அ.தி.மு.க-வில் ராஜ் சத்தியன், தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன், அ.ம.மு.க-வில் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார்கள்.

ராஜ்யசபா எம்.பி, மதுரை மேயர் என்று பல பொறுப்புகளை வகித்து, தற்போது மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ., புறநகர் மாவட்டச் செயலாளர் எனச் செல்வாக்குடன் ராஜன் செல்லப்பா இருப்பது, அவரது மகனான ராஜ் சத்தியனுக்கு பலம். கட்சி எங்கே வீக், எங்கே டானிக் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் செல்லப்பாவுக்கு அத்துப்படி. பெரிய பட்ஜெட் போட்டு வேலை செய்து வருகிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி மத்திய, மாநில அரசுகளின்மீதான அதிருப்தி அலையடிக்கிறது.

சு.வெங்கடேசன் மதுரையில் ஓரளவு அறியப்பட்டவராக இருக்கிறார். கீழடி தொல்லியல் துறை ஆய்வு விவகாரத்தில், இவரின் பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொகுதியில் செளராஷ்டிர சமூக மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். சு.வெங்கடேசனின் மனைவி அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். யாதவர் சமூக வாக்குகளைப் பெற்றுத்தர ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்கிறார். சிறுபான்மையினர், தெலுங்கு பேசுவோரின் ஆதரவும் தி.மு.க கூட்டணிக்கு இருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சியினருக்கு செலவுசெய்ய வேண்டுமே. இந்த விஷயத்தில் வெங்கடேசனுக்கு கைகொடுக்காமல் தி.மு.க சுணக்கம் காட்டுவது மைனஸ் என்கிறார்கள். ஆனாலும், சமீபத்தில் ஸ்டாலின் பிரசாரம் செய்துவிட்டுப் போனபிறகு தி.மு.க நிர்வாகிகள் சுறுசுறுப்பாகச் செயல் படுகிறார்கள்.

முக்குலத்தோர் வாக்குகள் முழுமையாக அ.தி.மு.க-வுக்கு செல்லவிடாமல், கணிசமாகத் தன் பக்கம் திருப்புகிறார் டேவிட் அண்ணாதுரை. காரணம், டி.டி.வி.தினகரனின் தாக்கம் இங்கு அதிகம். இவை எல்லாம் சு.வெங்கடேசனை வைகையில் கரையேற வைக்கிறது!