கன்னித்தேர்தலை சந்திக்கிறது கமல்ஹாசன் கட்சி. அபார நம்பிக்கையுடன் களமாடிவருகிறார்கள் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள்.

ஏழு முதல் பதினைந்து சதவிகிதம் வரை மக்கள் நீதி மய்யத்துக்குச் செல்வாக்கு இருப்பதாகவும், முதல்முறை வாக்காளர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள், ம.நீ.ம-த்துக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் கணிப்புகள் சொல்கின்றன. இதெல்லாம் தேர்தல் கணக்கு. ஆனால், கமல்ஹாசனைப் போன்ற சிந்தனாவாதிகளின் அரசியல் என்பது, தேர்தலுடன் மட்டும் நின்றுவிடக்கூடிய ஒன்றல்ல. கமலும் அதை கட்டாயம் உணர்ந்தே இருப்பார்!

அடிப்படையில், அரவிந்த் கெஜ்ரிவாலை அடியொற்றி அரசியலுக்கு வந்தவர் கமல். ஆம்ஆத்மியைப்போலவே, ‘நேர்மை, ஊழல் ஒழிப்பு’ அம்சங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டது, மக்கள் நீதி மய்யம். ஆனால், பொதுத்தன்மை அதிகம் கொண்ட டெல்லியின் அரசியல் போக்கு, திராவிடத்தன்மை அதிகம் கொண்ட தமிழ்நாட்டில் செல்லுபடியாகுமா என்பதை கமல் வாங்கும் வாக்குகள் நமக்குச் சொல்லிவிடும்.

ஆனாலும், ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். கமல் கவசமாகக்கொண்டிருக்கும் ‘நேர்மையாளர்’ எனும் பிம்பம், களத்தில் அவருக்கு அதிகமாகவே கை கொடுக்கிறது. அ.தி.மு.க மீதும் தி.மு.க மீதும் அவர் வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, அந்த பிம்பமே மதிப்பை ஏற்படுத்துகிறது. நாற்பதிலும் தனித்து நிற்பதால், இன்னும் தைரியமாக இறங்கி அடிக்கும் வல்லமையையும் கொண்டிருக்கிறார். நகரப்பகுதிகளில் இது நன்றாகவே எடுபடுகிறது. குறிப்பாக, படித்த வாக்காளர்கள், பெண்கள், முதல் தலைமுறை வாக்காளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

கிராமசபைகள், கோவைக்கென தனி தேர்தல் அறிக்கை, படித்த வேட்பாளர்கள், நவீனத் தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்படும் மேடைகள் போன்றவை கமலை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள். ஆனால், மத்தியில் ஆளும் அரசை அவர் விமர்சிக்கும் அளவீடு குறித்துதான் சர்ச்சைகள் எழுகின்றன. ’மாநில அரசை விமர்சிக்கும்போது விருமாண்டியாகப் பாய்பவர், மத்திய அரசை விமர்சிக்கும்போது மட்டும் தெனாலியாகப் பயந்து பதுங்குகிறார்’ என்றே பேசிக் கொள்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இன்னொரு புறம், ‘மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன சார்?’ என்று கேட்கும் போதெல்லாம், ‘மக்கள் நலன்’ என்பதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘மக்கள் நலன்’ என்பது பொதுவான நோக்கம்தானே தவிர கொள்கையல்ல என்பதை எத்தனைமுறை எடுத்துச்சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்கிறார். மக்கள் நலன் மட்டுமே கொள்கை என்பதை பாரதூரமாகப் பார்க்கையில், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அறிய மறுக்கிறார். நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பும், எடப்பாடியின் எட்டுவழிச்சாலையும்கூட மக்கள் நலனே. ஆனால் அவை ஏற்படுத்திய விளைவுகளை நாம் அறிவோம்.

கமலின் ‘மய்யம்’ மனநிலையை காமெடியாகவே பார்க்கிறது தமிழ்ச் சமூகம். ஒரு கலைஞன் எந்தச் சட்டகத்திலும் அடைபட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஓர் அரசியல்வாதி ஏதேனும் ஒரு சட்டகத்துக்குள் அடைபட்டே தீர வேண்டும் அல்லவா? ‘வலதும் இனிக்கும்... இடதும் இனிக்கும்...’ என்றால், எங்கேயோ சமரசமாகிறார் என்றுதான் நினைப்பான் சாமானியன். இதுதான் கமல் அதிகளவில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். சர்வாதிகாரத்தை எதிர்க்க ஆரம்பித்த பிறகுதான், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கே மற்ற மாநிலங்களில் மதிப்பு ஏற்படத் தொடங்கியது!

காலம் மாறுகிறது. சாதி, மத வெறியையும் சர்வாதிகாரப் போக்கையும் வலுவான சொற்களால் எதிர்க்கும் அரசியலை ஆரம்பித்திருக் கிறார்கள், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளைய தலைவர்கள். இந்தக் காலத்தில், ‘ஒன்று கூடுவோம் விடை தேடுவோம்’ என்று பொத்தாம்பொதுவாக அரசியல் பேசிக்கொண்டிருப்பது, இளைஞர் களிடம் ஒவ்வாமையையே ஏற்படுத்தும். ஆம் ஆத்மி பாணியில், இளைஞர்களின் செல்வாக்கைப் பெருமளவில் நம்பியிருப்பவருக்கு, இது பெரும் பின்னடைவாகவே முடியும். ஏனென்றால், பிரபலங்கள் ஆரம்பிக்கும் கட்சிக்கு அந்தப் பிரபலங்கள் மட்டுமே அடையாளம். கமல் ஒருபடி சறுக்கும்போது, மக்கள் நீதி மய்யமும் ஒருபடி சேர்ந்தே சறுக்குகிறது.

எப்போது பார்த்தாலும் பட்டிமன்ற பேச்சாளரைப் போலவே கமல் சொல்லெடுப்பதும் பலருக்கு சலிப்பையே ஏற்படுத்துகிறது. ‘காகிதப்பூ’ என்ற விமர்சனம் எழுந்தபோது, “நான் பூ அல்ல விதை” என்று கடுப்பேற்றினார். “காவிக்கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா?” என்று கேட்டபோது, “கருப்புக்குள் காவியும் இருக்கிறது” என்று கம்பு சுத்தினார். ஆரம்பகாலத்தில்தான் அப்படிப் பேசினார் என்றால், இப்போதும் அதையே தொடர்கிறார். “நான் நடிகன் என்பதால், மக்களிடம் கண்ணாலேயே பேசினேன்” என்று பேசியதை, எத்தனை முறை... எப்படி யோசித்தாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை.

எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு வருவதாக அறிவித்த சில மாதங்களில் கட்சி ஆரம்பித்ததற் காகவும், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்க முடிவெடுத்ததற்காகவும், காலநேரம் பார்க்காமல், களத்தில் சுற்றிச் சுழல்வதற்காகவும் கமல்ஹாசன், கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவரே!

- சக்திவேல்

படங்கள்: அ.குரூஸ்தனம், வி.ஸ்ரீனிவாசுலு