தி.மு.க-வில் கனிமொழியும், பி.ஜே.பி-யில் தமிழிசை சௌந்தரராஜனும், அ.ம.மு.க-வில் புவனேஸ்வரனும் போட்டியிடுகின்றனர். நேரடிப் போட்டி என்பதால், அனலாகத் தகிக்கிறது தூத்துக்குடி. ஸ்டெர்லைட் தொழிற்சாலை பிரச்னை, தாது மணல் கொள்ளை, சுற்றுச்சூழல் பாதிப்புகள், தீப்பெட்டித் தொழிலாளர் பிரச்னை, விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள் தூத்துக்குடித் தொகுதி மக்கள். வேட்பாளர்கள் இருவருமே வெளியூர்க்காரர்கள். இருவருமே தொகுதியில் கணிசமாக இருக்கும் நாடார் சமுதாயத்தினர் பலத்தை நம்பியே களமிறங்கியிருக்கிறார்கள்.

தொகுதி மக்களிடம் இருவருமே அறிமுகமானவர்கள். அதேசமயம், மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி இந்தத் தொகுதிக்கு உட்பட்ட வெங்கடேசுவரபுரம் கிராமத்தைத் தத்தெடுத்து, ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் திட்டப்பணிகளைச் செய்திருப்பது அவருக்கு ப்ளஸ். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பிருந்தே வேலைகளை ஆரம்பித்து விட்டார் கனிமொழி. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், தொகுதி மக்களிடம் நிலவும் அதிருப்தியும் கனிமொழிக்குக் கூடுதல் சாதகம்.

இந்து வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் தமிழிசை சௌந்தரராஜன் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அ.தி.மு.க-வின் வாக்குவங்கியையும், புதிய தமிழகத்தின் ஆதரவையும் தனக்கானக் கூடுதல் பலமாக அவர் கருதுகிறார். அதேசமயத்தில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் பி.ஜே.பி-யின் நிலைப்பாடு, அவருக்கு எதிரான சூழலையே உருவாக்கியிருக்கிறது. தூத்துக்குடி விமானத்தில் பயணம்செய்த மாணவி ஷோபியாவுடன் தமிழிசை சண்டையிட்டுப் புகார் அளித்த சம்பவம், பட்டியலின மக்கள் மத்தியில் தமிழிசைமீது அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

முக்குலத்தோர் மற்றும் மீனவர்களின் வாக்குகளை நம்பியிருக்கிறார், அ.ம.மு.க வேட்பாளர் புவனேஸ்வரன். இவர் பிரிக்கும் வாக்குகள் பி.ஜே.பி வேட்பாளருக்கு எதிராக அமையும்.

தூத்துக்குடித் தொகுதியில், தொடக்கத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழிசை, தனது பிரசார வியூகங்களால் முன்னேற்றத்தை எட்டியிருக்கிறார். ஆனாலும், கூட்டணி பலத்தால் நிலைமை கனிமொழிக்குச் சாதகமாக மாறியிருக்கிறது. தூத்துக்குடியில் சூரியோதயத்துக்கே வாய்ப்பு அதிகம்!