கடந்த 2016- சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பிரசார பீரங்கியாக வலம்வந்தவர் நடிகை விந்தியா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்த விந்தியா, இந்தத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார். அவரிடம் பேசினோம்.

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘பி.ஜே.பி-யின் அடிமைக் கட்சி அ.தி.மு.க’ என்று சொல்கிறாரே?’’

‘‘மத்தியில் ஆட்சி புரிகின்ற பி.ஜே.பி-க்கு ஐந்து தொகுதிகள் கொடுத்த நாங்கள் அடிமை என்றால், தேறவே தேறாது என்று இந்திய மக்களால் கைகழுவிவிடப்பட்ட காங்கிரஸ் கட்சிக்குப் பத்து தொகுதிகள் கொடுத்த தி.மு.க கொத்தடிமை கட்சிதானே?’’

‘‘நடிகர் கமல், ‘தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்கிறாரே?’’

‘‘சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்தபோது கிடைக்காத மனநிறைவு அரசியலில் கிடைத்திருப்பதாகக் கமல் சொல்லியிருக்கிறார். உண்மையில் அவருக்குக் கிடைத்திருப்பது மனநிறைவு இல்லை... பண நிறைவு. ஏற்கெனவே ‘வசூல் ராஜா’ படத்தில் கமல் நடித்ததை மக்கள் பார்த்தார்கள். இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டி, யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் போடலாம் என்று அறிவித்தபோதே நிச்சயம் அரசியலிலும் அவர் ஒரு வசூல்ராஜா என நிரூபித்துவிட்டார். கமல் வைத்திருக்கிறது பேட்டரி இல்லாத டார்ச். அது மக்களுக்கு ஒளியைத் தராது. கையில் பிடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வலியைத்தான் தரும்.’’

‘‘அ.தி.மு.க ஓட்டுகளை தினகரன் பிரிப்பார் என்கிறார்களே?’’

‘‘அம்மாமீது ஆணையாகச் சொல்கிறேன். தினகரன் கண்டிப்பாகப் பிரிப்பார். எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, கூடவே இருந்து குழிபறிக்கும் அத்தனை துரோகிகளின் ஓட்டையும் நிச்சயம் தினகரன் பிரிப்பார். அந்தக் களை எடுப்பு எங்கள் கட்சியை முன்பைவிட உறுதியாக்கும். எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல... நம்பிக்கையான நபர்கள்தான் முக்கியம்.’’

‘‘சீமானின் கடுமையான விமர்சனம் பற்றி?’’

‘‘அம்மா உயிரோடு இருக்கும்போது பதுங்கியிருந்தவர்கள் எல்லாம் இப்போது துள்ளித் திரிகிறார்கள். சீமான் மாதிரி குண்டர்கள் மேல் நம்பிக்கைவைத்து நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. அம்மாவின் தொண்டர்கள் மேல் நம்பிக்கைவைத்து ஆட்சி நடத்துகிறோம். பாம்பு என்றால் பதறிப்போய் பதிலடி தரலாம். பல்லியை எல்லாம் தள்ளி விட்டுப் போகவேண்டும்.’’

‘‘தேர்தல் நேரத்தில் ரெய்டு நடத்துவது எதிர்க்கட்சிகளை பயமுறுத்தத்தானே?’’

‘‘துரைமுருகன், வேலூரிலுள்ள குடோனில், கல்லூரியில் கறுப்புப் பணம் வைத்திருந்தது தவறு இல்லையா? வருமானவரித் துறையினர் தங்கள் கடமையைச் செய்வதற்காக ரெய்டு வருவதுதான் தவறா? மடியில் கனம் இருப்பவர்கள்தான் பயப்பட வேண்டும்.’’

‘‘அம்மாவை எதிர்த்த ராமதாஸின் பா.ம.க கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது நியாயமா?’’

‘‘நாங்கள் அன்புமணியையும் மருத்துவரையும் எதிர்த்திருக் கிறோம். ஆனால், அதில் எங்களுக்கு எந்தவித சொந்த விருப்புவெறுப்பும் இல்லை. அந்தந்த நேர செயல்பாடுகளுக்கு ஏற்றபடி விமர்சனங்கள் மாறும். காடுவெட்டி குரு, கலைஞரின் மொத்த குடும்பத்தையும் பட்டியல் போட்டுத் திட்டினார். அதன்பிறகு பா.ம.க-வை கலைஞர் கூட்டணிக்குக் கூப்பிடவில்லையா?’’

‘‘ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்திருப்பாரா?’’

‘‘அம்மா இருந்திருந்தால் முதலில் இடைத்தேர்தலே நடந்திருக்காது. ஸ்டாலின், ‘அம்மா ஆட்சியைக் கவிழ்க்கணும்... அம்மா ஆட்சியைக் கவிழ்க்கணும்’ என்று காலம் முழுக்க கவர்னர் கையில் மனு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.’’

‘‘விஜயகாந்தை எதிர்த்து அதிதீவிரமாகப் பிரசாரம் செய்த உங்களுக்கு, இந்தத் தேர்தல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?’’

‘‘விஜயகாந்த் எனக்கு சிறந்த நண்பர். பொதுவாழ்வு என்று வந்துவிட்டால் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது. நாடு முழுக்க எத்தனையோ கட்சிகள் எத்தனையோ விஷயங்களில் வேறுபட்டிருந்தாலும், பாகிஸ்தான் மூலமாகப் பிரச்னை வந்தால், ஒற்றுமையாக சேர்கிறோம் இல்லையா... அந்தமாதிரி, தி.மு.க - காங்கிரஸ் என்கிற மக்கள் விரோத சக்தி தோன்றும்போது, அவர்களிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற ஒன்றுசேர்ந்து போராடுவது தப்பில்லை.’’

‘‘நீட் தேர்வு ரத்து பற்றி பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் இல்லையே?’’

‘‘அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக இருக்கிறது. நீட் தேர்வு கொண்டுவந்த காங்கிரஸும், ஆதரித்த தி.மு.க-வும் அதைவைத்து அரசியல் செய்யலாமா? நாங்கள் கண்டிப்பாக நீட் தேர்வை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.’’

- எம்.குணா

படம்: சொ.பாலசுப்ரமணியன்