Published:Updated:

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!
பிரீமியம் ஸ்டோரி
25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

Published:Updated:
25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!
பிரீமியம் ஸ்டோரி
25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!
25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

சூடு பறக்கத் தொடங்கிவிட்டது சூலூர் தேர்தல் களம். துரைமுருகன் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் அதில் அதகள ரகம்.

இந்தத் தொகுதியில் செ.ம.வேலுசாமி மீண்டும் களம் இறங்குவார் என்று கோவை அ.தி.மு.க-வினர் எதிர்பார்க்க... மறைந்த எம்.எல்.ஏ கனகராஜின் தம்பி கந்தசாமிக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார் அமைச்சர் வேலுமணி. தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி களம் இறங்கி யிருக்கிறார். ஏப்ரல் 28-ம் தேதி காலையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வாய்ப்பு இல்லாததால், அதிருப்தியில் இருந்த செ.ம.வேலுசாமி அண்ட் கோ இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது. அங்கு அவருக்குச் செல்வாக்கு சற்று அதிகம் என்பதால் அ.தி.மு.க கூட்டத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்துவந்து சமாளித்தார்கள். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் தலைகளையும் அதிகம் பார்க்கமுடியவில்லை.

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேநாள் மாலையில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டமும் நடந்தது. செ.ம.வேலுசாமியை அறிவிக்காததால் தி.மு.க–வினர் உற்சாக மாக இருந்தார்கள். கூடிய கூட்டமும் அமோகம். கூட்டணிக் கட்சியினரும் திரளாகக் கலந்துகொண்டனர். சூலூர் தொகுதிக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது தி.மு.க தலைமை. பொங்கலூர் பழனிச்சாமி தினமும் எங்கே செல்ல வேண்டும், என்ன பேச வேண்டும்? என்பதை எல்லாம் அவர்தான் முடிவு செய்கிறார்.

சூலூரில் காங்கிரஸ் சற்று வலுவாக இருக்கும் நிலையில், காங்கிரஸார் ஒதுங்கியே நிற்பதையும் பார்க்க முடிந்தது. தி.மு.க தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் தருவதில்லை என்பது அவர்களின் குமுறலாக இருக்கிறது. இதை சரிக்கட்டும் விதமாக, சமீபத்தில் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட் டோர் காங்கிரஸ் துண்டை அணிந்திருந்தனர். கூட்டத்தில் ஸ்டாலினுக்கு இணையாக ராகுல் காந்திக்கும் பாராட்டு மழை. கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஆ.ராசா, கோவைத் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர். மேடையில் அமர்வோர் பட்டியலில் சண்முகசுந்தரம் பெயர் இல்லாததால் அவரைப் பலரும் அழைத்தும் மேடை ஏறவில்லை.

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

துரைமுருகனிடம், ‘என்னைப் பற்றிய நல்ல விஷயங்களை நிறைய பேசுங்கள்’ என்று ஒப்பனாகவே கோரிக்கை வைத்தார் பொங்கலூர் பழனிச்சாமி. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் வேலுமணி குறித்துப் பேசியதற்காக ஸ்டாலின் மீது கோவை போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. இதனால், பல்வேறு ஆதாரங்களைக் காண்பித்து வேலுமணியைப் போட்டுத்தாக்கினார் எ.வ.வேலு. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனின் பேச்சு எல்லோரையும் ஈர்த்தது.

“அ.தி.மு.க-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை. செ.ம.வேலுசாமி இந்த மண்ணின் மைந்தர். கந்தசாமியைவிட அவர் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்? நான் செ.ம.வேலுசாமி மீது பாசம் காட்டவில்லை. அவர் நின்றிருந்தால் களம் சூடுபிடித்திருக்கும். நமக்குச் சற்று போட்டி இருந்திருக்கும். அவருக்கு சீட் வழங்காததற்குக் காரணம் என்ன?” என்று வேலுமணிக்குக் கேள்வி எழுப்பிய ஈஸ்வரன், பிறகு துரைமுருகனைப் பார்த்து, “மோடியும், எடப்பாடியுமே உங்களைப் பார்த்துத்தான் பயப்படுகின்றனர். அதனால்தான் வேலூரில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை. நீங்கள் பேசினால்தான் முதல்வர் பதவியே போகிறதே?  சட்டசபையில் வேலுசாமியுடனும் ஏதாவது பேசினீர்களா? அதனால்தான் அவரை வேட்பாளராகத் தேர்வுசெய்யவில்லையா?” என்று கேட்க... அனைவரும் சிரித்தனர்.

25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன்! - துரைமுருகன் சூலூர் சூளுரை!

துரைமுருகன் பேசும்போது, ‘‘மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியும் சக்தியை கலைஞர் பெற்றிருந்தார். தற்போது அந்த சக்தியை ஸ்டாலின் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும். ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற வாய்ப்புள்ளது. என்னுடைய அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் நமக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும். அதனால்தான், ஆட்சியைத் தக்கவைக்க அவசர அவசரமாக மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சூலூரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கோடிக் கணக்கான பணத்தை இறக்கியிருக்கிறார்கள். ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது 100 சதவிகிதம் உறுதி. சூலூரிலும் வெற்றி பெறச்செய்யுங்கள். இந்த ஆட்சியை 25 நாள்களுக்குள் மாற்றிக் காட்டுகிறேன். சட்டசபை கூட்டியதும் அதைச் செய்வேன். நான் ஒரே இடத்தில்தான் உட்கார்ந்திருப்பேன். ஆனால், அங்கே வெடி வெடிக்கும்” என்றார் ஆவேசமாக.

யாருக்கு வெடிவெடிக்கும்... யாருடைய கொடி பறக்கும்... மே 23-ம் தேதி தெரியும்!

- இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism