Published:Updated:

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

Published:Updated:
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

திருப்பரங்குன்றம் தொகுதியில், சித்திரை வெயிலை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருக்கிறது, இடைத்தேர்தல். கைவசம் இருந்த தொகுதியை விட்டுவிடக் கூடாது என்று பதற்றத்துடன் பணியாற்றுகிறது அ.தி.மு.க. கடந்த முறை இழந்த வெற்றி வாய்ப்பை இந்த முறை பெற்றே ஆக வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. ‘எப்படி ஜெயிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்’ என்று களத்தில் இருக்கிறார்கள் அ.ம.மு.க-வினர்.

தேர்தல் பணிக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்திருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தங்கியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் கரை வேட்டிகள்தான்.

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்செட் அ.தி.மு.க!

.தி.மு.க சார்பில், அவனியாபுரம் செயலாளர் முனியாண்டி போட்டியிடுகிறார். ஆனாலும், அ.தி.மு.க முகாமில் உற்சாகம் இல்லை. முக்கிய நிர்வாகிகள் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். கடந்த காலங்களில், ஆர்.பி.உதயகுமார், இந்தத் தொகுதியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். ஒவ்வொரு வீட்டுக்கும் சைக்கிள், ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், அண்டா, சேலை, வேட்டி என்று வகைதொகை இல்லாமல் வாரிக்கொடுத்து மக்களைத் தயார்படுத்தியிருந்தார். செல்லூர் ராஜு தனது கூட்டுறவுத்துறை மூலம், ஆயிரக்கணக்கான பேருக்குச் சிறு வணிகக்கடனாகத் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். இதையெல்லாம் மனதில் கொண்டு, உதயகுமாரும் செல்லூர் ராஜுவும் தத்தமது ஆள்களுக்கு திருப்பரங்குன்றம் தொகுதியை வாங்கித்தர நினைத்தார்கள். அது நடக்காததுதான் அவர்கள் அப்செட் ஆனதுக்குக் காரணம். அதைப் புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘நமது ஆட்சி தொடரவேண்டும், நீங்களும் நீடிக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால், உங்கள் வருத்தங்களை மறந்துவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால், வேறுவழியில்லாமல் களம் இறங்கியிருக்கிறார்கள் இவர்கள். ஏற்கெனவே தொகுதி மக்களுக்குப் பல அன்பளிப்புகளை வழங்கியிருந்தாலும்… மீண்டும் இரண்டு ரவுண்டுகள் கவனிப்பதற்காகப் பெரும் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வேட்பாளர் முனியாண்டிக்குத் தொகுதிக்குள் பெரிய செல்வாக்கு கிடையாது. பொம்மைபோல வலம் வருகிறார்.

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

காலரைத் தூக்கிவிடும் அ.ம.மு.க!

ங்கு அ.ம.மு.க வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன். தொகுதியில் நன்கு அறிமுகமானவர். பிரமலைக்கள்ளர் சமூகத்தில் முக்கியமான நபர். வசதிக்கும் குறைவு இல்லை. இவருக்குத் தேர்தல் பணியாற்றத் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பெரும் படை இறங்கியிருக்கிறது. கடந்த முறை ஏ.கே.போஸ் போட்டியிட்டபோது இங்கு வந்திருந்த தேனி மாவட்டத்தினர், கைத்தறி நகர்ப் பகுதியில் முகாமிட்டு 20,000 வாக்குகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். தற்போது, அதே பாணியில் தொகுதி முழுக்க வாக்குகளை அள்ளுவதற்காக வியூகம் அமைத்திருக்கிறார், தங்க தமிழ்ச்செல்வன். ‘எங்களுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி, அ.தி.மு.க சீன்லயே இல்ல...’ என்று காலரைத் தூக்கி விடுகிறார்கள் அ.ம.மு.க-வினர்.

இவர்களுக்கு இடையே, நாம் தமிழர் சார்பாகப் பாண்டியம்மாள் என்பவரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சக்திவேல் என்பவரும் களத்தில் இருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது சாதியா, பணமா, மக்கள் செல்வாக்கா என்பது போகப்போகத் தான் தெரியும்.

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க!

‘சர்வைவல்’ சரவணன்!

தி
.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்குத் தேர்தல் பணியாற்ற, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் பெரும் படையே களம் இறங்கியிருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு இணையாகப் பணம் செலவழிக்கத் தயாராகிவிட்டது தி.மு.க. கட்சி நிதியுடன், சொந்த நிதியையும் இறக்க முடிவு செய்துள்ளாராம் சரவணன். ‘கடந்த முறை காலை வாரிவிட்ட நிர்வாகிகளிடம், இந்த முறை தேர்தல் பணிகளை ஒப்படைக்கக் கூடாது’ என்று ஐ.பெரியசாமியிடம் சரவணன் கூறியுள்ளாராம். அதேபோல எந்தெந்தப் பகுதிகளில், கடந்த முறை வாக்குகள் குறை வாகக் கிடைத்ததோ அந்தப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களைச் சிறப்பாகக் கவனிக்கவும் தனியாக ஆட்களை நியமித்திருக்கிறார் சரவணன்.

சரவணனின் பூர்விக கிராமம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ளது. அத்துடன், கடந்த தேர்தலில் போட்டியிட்டது, மருத்துவர் என்ற முறையில் மக்கள் தொடர்பில் இருப்பது என தொகுதியில் நன்கு அறிமுகமானவர் சரவணன். இவர், அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், தன் சமூகத்தினரின் வாக்குகளை அப்படியே பெற கடும் முயற்சி மேற்கொண் டிருக்கிறார். கூடவே யாதவர், முத்தரையர், பட்டியல் இனத்தினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் ஓட்டுகளையும் தன் பக்கம் இழுப்பதற்காக, பல சமூகத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார் சரவணன். தொகுதியில், பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் அதிகம். அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டி, அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், இவர்கள் இருவருக்கும் பிரமலைக்கள்ளர் சமூகத்தினரின் ஓட்டுகள் பிரியும். அதேசமயம் அ.தி.மு.க ஓட்டுகளையும் சேர்த்து மகேந்திரன் பிரிப்பார். அதனால் தனக்கு வெற்றி எளிதாகிவிடும் எனச் சாதிரீதியாகவும் கணக்குப் போட்டிருக்கிறார் சரவணன்.

- செ.சல்மான்,  படங்கள்: வீ.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism