தமிழகத்தின் அரசியல் சூழல்போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் களமும் தகிக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், அ.தி.மு.க கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வான டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியமும், அ.ம.மு.க சார்பில் தமிழ்மாறனும் களமிறங்குகிறார்கள். தேசியக் கட்சியான காங்கிரஸின் ‘கை’ சின்னத்துக்கும், மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸின் ‘ஜக்கு’ சின்னத்துக்கும் இடையேதான் இங்கே நேரடிப் போட்டி.

மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ கேசவனின் மகன் என்பது மட்டும்தான் கே.நாராயணசாமியின் அரசியல் பின்னணி. ஸ்ரீமணக்குள விநாயகர் கல்விக் குழுமங்களின் உரிமையாளர் என்பதால், பொருளாதார ரீதியில் பலமானவர் என்பது இவரது ப்ளஸ். ஆளுநர் கிரண்பேடி மூலம் மாநில காங்கிரஸ் அரசுக்குத் தொல்லைக்கொடுத்தது, பி.ஜே.பி-யைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது உள்ளிட்ட காரணங்களால் பி.ஜே.பி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் புதுச்சேரி மக்கள். இச்சூழலில், பி.ஜே.பி-யுடன் அணிசேர்ந்து தேர்தலைச் சந்திப்பது என்.ஆர்.காங்கிரஸுக்கு மைனஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்து வெற்றிபெற்றிருந்தது என்.ஆர் காங்கிரஸ். ஆனால், கடன் தள்ளுபடி, நிதிப் பற்றாக்குறை, மாநில அந்தஸ்து உள்ளிட்ட புதுச்சேரியின் ஜீவாதாரப் பிரச்னைகளில் வாய் திறக்காததால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் மக்கள். கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க, கடந்தத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை, ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தலிலும் வாங்குமா என்பது சந்தேகம்தான்.

அ.ம.மு.க-வைவிட ம.நீ.ம வேட்பாளர் டாக்டர் சுப்பிர மணியத்துக்கு இங்கு மவுஸ் அதிகம். பாரம்பர்யமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்துள்ளார் என்கிற அறிமுகம் மக்களிடம் உண்டு. பணத்தையும் வாரியிறைப்பதால், டாக்டருக்கு 3-வது இடம் கிடைக்கிறது.

ஆளும் கட்சியாக இருப்பதால், வேட்பாளரை வெற்றிபெற வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். 9 முறை எம்.எல்.ஏ, 2 முறை முதலமைச்சர், தற்போது சபாநாயகர், மக்களுக்கு அறிமுகமான மூத்த அரசியல் தலைவர் ஆகியவை வைத்திலிங்கத்துக்கு ப்ளஸ். பி.ஜே.பி எதிர்ப்பு அலையைச் சாதகமாக நினைக்கிறது காங்கிரஸ். புதுச்சேரி, காரைக்காலில் 13 சதவிகிதத்தினராக உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் வைத்திலிங்கத்தைப் பந்தயத்தில் முன்நிறுத்துகின்றன. அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தமிழ்மாறன், அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிப்பார் என்பதும் வைத்திலிங்கத்துக்குச் சாதகம். எனவே புதுச்சேரியில் ‘கை’ உயர்வதற்கான அறிகுறிகளே அதிகம்!