தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க-வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். வெற்றிக்காக மூவரும் முட்டிமோதுவதால் நிலைமை இழுபறி ஆகியிருக்கிறது.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியிருக்கும் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம். குறிப்பாக, பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் அதிகம் இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், வழக்கமாக அ.தி.மு.க-வுக்குச் செல்லவேண்டிய பிரமலைக் கள்ளர் வாக்குகளைக் கணிசமான அளவில் பெற்றுவிடுவார் தங்க தமிழ்ச் செல்வன். இது அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு மைனஸ்.

தொகுதிக்குள் கட்சியினர் இடையே நிலவும் அதிருப்திகளைச் சமாளிக்க, தேர்தல் வேலைகளைச் செய்வதற்காக ராமநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளிலிருந்து தனது உறவினர்களை இறக்கியிருக்கிறார் பன்னீர்செல்வம். அவர்களிடமே நிதி நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் கூடுதல் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் ரவீந்திரநாத் குமாருக்கு மைனஸ்.

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நிரந்தரமான வாக்குவங்கி உண்டு. அது இளங்கோவனுக்கு ப்ளஸ். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களின் வாக்குகள், சிறுபான்மையினரின் வாக்குகள் ஆகியவையும் இளங்கோவனுக்கு ப்ளஸ். ஆனாலும், தேனி மாவட்ட தி.மு.க-வில் இருக்கும் கோஷ்டிப் பூசல்கள் அவருக்கு மைனஸ்.

தினகரனின் அரசியல் வாழ்வை ஆரம்பித்து வைத்தத் தொகுதி இது. எனவே, ‘தன்னுடைய கோட்டை’ என்பதை நிரூபிக்க தங்க தமிழ்ச் செல்வனை தாங்கிப்பிடிக்கிறார் தினகரன். அதேசமயம் ‘டீ கடை’ பன்னீர்செல்வத்தை கோட்டைக்கு அனுப்பியது இந்தத் தேனி மாவட்டம்தான், அதனால், தன் மகனை டெல்லிக்கு அனுப்ப மல்லுக்கட்டுகிறார் பன்னீர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் முண்டாதட்டுகிறார். இதனால் இழுபறி நீடிக்கிறது.