தற்போது தி.மு.க பக்கம் இருப்பதால் பா.ம.க-வின் இந்தக் கணக்கு எடுபடுமா என்பது கேள்விக்குறியே. மேலும் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி, பா.ம.க-வினர் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதும் மைனஸ்தான்.

தி.மு.க-வுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கும் பகுதி இது. எனவே, உதயசூரியன் சின்னத்தில் நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்குக் கூடுதல் பலம். கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க-வே இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதனால், ரவிக்குமாரை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் தி.மு.க இருக்கிறது. அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பி.ஜே.பி மீதான அதிருப்தித் தொகுதியில் இருக்கிறது. அ.ம.மு.க-வின் வேட்பாளர் கணபதி, அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். இதனால், கணிசமான வாக்குகளை அவர் பிரிப்பார். இவை எல்லாம் ரவிக்குமாருக்கு ப்ளஸ்.

கள்ளக்குறிச்சியில் தன் மகன் போட்டியிடுவதால், அங்கு மட்டுமே பொன்முடி கவனம்செலுத்தி வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அங்கேயே முகாமிட்டிருக்கிறார்கள். இது ரவிக்குமார் தரப்பில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் சில தினங்களுக்கு முன் விசிட் செய்த ஸ்டாலின், வேலைகளை விறுவிறுப்பாக்கியுள்ளார். இதனால், கடைசிநேரத்தில் முடிசூடுவார் ரவிக்குமார்.