தேர்தல் 2019
Published:Updated:

‘ஏணி’க்கே ஏற்றம்! - ராமநாதபுரம்

‘ஏணி’க்கே ஏற்றம்! - ராமநாதபுரம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஏணி’க்கே ஏற்றம்! - ராமநாதபுரம்

‘ஏணி’க்கே ஏற்றம்! - ராமநாதபுரம்

‘ஏணி’க்கே ஏற்றம்! - ராமநாதபுரம்
‘ஏணி’க்கே ஏற்றம்! - ராமநாதபுரம்

விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவிக்கிடக்கிறது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி. தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஏணி சின்னத்தில் நவாஸ்கனியும், அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் மோதுகிறார்கள். அ.ம.மு.க-வில் வ.து.ந.ஆனந்த், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் விஜயபாஸ்கரும் களம் காண்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை, திருநெல்வேலியிலிருந்து இறக்கியிருக்கிறது பி.ஜே.பி. அ.தி.மு.க-வினர் பட்டும்படாமலேயே வேலைசெய்கின்றனர். கூட்டணியில் உள்ள தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா கட்சிகளுக்கும் இங்கே வாக்கு வங்கி இல்லை. அதேசமயம் பி.ஜே.பி-க்கு நல்ல அடித்தளம் உள்ளது. அத்துடன் தொகுதி அமைச்சரான மணிகண்டனைச் சார்ந்தே இயங்கிவருகிறார் நயினார் நாகேந்திரன்.

முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எஸ்.டி கூரியர் உரிமையாளர். சாயல்குடி அருகே உள்ள குருவாடி சொந்த ஊர் என்றாலும் வாசம் சென்னையில்தான். தேர்தல் அறிவித்ததும், சென்னையில் வாழும் ராமநாதபுரம் மக்களை அழைத்துக் கூட்டம் நடத்திப் பணிகளைத் தொடங்கிவிட்டார். கூட்டணிக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் என அனைவரையும் ஒன்றிணைத்துப் பணிகளைச் செய்கிறார் நவாஸ்கனி. அ.தி.மு.க-வில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் மூலம் யாதவ சமுதாய வாக்குகளையும், த.மா.கா-வில் இருந்து விலகிய ராமவன்னி மூலம் மீனவர் சமுதாய வாக்குகளையும் குறிவைத்துள்ளார். இந்தத் தொகுதியில் அடங்கியிருக்கும் திருச்சுழி சட்டசபைத் தொகுதியில், தங்கம் தென்னரசு மூலம் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.

முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகனான வ.து.ந.ஆனந்த் அ.ம.மு.க வேட்பாளர். இவருக்கு திருவாடனை சட்டசபைத் தொகுதியில், தனிச் செல்வாக்கு உண்டு. முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், முதுகுளத்தூர், ராமநாதபுரம் தொகுதிகளில் கூடுதல் செல்வாக்கு உண்டு. அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி துணையால், அதிக வாக்குகளைப் பெறவும் திட்டமிட்டுள்ளார். இந்த மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் தாமரைக்குப் பாதிப்பை உண்டாக்கும்.

ராமநாதபுரத்தைக் கைப்பற்றும் போட்டியில் முஸ்லிம் லீக்கின் ஏணி ஏற்றத்தில் இருக்கிறது.