Published:Updated:

“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் நினைத்து வாக்களியுங்கள்!”

“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் நினைத்து வாக்களியுங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் நினைத்து வாக்களியுங்கள்!”

ஓட்டப்பிடாரம் தேர்தல் பிரசாரத்தில் கமல்!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுமே மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், துப்பாக்கிச்சூட்டை மையப்படுத்தி ஓட்டப்பிடாரத்தில் பிரசாரம் மேற்கொண்டார் கமல்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் போராட்டத்தைத் தொடங்கிய அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பிரசாரத்தின்போது கனிமொழியோ, தமிழிசையோ செல்லவில்லை. எந்தக் கட்சியும் வாக்கு கேட்டுச் செல்லாத நிலையில்,  மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மட்டுமே வாக்கு சேகரிக்கச் சென்றார். தற்போது ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் அதே நிலைமைதான்.

“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் நினைத்து வாக்களியுங்கள்!”

ஏற்கெனவே தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் நீதிமய்யத்தின் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த  13 பேரில் 4 பேர் (ஜான்சி, ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், காளியப்பன்) குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேரை மேடையில் ஏற்றியிருந்தார். அதில், ‘‘ஏற்கெனவே வலியில் உள்ளவர்களை மேடையில் நிறுத்தியது அசிங்கமான வேலைதான். ஆனால், நம்நாட்டு ராணுவ வீரர்களை அடையாளப்படுத்தி,  அவர்களின் ரத்தத்தைவைத்து ஓட்டுப்பிச்சை கேட்க நினைத்த மோடியின் செயலைவிட ஒன்றும் கேவலமானது அல்ல” என ஆவேசமாகவும் பேசினார் கமல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் நினைத்து வாக்களியுங்கள்!”

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான ‘மக்கள் நீதி மய்ய’த்தின் வேட்பாளர், காந்தியை ஆதரித்து தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் மே 3-ம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலும்,  காளியப்பனின் தாய் மகேஷ்வரி, தங்கைகள் ரதி, மாலினி ஆகியோர் மேடை ஏற்றப்பட்டனர்.  இந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காளியப்பனின் வீடு உள்ளதால், காளியப்பனின் குடும்பத்துக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேடையில் பேசிய கமல், “என்னை உந்தித் தள்ளிய கோபங்களில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடும் ஒன்று. ஒரு அரசே மக்களைச் சுட்டுக் கொன்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் மரண ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கிராம பஞ்சாயத்துக் கூட்டத்தின் பலத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது மக்கள் நீதி மய்யம்தான். 100 கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், ஆலை அகற்றப்பட்டிருக்கும். துப்பாக்கிச்சூடும் நடந்திருக்காது. எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்தச் சம்பவத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஓட்டுப்போடுங்கள்” என்றார்.

கூட்டம் முடிந்ததும் காளியப்பனின் தாய், தங்கையை தன் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடும்போது ரதியிடம், ‘‘நீ படிச்சி என்னவா ஆகப்போற?”ன்னு கமல் கேட்டதற்கு ‘‘ஐ.பி.எஸ் அதிகாரியா ஆகணும்னு நினைச்சேன் சார். எங்க அண்ணனை போலீஸ் சுட்டதுல இருந்து அந்த ஆசை போயிடுச்சு. எந்த வேலைக்குனாலும் போவேன். ஆனா, போலீஸ் வேலைக்குப் போகமாட்டேன்” எனச் சொன்னதும், கைகளைப் பற்றி கண்ணீர்விட்டாராம் கமல்.

கமலின் இந்த யுக்தியைக் கண்டு மிரண்டுள்ளன தி.மு.க.,  அ.தி.மு.க. கட்சிகள்!

- இ.கார்த்திகேயன்,  படம்: ப.கதிரவன்