“ராகுல் காந்தியே நேரடியா ஸ்டாலின்கிட்ட பேசி ஜோதிமணிக்காக கரூர் தொகுதியை வாங்கியிருக்காராம்ல...” என்ற இமேஜுடன் வலம் வருகிறார், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஜோதிமணி. மத்திய இணை அமைச்சர், நாடாளுமன்றத் துணை சபாநாயகர், நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்… எனப் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான தம்பிதுரையை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார். பிரசாரத்துக்கு இடையில் சற்று ஓய்விலிருந்த ஜோதிமணியைச் சந்தித்துப் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ராகுல் காந்தியே ஸ்டாலினிடம் பேசி, கரூர் தொகுதியைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறதே?”

“என்னுடைய சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்துத்தான் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு ராகுல் காந்தி வழங்கியிருக்கிறார். இதற்காகக் காலம் முழுக்க ராகுல் காந்திக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எந்தப் பின்புலமும் இல்லாத எனக்கு வாய்ப்பு கொடுத்ததன் மூலம் ‘காங்கிரஸில் காலம்காலமாக, குடும்ப அரசியலே மேலோங்கி இருக்கிறது’ என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கி இருக்கிறார், ராகுல் காந்தி.’’

“நீண்ட அரசியல் அனுபவம், பல முறை எம்.பி என பலம்கொண்ட தம்பிதுரையை நீங்கள் வீழ்த்தி விடுவீர்களா?”

“பலமான வேட்பாளர் என்று அவரை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? நான்கு முறை கரூர் தொகுதியில் எம்.பி-யாக இருந்திருக்கிறார், சட்டத்துறை இணை அமைச்சராக இருந்திருக்கி றார். துணை சபாநாயகர் என்ற உயரிய பதவியிலும் இருந்திருக்கிறார். ஆனால், இத்தகைய பதவிகளை வைத்து கரூர் தொகுதிக்கு அவர் என்ன உருப்படியான திட்டத்தைக்கொண்டு வந்தார்? ‘எங்க ஊருக்கு என்ன செஞ்சீங்க?’ என்று கேள்வி கேட்டு மக்கள் அவரைத் துரத்தி வருகிறார்கள். என்னைக் கேட்டால்… அ.தி.மு.க. வேட்பாளர்களிலேயே பலவீனமான வேட்பாளர் தம்பிதுரைதான்.”

“தம்பிதுரை, தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஊருக்கு ஊர் பேருந்து நிறுத்தம், ஊருக்கு ஊர் நாடக மேடை… வேறு உருப்படியாக என்ன செய்திருக்கிறார்? இந்தியாவிலேயே நான்காவது பெரிய ஜவுளி ஏற்றுமதி நகரம் கரூர். பஸ் பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி, டெக்ஸ்டைல்ஸ் என்று தொழில்கள் நிறைந்த பகுதி இது. ஆனால், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவற்றால்... 50,000 சிறு, குறு தொழிற்கூடங்கள் இங்கே மூடப்பட்டுள்ளன. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க தம்பிதுரை என்ன செய்தார்?

தனது பதவியைப் பயன்படுத்தி ஒரு வேளாண் கல்லூரி உட்பட 45 கல்லூரிகளைச் சொந்தமாக நடத்தி வருகிறார் அவர். 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிக்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அவரது கல்லூரிகளில் கரூர் தொகுதி யைச் சேர்ந்த ஒரு மாணவனைக்கூட அவர் இலவசமாகப் படிக்க வைத்தது கிடையாது. தொகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம். குடிதண்ணீர் இல்லை என்று சொல்லித்தான் அவரை மக்கள் விரட்டியடிக் கிறார்கள். இந்தத் தேர்தலில் தம்பிதுரைக்குத் ‘தண்ணியில்தான் கண்டம்’.”

“தம்பிதுரை, பணபலம் மூலம் வெற்றிபெற்று விடுவார் என்கிறார்களே?”

“இதற்கு முந்தைய தேர்தல்களில் அவர் பணத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி இருக்கலாம். ஆனால், இப்போது ஏமாற்ற முடியாது. அனைத்தையும் அறிந்து வைத்திருக் கிறார்கள், வாக்காளர்கள். இளைஞர்களும், பெண்களும் தம்பிதுரை மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். அதோடு, நாட்டைச் சீரழித்த பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளர் என்பதில் கூடுதல் கோபத்துடன் இருக்கிறார்கள் மக்கள். பி.ஜே.பி-யை எதிர்த்து வந்த இவர், தற்போது பி.ஜே.பி-யையும் மோடியையும் புகழ்வது, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொகுதி முழுக்க எனக்கு மக்கள் பலம் பெருகிக் கொண்டு இருக்கிறது. என் மக்கள் பலத்துக்கு முன்பு அவரது பணபலம் செல்லாக்காசுதான்.”

“காவிரி பிரச்னை, ஈழப் பிரச்னை ஆகியவற்றை வைத்து காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் தம்பிதுரை. இது உங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துமா?”

“காவிரிப் பிரச்னை இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை. ராகுல் காந்தி பிரதம ரானதும் கண்டிப்பாகக் காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். நளினி எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு, சோனியா காந்தி தலையிட்ட பிறகுதான், அவருக்கான தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இவை அனைத்தும் மக்களுக்குத் தெரியும். ஆனால், தொகுதியில் குடிக்கத் தண்ணீர் தரமுடியாத தம்பிதுரை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரேஞ்சுக்குப் பேசுகிறார். இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது.”

“ஐயப்பன் கோயில் விவகாரத்தில், ‘நானும் கோயிலுக்குள் போவேன்; நான்கு பெண்களையும் அழைத்துப் போவேன்’ என்று நீங்கள் சொன்ன விஷயத்தைக் கையிலெடுத்து உங்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் பேசி வருகின்றனவே?”

“அது எனது தனிப்பட்ட கருத்து. சுதந்திர இந்தியாவில் யார் வேண்டு மானாலும், எதற்கும் கருத்து சொல்ல லாம். நீதிமன்றமே சொன்ன ஒரு விஷயத்தில், கேரள மாநில அரசு விரும்பும் ஒரு விஷயத்தில், ஒரு பெண் ணாக என் கருத்தைச் சொன்னேன். அதற்கும், நான் தேர்தலில் போட்டியிடுவதற்கும் என்ன சம்பந்தம்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள், இப்படி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.”

“மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கம் என்ன?”

“கடந்த ஐந்து ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி என மக்களை அலைக்கழித்து விட்டனர். சிறுதொழில்களை அழித்துவிட்டனர். சிறுபான்மை மக்களை ஒடுக்கிவிட்டனர். மோடி சொன்ன ‘புதிய இந்தியா’வில் மாட்டுக்கறி, மாட்டுச்சந்தை, பாபர் மசூதி போன்ற விஷயங்கள் தான் முன்வைக்கப்பட்டன. இன்னொருமுறை இவர்களை ஆளவிட்டால், இந்தியாவைக் கற்கால இந்தியாவாக மாற்றிவிடுவார்கள். கஜா புயல் தமிழகத்தைப் பாதித்தபோது, மோடி வரவில்லை. டெல்லியில் விவசாயிகள் போராடியபோது, அவர்களைப் பார்க்க மோடிக்கு நேரமில்லை. ஆனால், பிரியங்கா சோப்ரா திருமணத்துக்குப் போக நேரமிருந்தது. நாடு சுற்ற நேரம் கிடைக்கிறது. அவரை மீண்டும் ஆளவிட்டால், நாடு சுடுகாடாகி விடும். அதைத் தடுப்பதுதான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கம்”

“நீங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருவீர்கள்?”

“மக்கள் அளிக்கும் ஆதரவே எனது வெற்றியை உறுதிப்படுத்திவிட்டது. இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். வெற்றிபெற்றதும் குடிநீர் பிரச்னையைச் சரி செய்வேன். விளைபொருள்களைச் சேமித்து வைக்க ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு குளிர்பதனக் கிடங்கு வீதம் ஆறு கிடங்குகளை அமைப்பேன். படித்த இளைஞர்கள் அரசு வேலைக்குச் செல்லும் வகையில், இலவசப் பயிற்சி மையங்களை அமைப்பேன். அரசுக் கல்லூரிகளை கொண்டு வருவேன். பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க, பெண்கள் பாதுகாப்பு மையத்தை அமைப்பேன்.”

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்