Published:Updated:

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்

Published:Updated:
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?
அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

.தி.மு.க-வின் கோட்டை என்று கருதப்படும் ஓட்டப் பிடாரத்தில் சூரியனை உதிக்கச் செய்ய கங்கணம் கட்டிக் களம் இறங்கியுள்ளது தி.மு.க தலைமை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பின் தங்கியது ஓட்டப்பிடாரம் தனித் தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இரண்டு வார்டுகளைத் தவிர்த்து, நகர்ப் பகுதியே இதில் இல்லை. எல்லாமே ஊராட்சிப் பகுதிகள்தான்.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், தி.மு.க சார்பில் சண்முகையா, அ.ம.மு.க சார்பில் (தகுதிநீக்கம் செய்யப்பட்ட) முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா, மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர் காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோஷ்டிபூசல்... அதிர்ச்சியில் அமைச்சர்கள்!

கடந்த ஆறு தேர்தல்களில் கடும் போட்டியைச் சந்தித்த அ.தி.மு.க, புதிய தமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க – தி.மு.க இடையில்தான் போட்டி. அமைச்சர் காமராஜ் தலைமையில் அமைச்சர்கள் பலரும் இங்கேயே முகாமிட்டு, தேர்தல் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால், தொகுதிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல், அமைச்சர்களையே அதிரவைத்துள்ளது.

நெல்லை - தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னத்துரை, இங்கு சீட் கேட்டு, கிடைக்காததால் ஒதுங்கிவிட்டார். ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை தலைவி ஜெயலலிதா, மோகனை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். ஜெயலலிதா வைச் சரிக்கட்டி விடலாம் என்று நம்பும் அமைச்சர் அண்ட் கோ, சின்னத்துரை ஒதுங்குவதை அச்சத்துடன் பார்க்கிறது.

தொகுதியில், அ.தி.மு.க–வுக்கு இணையாக இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் வாக்குவங்கியும் சேர்ந்து வெற்றி தேடித் தருமென்று நம்புகிறது அ.தி.மு.க தலைமை. ஆனால், தென்காசி மக்களவைத் தனித்தொகுதியில் கிருஷ்ணசாமிக்கு அ.தி.மு.க–வினர் சரியாக வேலைபார்க்காத கோபத்தில், அவரது கட்சிக்காரர்கள் இங்கு பழிவாங்கத் திட்டமிட்டு இருப்ப தாக ஒரு தகவல் பரவி வருகிறது. இருப்பினும் சின்னம், அதிகாரபலம், பண பலத்தால் தொகுதியைக் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறது அ.தி.மு.க.

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

வேகம்... வேகம்... அ.தி.மு.க!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பே தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டதால், கனிமொழியுடன் இணைந்து அப்போதே வாக்குச்சேகரிப்பைத் தொடங்கி விட்டார் சண்முகையா. தொகுதிப் பொறுப்பாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டதும், மாவட்ட தி.மு.க-வின் இரு துருவங்களான கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து, “அ.தி.மு.க இரண்டு அணியாகப் பிரிந்திருந்தபோதுதான் தி.மு.க இங்கு ஜெயித்துள்ளது. இப்போதும் அங்கு அதே நிலைதான் உள்ளது. எனவே, இப்போது ஜெயிக்காவிட்டால், எப்போதுமே ஜெயிக்க முடியாது’’ என்று பேசியிருக்கிறார். அதற்கேற்ப தேர்தல் பணியிலும் கொஞ்சம் வேகம் தெரிகிறது.

தொகுதி விவசாயிகளிடம், ‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால், வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செஞ்சுடுவாங்க. 100 நாள் வேலை, 150 நாள்களாக அதிகரிக்கும்” என்று இரண்டு வாக்குறுதிகளையும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்ற னர் தி.மு.க-வினர். இது, கிராமப்பகுதியில் டீக்கடைகளிலும் திண்ணைகளிலும் மக்கள் பேசும் அளவுக்கு ‘ஒர்க் அவுட்’ ஆகியிருக்கிறது. திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ் ணன் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அவரது எல்லைக்குள் நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் தீவிரமாக வேலை பார்க்கிறார்.

அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா?

அனுதாபம் தேடும் அ.ம.மு.க!

அ.ம.மு.க வேட்பாளர் சுந்தர்ராஜ், “அம்மாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வன் நான். தொகுதிக்கு நிறைய செய்யணும்னு நினைச்சேன். இந்த ஆட்சியாளர்கள் என்னை எதுவும் செய்யவிடவில்லை. திரும்பவும் பதவிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என்று பேசி அனுதாப வாக்குகளை அள்ளப் பார்க்கிறார். பட்டியல் சமூக மக்களின் வாக்குகளைப் பெரிய கட்சிகள் பிரிக்கும் நிலையில், தேவர் உள்ளிட்ட பிற சமூக வாக்குகளைக் குறிவைத்துள்ளார் சுந்தர்ராஜ். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்கள் நடந்த போராட்டத்தில் ஒருநாள்கூட எட்டிப் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீதிருக்கிறது.

இவர்கள் தவிர, கமல்ஹாசனை நம்பிக் களமிறங்கியுள்ளார் காந்தி. ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம்’ என்பதே இவரது பிரதான வாக்குறுதி. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 குடும்பங்களில், நான்கு குடும்பங்களை மேடையில் முன்னிறுத்தி கமல் பேசியது மக்களிடம் இன்னும் பேசப்படு கிறது. அவர் பரப்புரைக்கு வந்தால் இளைஞர் கள், படித்த நடுநிலையாளர்கள் வாக்குகளை நிச்சயம் அள்ளிவிடுவார். இதே இளைய தலைமுறை வாக்குகளையே நாம் தமிழர் கட்சி யும் குறி வைத்துள்ளது. அ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ப.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism