இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் இன்னும் தங்கள் தொகுதியில் முழுமையாகப் பிரசாரத்தை முடிக்க வில்லை. ஆனால், தூத்துக்குடியில் கனிமொழியோ இரண்டாவது, மூன்றாவது ரவுண்டு என சூறாவளியாகப் பிரசாரத்தில் சுழன்று வருகிறார். ஏற்கெனவே, தி.மு.க நடத்திய ஊராட்சி சபைக் கூட்டத்தை முன்வைத்தே தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டிதொட்டி தொடங்கி குக்கிராமங்கள் வரைப் பிரசாரத்தை நடத்தி முடித்தவர், தற்போது முழுமையாக கிராமங்களைக் குறிவைத்து அடுத்தடுத்த ரவுண்டுகளில் பிரசாரம் செய்துவருகிறார். பிரசாரத் துக்கு இடையே அவருடன் பயணித்துக்கொண்டே பேசினோம்.

“நீங்கள் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். கருணாநிதியின் மகள். தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் சார்ந்த நாடார் சமூக ஓட்டுகளைக் குறிவைத்து தூத்துக்குடித் தொகுதியைத் தேர்வு செய்தீர்கள் என்று சொல்லப்படுகிறதே?”

‘‘எந்த சாதியின் பெயரைச் சொல்லியும் இதுவரை நான் ஓட்டுக் கேட்டதில்லை. என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்தான் சாதியைச் சொல்லி ஓட்டுக் கேட்கிறார். ஒரு திட்டம் நிறைவேற்றப்படும்போது எல்லா மக்களுக்கும்தான் அது போய்ச் சேர்கிறது. இதில் எங்கிருந்து வந்தது சாதி? எம்.பி என்கிற முறையில் இந்த மாவட்டத்தில் உள்ள வெங்கடேசுவரபுரம் கிராமத்தைத் தத்தெடுத்தேன். அங்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். அத்துடன், தூத்துக்குடியில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்கும்போது, ஆளும் அ.தி.மு.க, அரசால் மக்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் மெத்தனப்போக்கு, வேலைவாய்ப்பின்மை, விவசாயம் நலிவு என்று தொகுதியில் பிரச்னைகள் ஏராளம். தொகுதி மக்களுக்கும், தொகுதி வளர்ச்சிக்கும் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது இந்தத் தொகுதியிலேயே போட்டியிடலாம் என முடிவுசெய்தேன்.’’

‘‘தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பி.ஜே.பி தரப்பில் பிரசாரம் செய்யப்படுகிறதே?’’

‘‘இந்துக்களுக்கு எதிராக தி.மு.க என்ன செய்தது என்பதை விமர்சனம் செய்பவர்களால் சொல்ல முடியுமா? தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் பல கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. ஆனால், இன்று கோயில் பிரகாரம் இடிந்து ஓராண்டைக் கடந்தும்கூட, இந்த அ.தி.மு.க அரசு என்ன நடவடிக்கையை எடுத்தது? கோயிலுக்குள் அனைத்து சாதி இந்துக்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க-தானே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதற்காக என்ன செய்தது? தி.மு.க ஆட்சியில் இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் இந்துக்கள்தான்.’’

‘‘தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம்’ என்று குறிப்பிடப்படவில்லையே?’’

‘‘ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தனிப்பட்ட ஓர் ஆலையின் பெயரைத் தேர்தல் அறிக்கையில் சொல்வது சரியாக இருக்காது. ‘சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய எந்தத் தொழிற்சாலைகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். இதைவிடத் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்? இந்த ஆலை விவகாரத்தில் மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் தி.மு.க எடுக்காது.’’

‘‘காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உங்களை ஈர்த்தது எது?’’

‘‘நிறைய இருக்கிறது. சிலவற்றை மட்டும் சொல்கிறேன். ‘வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களை மீட்டெடுக்க ஆண்டுக்கு 72,000 ரூபாய் உதவித்தொகைதரப்படும்’ என்ற வாக்குறுதியால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பலன் அடைவார்கள். ‘நீட் தேர்விலிருந்து விலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்’ என்ற வாக்குறுதி தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவை மதித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரசாரங்களிலும் இவற்றை முன்னிறுத்திப் பேசிவருகிறேன்.’’

‘‘உங்களை எதிர்த்துப் போட்டியிடும் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘கனிமொழிமீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது’ என்று கூறி வருகிறாரே?’’

‘‘என்னுடைய வழக்கு முடிவடைந்து விட்டது. அன்புமணி ராமதாஸ்மீது சி.பி.ஐ வழக்கு இருக்கிறது. ரஃபேல் ஊழலைப்பற்றி இதுவரை என்ன பதிலைச் சொல்லியிருக்கிறார் மோடி? அமித் ஷா மகனுடைய சொத்தின் மதிப்பைப் பார்த்து உலக நாடுகளே அதிர்ந்துபோயிருக்கின்றன. பி.ஜே.பி மீது இவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு, என்மீது குற்றம்சாட்டுவது தவறு. நீதிபதியே எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி, இதில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளார். தேர்தலுக்காகப் பொய்க்குற்றச்சாட்டைச் சொல்கிறார் தமிழிசை.’’

‘‘சென்னைவாசியான நீங்கள் வெற்றி பெற்றால், தூத்துக்குடி தொகுதிக்கு வந்து மக்கள் பணி செய்வது சாத்தியப்படுமா?’’

‘‘தூத்துக்குடியில் வீடு எடுத்துத் தங்கியிருக்கிறேன். வெற்றிபெறும் பட்சத்தில் இங்கே தங்கித்தான் மக்கள் பணி செய்வேன். நாடாளுமன்றப் பணிகளுக்காக டெல்லிக்கும், கட்சிப் பணிகளுக்காகச் சென்னைக்கும் செல்ல நேரிடும். ஆனாலும், அதிக நாள்கள் தூத்துக்குடியில்தான் இருப்பேன்.’’

‘‘ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய முகிலன், காணாமல் போனது பற்றி நீங்கள் பேசுவதில்லையே?’’

‘‘இது தொடர்பாக ட்விட்டரில் உடனே பதிவிட்டேன். தொடர்ந்து பேசிவருகிறேன். ஒரு சுற்றுச்சூழல் போராளிக்கு ஏற்பட்ட நிலைக்குக் காரணமான சர்வாதிகார ஆட்சியைக் கண்டிக்கிறேன்.’’

‘‘தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறும்.’’

‘‘மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா?’’

‘‘அதைக் கட்சித் தலைமைதான் முடிவுசெய்யும்.’’

‘‘உங்கள் அப்பா கருணாநிதி இல்லாமல், இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். உங்களது மனநிலை எப்படி உள்ளது?’’

‘‘அவர் என் அப்பா என்பதுடன் தலைவர் என்பது மிக முக்கியம். அந்தத் தலைவர், என்னுடன் இல்லை என்றே நான் நினைக்கவில்லை.’’

-இ.கார்த்திகேயன்
படங்கள்: ப.கதிரவன்