அ.தி.மு.க-வில் மனோஜ் பாண்டியன், தி.மு.க-வில் ஞானதிரவியம், அ.ம.மு.க-வில் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க வேட்பாளரான மனோஜ் பாண்டியன், தொகுதிக்கு அறிமுகமானவர். பி.ஹெச்.பாண்டியனின் மகனான இவர், ஏற்கெனவே எம்.பி-யாகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்கிறார். அ.தி.மு.க வழக்குகளைக் கையாள்வதால், கட்சியினர் மத்தியில் மனோஜ் பாண்டியனுக்குப் பெயர் இருக்கிறது. கடந்த முறை வென்ற அ.தி.மு.க எம்.பி-யான பிரபாகரன், தொகுதிக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்கிற கோபம், வாக்காளர்களிடம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் நடக்கும் உட்கட்சிப் பூசல்களும் ஓட்டுகளைப் பதம் பார்க்கும். பி.ஜே.பி மீதான அதிருப்தியால், தொகுதியில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை மனோஜ் பாண்டியன் இழக்க நேரிடலாம். இவை எல்லாம் மனோஜ் பாண்டியனுக்கு மைனஸ்.

தி.மு.க வேட்பாளரான ஞானதிரவியம் வள்ளியூர் யூனியனின் முன்னாள் தலைவர். எளிமையானவர். எளிதில் அணுகக்கூடியவர். தொகுதியில் கணிசமாக இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வாக்குகள் இவருக்குக் கூடுதல் பலம். தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட இவரது வாக்குறுதிகள் தொகுதியில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.ம.மு.க வேட்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குத் தொகுதியில் வரவேற்பு இருக்கிறது. அ.தி.மு.க வாக்குகளை இவர் கணிசமாகப் பிரிப்பார். இதுவும் அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு மைனஸ்.

தற்போதைய நிலவரப்படி திருநெல்வேலி தொகுதியில் உதயசூரியன் பிரகாசமாக உதிக்கும்.