வருகிற மே 19-ம் தேதி சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்கவிருக்கிற நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. காரணம்... பணப் பட்டுவாடாவுக்குப் பெயர்போன தொகுதி இது!

தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருப்பதால், அனல் பறக்கப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் வேட்பாளர்கள். அ.தி.மு.க சார்பில், வி.வி.செந்தில்நாதன், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க சார்பில் பி.ஹெச்.ஷாகுல் ஹமீது ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள். இவர்களோடு, நாம் தமிழர் கட்சி சார்பில் பா.க.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ் ஆகியோரும் களத்தில் இருந்தாலும் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில்தான் பலத்த போட்டி.

ஏற்கெனவே இத்தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் செந்தில் பாலாஜி. அதனால், தொகுதி முழுக்க அவருக்கு அத்துப்படி. ‘என்ன செல்வாக்கு இருந்தாலும் பணம் மட்டும்தான் வெற்றியைத் தேடித்தரும்’ என உறுதியாக நம்புகிறார் செந்தில் பாலாஜி. இறுதி நேரத்தில் இரண்டு கிராம் தங்க நாணயம், ஆன்ட்ராய்டு செல்போன் எனக் கொடுத்து வாக்காளர்களைக் கவர அதிரடித் திட்டங்களை வகுத்துவைத்திருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது. ‘சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர், 25,000 ஏழைகளுக்கு இரண்டு சென்ட் நிலம்’ என்று இவர் வீசும் வாக்குறுதிகள் மக்களைக் கவர்கின்றன. அந்தந்த ஏரியாவின் பிரச்னைகளுக்கேற்ப வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் செந்தில் பாலாஜி. தி.மு.க ஜாம்பவான் கே.சி.பழனிசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியிடமிருந்து விலகித்தான் நிற்கிறார்கள். இந்தப் பஞ்சாயத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்வரை கொண்டு போயிருக்கிறார் செந்தில் பாலாஜி. சபரீசன் தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.க சார்பில் போட்டி யிடும் வி.வி.செந்தில்நாதன் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாவட்டச் செயலாளர். ‘என்ன விலை கொடுத்தாவது செந்தில் பாலாஜியை மண் கவ்வ வைக்கவேண்டும்’ என்று முதல்வர் சொல்லியிருப்பதால், செங்கோட்டையன் தலைமையில் எட்டு அமைச்சர்களும் எண்ணற்ற நிர்வாகி களும் முகாமிட்டு செந்தில்நாதனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அரவக்குறிச்சிக்குப் பிரசாரம் செய்யவந்த எடப்பாடி பழனிசாமி, சின்னதாராபுரம் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்தித்து, ‘ஆதரவு’ கேட்டிருக்கிறார். இது செந்தில்நாதனுக்குக் கூடுதல் தெம்பு கொடுத்திருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு கேட்கிறார் செந்தில்நாதன். அமைச்சர்கள் தொடங்கி சாதாரண பேச்சாளர் வரை அனைவரும் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சனம் செய்வதைப் பெரும்பாலான மக்கள் ரசிப்பதால், செந்தில்நாதனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது. அதே நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தம்பிதுரை மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரைப் பிரசாரம் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டது அ.தி.மு.க தலைமை. தற்போது அ.தி.மு.க ஓர் ஓட்டுக்கு 3,000 ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. தி.மு.க-வின் வியூகத்தைப் பொறுத்து, அடுத்தகட்டமாக ஓட்டுக்கு 6,000 ரூபாய்வரைகூடக் கொடுக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் பி.ஹெச்.ஷாகுல் ஹமீது, ஒரு காலத்தில் செந்தில் பாலாஜியின் நிழலாக வலம் வந்தவர். அதனால், செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி. செந்தில் பாலாஜியின் வியூகங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட முடியும் என்பதற்காகத்தான் இவருக்கு சீட் கொடுத் திருக்கிறார் தினகரன். அதோடு, தொகுதியில் குறிப்பிட்ட அளவுள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளையும் இவரால் பெறமுடியும் என்பதும் ஒரு காரணம். அதை நிரூபிக்கும் வகையில், இஸ்லாமியர்களைத் தன் பக்கம் இழுத்து வருகிறார் ஷாகுல் ஹமீது. ‘நாம் தோற்றாலும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுவிடக் கூடாது’ என்பதை அடிப்படையாக வைத்துச் செயல்பட்டு வருகிறார்கள் அ.ம.மு.க-வினர். ‘செந்தில் பாலாஜியின் துரோகத்தைப் பாரீர்’ என டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அனைவரும் பேசுவதை வாக்காளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஓர் ஓட்டுக்கு 3,000 ரூபாய் வரை கொடுப்பதற்கு அ.ம.மு.க-வும் தயாராகிவிட்டது. ஈசநத்தம் உள்ளிட்ட சில பகுதிகளில் வெற்றிகரமாகப் பணப் பட்டுவாடா முடிந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

ஸ்டாலினிடம் தன்னை நிரூபித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. ‘எக்காரணம் கொண்டும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுவிடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் செந்தில்நாதனும் ஷாகுல் ஹமீதும். அதனால் அரவக்குறிச்சியில் ஆறாய் ஓடுகிறது பணம்!

- துரை வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்