Published:Updated:

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

Published:Updated:
சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!
சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

தெலங்கானா மாநிலம் சந்திரசேகர் ராவின் அசைக்க முடியாத கோட்டை! இன்னும் 20 வருடங்களுக்கு, அங்கே அவரை அசைக்க ஆட்கள் இல்லை எனும் அளவுக்கு வலுவாக இருக்கிறார் ராவ். வாரிசு அரசியல், கோடிகள் செலவழித்து நடத்தப்படும் யாகங்கள், ஜோதிடத்தின்மீது அதீத நம்பிக்கை என ஏகப்பட்ட பின்னடைவுகள் இருக்கின்றனதான். ஆனாலும், தெலங்கானாவின் 21 மாவட்டங்களிலும் சுனாமியாகச் சுழற்றியடிக்கிறது ‘கே.சி.ஆர் அலை’!

கலுவுகுண்டலா சந்திரசேகர் ராவ் என்கிற கே.சி.ஆர் ஆரம்பகாலங்களில் காங்கிரஸ்காரர்தான். ஆனால், தனித் தெலங்கானா கனவு அவரைத் தனிக்கட்சி காண வைத்தது. 2001-ம் ஆண்டு தனித் தெலங்கானா என்பதை மட்டுமே ஒற்றை இலக்காக அறிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை உருவாக்கினார். கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள், தெலங்கானா பின்னணி கொண்ட காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசத் தலைவர்கள் பலர், சந்திரசேகர் ராவால் ஈர்க்கப்பட்டு டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தார்கள்.

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்தடுத்த ஆண்டுகளில், தெலங்கானாவின் தன்னிகரில்லாத் தலைவராக உருவெடுத்தார் ராவ். 1950-களில் பற்றி எரிந்து, 1970-களில் நீர்த்துப்போன தனித் தெலங்கானா கோரிக்கையை, மீண்டும் அரசியலுக்கு இழுத்துவந்த பெருமை ராவையேச் சேரும். ஆனால், அதை வெறும் ஓட்டு அரசியலாக மட்டும் செய்யவில்லை ராவ். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். தனித் தெலங்கானாவுக்காக இருமுறை இவர் நடத்திய மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள், ராவை இறப்பின் விளிம்புக்கே இழுத்துச்சென்றன. அதன் பின்பே தனித் தெலங்கானா கிடைத்தது. அந்த வெற்றியில், காங்கிரஸூக்குக் கணிசமான பங்கு உண்டு என்றாலும், அதைவைத்து காங்கிரஸ் எந்தப் பலனும் அடைந்துவிட முடியாதபடி சாதுர்யமாக அரசியல் செய்துவருகிறார் ராவ். தனித் தெலங்கானா கோரிக்கையை நிறைவேற்றியும், தெலங்கானாவில் பெரிய வெற்றிகளைப்பெற முடியாமல் காங்கிரஸ் தடுமாறி வருவதே அதற்கு சாட்சி.

தெலங்கானா மாநிலம் உதயமான 2014-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 63 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தார் சந்திரசேகர் ராவ். அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும், ராவுக்கே அதிகத் தொகுதிகள் கிடைத்தன. மொத்தம் பத்து தொகுதிகள். ‘நீலு, நிதுலு, நியமிக்கலு (நீர், நிதி, நியமனம்) என்பது, சந்திரசேகர் ராவின் முக்கிய முழக்கங்களில் ஒன்று. ஆட்சியில் அமர்ந்ததும், தெலங்கானாவின் கடைக்கோடி கிராமங்கள்வரை தங்கு தடையில்லாத நீர்ப்பாதையை உருவாக்கிக் காட்டினார் ராவ். கூடவே, மின்சாரப் பற்றாக்குறையையும் சரிசெய்தார். இந்தியாவின் இளைய குழந்தையான தெலங்கானா, இப்போது தொழில்வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் காட்டுவதற்கு, ராவின் அணுகுமுறையே காரணம். தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு, 15 நாள்களுக்குள் அனுமதி வழங்கும் அளவுக்கு நிர்வாகத்தை நீரோடைபோல சீராக்கியிருக்கிறார் ராவ்.

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

பெண்களைப் பாதுகாக்கப் பெண் காவலர்களால் மட்டுமே ஆன ‘ஷீ டீம் (She Team) அமைத்தது, ராவின் சாதனைகளில் ஒன்று. கைவசம் ஹைதராபாத்தை வைத்துக்கொண்டு தகவல் தொழில் நுட்பத்தில் சும்மாயிருக்க முடியுமா என்ன? தொழில் முனைவோர்களை அதிகரிக்க ராவ் உருவாக்கிய ‘டி - ஹப்’, அசத்தலான பணிகளைச் செய்துவருகிறது. தொழில் வளர்ச்சிகளில் கவனம் செலுத்துவதுடன், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணப் பயன்கள் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ராவ். நம்மூர் ராமதாஸ்கூட அதை வெகுவாகப் பாராட்டியது நினைவிருக்கலாம். இதனாலேயே, தெலங்கானாவின் தேவுடுவாக உருமாறி நிற்கிறார் ராவ். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், டி.ஆர்.எஸ் பெற்ற இடங்கள் 100. கிட்டத்தட்ட 90 சதவிகித இடங்கள்.

இதோ, இப்போது வாக்குப்பதிவு (63 %) முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட ‘இருக்கும் 17 தொகுதிகளில் 16 தொகுதிகள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கே’ என்கின்றன செய்திகள். அதில், ஏ.ஐ.ஐ.எம்.எம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி போட்டியிடும் ஹைதராபாத்தும் அடக்கம். தேர்தல் பிரசாரத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை கே.சி.ஆர்.

இன்னொரு பக்கம், ‘தெலங்கானாவில் ஆறு தொகுதிகள்வரை வெல்வோம்’ என்று சொல்லிவருகிறது காங்கிரஸ். வாக்குப்பதிவுக்கு முன் பத்து தொகுதிகள் என்றது. ஆனால், வாக்குப்பதிவுக்குப் பிறகு அந்த எண்ணிக்கையை ஏனோ குறைத்துவிட்டது காங்கிரஸ். தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு அடுத்தபடியாக கொஞ்சமேனும் வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான். ஆந்திரத்தில் வீசும் காங்கிரஸ் மீதான ‘எதிர்ப்பு அலை’ தெலங்கானாவில் இல்லை. ஆனால், சந்திரசேகர் ராவுக்கு இணையாக முன்னிறுத்த காங்கிரஸில் ஒரு தலைவர்கூட இல்லை என்பதுதான், காங்கிரஸின் அவலநிலை. ஆனாலும், இந்த முறை கம்மம், மல்காஜ்கிரி, மஹபூபாபாத், நால்கொண்டா, செவாலா போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கடுமையான போட்டியை அளிக்கும். இதில், கம்மம் காங்கிரஸுக்கு கன்ஃபார்ம் என்கிறார்கள். ஏனென்றால், அங்கே, முன்னாள் அமைச்சர் ரேணுகா தேவி போட்டியிடுகிறார். வேட்பாளர் தேர்வு முதல் பூத் கமிட்டி அமைப்பதுவரை காங்கிரஸ் சொதப்பிய சொதப்புக்கு, ஆறு கிடைத்தாலே அதிகம்தான். அதுவும் கிடைக்கவில்லை என்றால், கம்மத்தை மட்டும் வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

அதிசயிக்கத்தக்க வகையில், தெலங்கானாவில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது பி.ஜே.பி. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் இப்போது வைத்திருக்கும் வாக்கு வங்கியை பி.ஜே.பி நிகர் செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்தத் தேர்தலில், நான்கு தொகுதிகளுக்கு அடிபோடுகிறது பி.ஜே.பி. அவற்றில் செஹந்திராபாத், மெஹ்பூப் நகர் ஆகிய இரண்டு தொகுதிகள் நிச்சயம் என்கிறார்கள். செஹந்திராபாத் ஏற்கெனவே பி.ஜே.பி வேரூன்றியிருக்கும் தொகுதி. அதாவது, தமிழ்நாட்டின் கன்னியாகுமரிபோல. காங்கிரஸிலிருந்து கடைசிநேரத்தில் கட்சி மாறிய டி.கே.அருணாவை மெஹ்பூப் நகரில், களமிறக்கி யிருக்கிறார்கள். தொகுதியில் நன்கு அறிமுகமான முகம் என்பதால், அருணாவுக்கு வெற்றிபெறுவதில் சிக்கல் எதுவும் இருக்காது என்கிறார்கள்.

அடிப்படையில், ஆந்திரமும் தெலங்கானாவும் புராணங்களை போற்றும் பூமி. இதனால், இந்து - முஸ்லிம் வேறுபாட்டையே அதிகளவில் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது பி.ஜே.பி. இதற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யா நகர்’ என்று மாற்றுவோம்’ என்று பேசிச்சென்றார் யோகி ஆதித்யநாத். இப்போது, ஓவைசியின் ஆதரவாளர்களை ‘ரஸாக்கர்ஸ்’ என்று விமர்சித்து, அரசியல் களத்தை தகிக்க வைத்திருக்கிறார் அமித் ஷா. ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தருணத்தில், நிஜாமுக்கு ஆதரவாகக் களமிறங்கிய படைவீரர்களையே ‘ரஸாக்கர்ஸ்’ என்பார்கள். அப்படிப்பட்டவர்களுடன் ஓவைசி ஆதரவாளர் களை ஒப்பிட்டுப்பேசி, உ.பி பாணி அரசியலை தெலங்கானாவுக்கும் இறக்குமதி செய்திருக்கிறது பி.ஜே.பி.

அதுவும், ‘மோடி பாகிஸ்தானுக்கு பதிலடி தந்தார். அப்படி சந்திரசேகர் ராவ் தருவாரா?’ என்று அமித் ஷா பேசியதை, எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் சந்திரசேகர் ராவ், பாகிஸ்தானுக்கு எதற்கு பதிலடி தரவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவேளை, சந்திரசேகர் ராவின் பிரதமர் கனவை அறிந்து அப்படிப் பேசினாரோ என்னவோ. பெரும்பான்மையை எட்ட முடியாத பட்சத்தில், பி.ஜே.பி செயல்படுத்தவிருக்கும் ‘பிளான் பி’ திட்டத்தில், சந்திரசேகர் ராவும் உண்டு என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். இது இன்னும் நேரடியாக உறுதியாகவில்லை. ஆனால், ஜெகன்மோகனுக்கு மறைமுகமாக ராவ் செய்துவரும் உதவிகள், அதை மறைமுகமாக உறுதிப்படுத்துகின்றன. பி.ஜே.பி ஆதரவு மனநிலையில் இருக்கும் தென்னிந்திய தலைவர்களில் முக்கியமானவர் ஜெகன். சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்நிலை எடுக்கிறேன் பேர்வழி என்று, மோடியை பிரதமராக்கத் துடிக்கும் படைவீரர்களில் ஒருவராக ராவ் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கே.சி.ஆரின் கேம் பிளான் என்னவாக இருக்கப்போகிறது என்பது, மே 23-ல் தெரிந்துவிடும்!

- சக்திவேல்